இன்று முதல் மதுரை – சிங்கப்பூர் இடையே மீண்டும் விமான சேவை – பயணிகள் மகிழ்ச்சி!

flights

மதுரைசிங்கப்பூர் இடையேயான நேரடி விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடக்கம்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக சர்வதேச விமான சேவைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனால்,தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது.

இந்நிலையில்,கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டு இருந்த மதுரைசிங்கப்பூர் இடையேயான நேரடி விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி,சிங்கப்பூர் நேரப்படி மாலை 5 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு மாலை 6.40 மணிக்கு மதுரை வந்தடையும்.அதைப்போல மதுரையிலிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கு விமானம் சிங்கப்பூர் சென்றடைகிறது.

மேலும்,இன்று முதல் வாரத்தில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் மதுரைசிங்கப்பூர் இடையே ஏர் இந்தியா விமானம் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மதுரை-சிங்கப்பூர் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடங்கி இருப்பது விமானப் பயணிகள் மத்தியில்  மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கோயம்பேட்டில் தீப்பிடித்து எரிந்த அரசுப்பேருந்து ….!

கோயம்பேட்டில் அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது, பயணிகள் குறைவாக இருந்ததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து கோயம்பேட்டில் வைத்து திடீரென தீ பிடித்து இருந்துள்ளது. முன்னதாக சாலையோரம் சென்ற மக்கள் பேருந்தில் இருந்து கரும்புகை வந்ததை ஓட்டுனருக்கு தெரிவித்துள்ளனர். இதனை சுதாரித்து கொண்ட பயணிகள் பேருந்தில் இருந்து உடனடியாக பேருந்திலிருந்து கீழே இறங்கியுள்ளனர்.

அதன் பின் பேருந்தில் மளமளவென்று தீ பேருந்தில் பரவியுள்ளது. பயணிகள் குறைவாக இருந்ததால், உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதிக்கு தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பனி நடைபெற்று வருகிறது. இந்த தீ விபத்துக்கான கரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜூன் மாதத்தில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை சதவிகிதம் உயர்வு…!

Flight

ஜூன் மாதத்தில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 42% உயர்வு.

நாடு முழுவதும் கொரோனா  வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. மேலும் இந்த கொரோனா பாதிப்பு பல்வேறு துறைகளில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்லவேண்டும். அந்த வகையில் விமானப் போக்குவரத்துத் துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த மே மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவிய நிலையில் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 63 சதவீதம் வரை குறைந்து இருந்தது. தற்போது உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக விமான பயணிகள் இருக்கை கட்டுப்பாடு 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில், கடன் தர மதிப்பீட்டு முகமையான இக்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜூன் மாதம் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 29 முதல் 30 லட்சமாக இருக்கும் என்றும், கடந்த மே மாதத்தின் 19.8 லட்சம் பயணிகளுடன் ஒப்பிடும்போது 41 முதல் 42 சதவீதம் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விமான நிறுவனங்களின் இருக்கை கொள்ளளவும் கடந்த ஆண்டு ஜூனுடன் ஒப்பிடும்போது 46 சதவீதம் உயர்ந்துள்ளது என்றும், பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது, கொரோனா தொற்று குறைந்து வருவதை நிரூபிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான பணிப்பெண்ணின் முகத்தில் குத்தி, பல்லை உடைத்த பயணி – வைரல் வீடியோ உள்ளே!

aeroplanae

விமானம் தரையிறங்கும் போது சீட் பெல்ட் அணிய சொல்லியதால் விமான பணிப்பெண்ணின் முகத்தில் குத்தி பல்லை உடைத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாஷிங்டனில் தென்மேற்கு ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சாக்ரமெண்டோவிலிருந்து சான்டியாகோ சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றுள்ளது. அப்பொழுத விமானம் தரை இறங்க தயாராகும் போது விமான பணிப்பெண்பயணிகளிடம் விமானம் தரையிறங்குவதற்கு தயாராக உள்ளதால் பயணிகள் தங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அப்பொழுது விமானத்தில் இருந்து 28 வயது உடைய  பெண் பயணி ஒருவர் பெண் விமான பணிப்பெண்ணின் முகத்தில் ஓங்கி குத்தியுள்ளார்.

தடுக்க முயன்ற மற்ற பெண்களையும் அந்த பெண் மிரட்டியதால், அனைவரும் அமைதியாக இருந்துள்ளனர். இருப்பினும் அருகில் இருந்த ஒரு பயணி இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் விமான பணிப்பெண்ணின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்தப் பெண் தனது இரண்டு பற்களை இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியதை அடுத்து பலரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விமானம் சாண்டியாகோ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும் விமானப் பணிப்பெண்ணை தாக்கிய பெண்மணியை போலீசார் விமானத்தில் இருந்து வெளியேற்றி கைது செய்துள்ளனர். இதோ அந்த வீடியோ,

ரயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்கு பயந்து மக்கள் தப்பி ஓட்டம்-அசாம்

அசாமில் கொரோனா சோதனையைத் தவிர்ப்பதற்காக ஜாகிரோட் ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் தப்பி ஓட்டம்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டி வரும் நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

ஆனால் இதனை பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாத மக்கள் பலர் இன்னும் பயந்து எந்த வித பரிசோதனையோ அல்லது தடுப்பூசியை போட்டுக் கொள்வதற்கோ முன் வர மறுக்கின்றனர்.

