உள்ளாட்சி தேர்தலில் அதிமுக உடனான கூட்டணித் தொடரும் – ஜி.கே.வாசன்..!

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக உடனான கூட்டணித் தொடரும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் நடத்தி, அதன் முடிவுகளை அறிவிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், கே.என்.நேரு, ஊராட்சிகள் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோருடன் முதல்வர் ஆலோசனை செய்தார். இதற்கிடையில், அனைத்து … Read more

திமுக கடந்த தேர்தலில் வடிகட்டிய பொய்களை கூறி ஏமாற்றியது – ஜி.கே.வாசன்

மக்களைக் குறித்து சற்றும் கவலைப்படாத கட்சி தான் திமுக என்று ஜி.கே.வாசன்  விமர்சித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள், திருவையாறு தொகுதியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து, பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கடந்த தேர்தலில் வடிகட்டிய பொய்களை கூறி தாய்மார்களை ஏமாற்றியது தான் திமுக என்று குற்றம் சாட்டினார். திமுக சட்டமன்றத்திற்குள் செல்லும் போது உள்ளே ஒரு கால், வெளியே ஒரு கால் என உள்ளே வெளியே என இருந்து, இறுதியில் … Read more

அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தமாகா கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!

அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் முக்கிய கட்சிகளான பாமக, பாஜக கட்சிகளுடன் சுலபமான முறையில் தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தாகி, வேட்பாளர் பட்டியலும் வெளியிட்ட நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் பல முறை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியும், தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. தமிழ் மாநில காங்கிரஸ் தரப்பில் 12 இடங்கள் கேட்கப்பட்ட நிலையில், இறுதியாக நேற்று அக்கட்சிக்கு 6 தொகுதிகள் … Read more

#ElectionBreaking: அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு.!

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் முக்கிய கட்சிகளான பாமக, பாஜக மற்றும் சிறிய கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகி, தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியலே வெளியிடப்பட்டது. இதனிடையே, அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் பல முறை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் கட்சி நிர்வாகிகளுடன் இன்று … Read more

அதிமுக – த.மா.கா இடையே தொடரும் இழுபறி…! இன்று அவசர ஆலோசனை…!

அதிமுக – த.மா.கா இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து   ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் கட்சியினருடன் ஜி.கே.வாசன் அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் என மிகவும் தீவிரமாக  செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அதிமுக – த.மா.கா இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து   ஆழ்வார்பேட்டையில் உள்ள … Read more

#ELECTIONBREAKING: அதிமுக – தமாகா தொகுதி பங்கீடு தொடர்பாக 4ம் கட்ட பேச்சுவார்த்தை.