இதனையடுத்து திங்கள்கிழமை (மே 24) அசாம் மாநிலத்தில் குவஹாத்தி நகரில் கொரோனா சோதனையிலிருந்து தப்பிக்க ரயில் நிலையத்திலிருந்து மக்கள் தப்பி ஓடிய வீடியோ பதிவு சமூக வளைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

அதில் குவஹாத்தி நகரில் உள்ள ஜாகிரோட் ரயில் நிலையத்திலிருந்து கிட்டத்தட்ட 500 பயணிகள் கொரோனா பரிசோதனைக்கு பயந்து தப்பி ஓடியுள்ளனர்.  அதாவது கன்னியாகுமரி-திப்ருகார் விவேக் எக்ஸ்பிரஸிலிருந்து இறங்கிய பயணிகளின் பெரிய கூட்டம் கொரோனா சோதனைக்கு பயந்து ரயில் நிலையத்திலிருந்து தப்பி ஓடியது.

மேலும் அதிகாரிகள் முயற்சித்து கிட்டத்தட்ட 170 பேரைக் கண்டுபிடித்தனர் அவர்களை பரிசோதித்ததில் 14 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டது.

அதில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவர்.அதன்பின் போலிசார் அரசின் கொரேனா வழிகாட்டுதல்களை மீறியதற்காக ஜாகிரோட் காவல் நிலையத்தில் ஐபிசி மற்றும் அசாம் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மக்கள் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

மூட நம்பிக்கையால் விமான இயந்திரத்தில் நாணயங்களை வீசிய பயணி – விமானத்தை ரத்து செய்த சீனா!

aeroplanae

பாதுகாப்பாக பயணம் செய்ய முடியும் என அதிர்ஷ்டத்திற்க்காக விமான இயந்திரத்தில் 6 நாணயங்களை பயணி ஒருவர் வீசியதால் சீனாவின் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

விமான இயந்திரத்திற்குள் நாணயத்தை வீசுவதால் சென்றடைய வேண்டிய இடத்திற்குப் பாதுகாப்பாக சென்றடைய முடியும் எனவும், நல்ல அதிர்ஷ்டம் எனவும் நினைத்து பலர் தங்கள் மூடநம்பிக்கையால் இயந்திரத்திற்குள் நாணயங்களை வீசி விடுகின்றனர். இதனால் பல நேரங்களில் சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தான் அதிகம் உள்ளது. ஆனால் மூட நம்பிக்கை கொண்ட மக்கள் பலரும் தொடர்ச்சியாக செய்து கொண்டுதான் இருக்கின்றனர். கிழக்கு சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் இருந்து தென் சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள குவாங்சி பெய்ப்பு  வளைகுடாவிற்கு விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்துள்ளது.

அப்பொழுது அந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் விமானத்தின் இயந்திரத்தில் ஆறு நாணயங்களை வீசியுள்ளார். பாதுகாப்பாக செல்ல வேண்டுமென மூடநம்பிக்கையில் நாணயங்களை வீசிவிட்டு அங்கு நின்று பிரார்த்தனை செய்துள்ளார். உடனடியாக விமானத்தை ரத்து செய்துவிட்டு விமானத்தில் பயணிக்கும் 248 பயணிகளையும் கீழே இறக்கி விட்டுள்ளனர். மேலும் விமான இயந்திரத்துக்குள் நாணயத்தை வீசிய பயணியையும் போலீசார் தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர் இவரது மூட நம்பிக்கை காரணமாக தற்போது அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் அவருடன் சேர்த்து 148 பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சரக்கு விமானமாக மாறிய ஸ்பைஸ் ஜெட் பயணிகள் விமானம் .!

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏப்ரல்  மாதம் இறுதி வரை விமானப்போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால்  அனைத்து பயணிகள் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதையெடுத்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தனது பயணிகள் விமானத்தை சரக்கு விமானமாக மாற்றியுள்ளது .ஸ்பைஸ் ஜெட் விமானம் டெல்லியில் இருந்து சென்னைக்கு அவசர தேவைக்கான 11 டன்கள் பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்கிறது. பயணிகள் அமரும் இருக்கைகளில் சரக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஊரடங்கு உத்தரவு காலம் முடியும் வரை இந்த பயணிகள் விமானம்  பயன்படுத்தப்படும் என ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

விமான நிலையம் வந்த சீன பயணி.! திருப்பி அனுப்பிய சுகாதாரத்துறை.!

  • உலகெங்கும் கொரோனா வைரஸ் பீதியில் உள்ள நிலையில், ராமேஸ்வரம் செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த சீன பயணி ஒருவரை சந்தேகம் அடைந்த போலீசார், மருத்துவ பரிசோதனை செய்து வைரஸ் இல்லையென்றாலும், அரசின் அறிவுருத்தலின் அவரை திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

சீனாவில் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பல நகரங்களில் பரவி நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதன் விளைவு காரணமாக உலகநாடுகள் அனைத்தும் சர்வேதேச விமான நிலையங்களில் சீனாவில் இருந்து வரும் பயணிகளை தீவிர பரிசோதனை செய்ததுக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள். இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால் சீனாவில் இருந்து வருபவர்களுக்கு தற்போது அனுமதி இல்லை என்று அறிவித்தது. உலகெங்கும் கொரோனா வைரஸ் பீதியில் உள்ள நிலையில், சீனாவை உலக நாடுகள் தனிமை படுத்தியுள்ளன. அந்த வகையில்

சீனாவின் அன்கியுன்ங் மாகாணத்தில் 42 வயதான வு சென் சூ என்பவர் ஆசிரியராக பணி புரிகிறார். இவர், கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி விமானம் மூலம் கொல்கத்தா வந்துள்ளார். பின்னர், பல்வேறு இடங்களில் பார்வையிட்டு இறுதியாக ராமேஸ்வரம் செல்வதற்கு நேற்று இரவு  (சனிக்கிழமை) மதுரை விமான நிலையம் வந்துள்ளார். இவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த மண்டபம் சுகாதாரத்துறையினர், போலீஸார் உதவியுடன் அவரை சோதனை செய்தனர். அப்போது இவர் சீனாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்ததையடுத்து, போலீசார் உதவியுடன் மண்டபம் வட்டார சுகாதார அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோர் மதுரை விமான நிலையத்தில் உள்ள மருந்துவ குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில், வு சென் சூ வை சுகாதர குழுவினர் தீவிர பரிசோதனை செய்து, உடனடியாக அவரை சென்னைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மருத்துவ குழுவினர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இல்லையென்றாலும், இந்திய அரசு அறிவுருத்தலின் அங்கிருந்து உடனடியாக அவர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிகழ்வால் மதுரை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

விமான என்ஜினில் நாணயத்தை வீசிய பயணி பின்னர் நடந்த கொடுமை.!

  • முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்ய இருந்ததால் பயணம் சிறப்பாக அமைய வேண்டும் என கடவுளை வேண்டி நாணயங்களை என்ஜினில் வீசியதாக கூறினார்.
  • இதனால் அந்த பயணிக்கு இந்திய மதிப்பில் ரூ.12 லட்சத்து 32 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

சீனாவின் அன்ஹூய் மாகாணத்தில் சார்ந்தவர்  லூ சாவோ(28). இவர் விமானத்தில் பயணம் செய்ய அங்கு உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று உள்ளார். அப்போது விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்த போது  லூ சாவோ திடீரென  ஒரு நாணயங்களை எடுத்து விமானத்தின் என்ஜினுக்குள் தூக்கி எறிந்தார்.

இதனால்  விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டது. பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக இறங்கினர்.இதையடுத்து விமானத்தை பரிசோதனை  செய்ததில்  என்ஜின் சேதம் அடைந்ததால்  பயணிகள் அனைவரும் வேறுஒரு  விமானத்தின் மூலம்  அனுப்பி வைக்கப்பட்டனர்.

பின்னர் லூ சாவோ போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில்  முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்ய இருந்ததால் பயணம் சிறப்பாக அமைய வேண்டும் என கடவுளை வேண்டி நாணயங்களை என்ஜினில் வீசியதாக கூறினார்.

இதனால் அவருக்கு  இந்திய மதிப்பில் ரூ.12 லட்சத்து 32 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த அபராத தொகையை சேதம் அடைந்த “லக்கி ஏர்” விமான நிறுவனத்திற்கு கொடுக்கவேண்டும் என நீதிபதி கூறினார்.

ஓடுபாதையை விட்டு ஆற்று கரையில் மோதிய விமானம்..! கதறிய பயணிகள்..!

அமெரிக்காவின் அலாஸ்கா  மாகாணத்தில் இருந்து அங்கோரேஜ் என்ற இடத்திலிருந்து உனாலஸ்கா தீவிலுள்ள டச்சு ஹார்பருக்கு பென் ஏர்வேல் விமானம் சென்றது. இந்த விமானத்தில் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் உட்பட 38 பேர் பயணம் செய்தனர்.
இந்த விமானம் டச்சு ஹார்பர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது நிலைதடுமாறி ஓடுபாதையை தாண்டி சென்றது. இதனால் அருகிலிருந்த ஆற்றின் கரையில் வேகமாக மோதி நின்றது. நல்லவேளையாக விமானம் ஆற்றுக்குள் செல்லாததால் விமானத்தில் இருந்த அனைவரும் உயிர்தப்பினர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விமான நிலைய ஊழியர்களும் , தீயணைப்பு படை வீரர்களும்  விமானத்தில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்துக்கான காரணத்தை விசாரணை நடத்தி வருகின்றனர்.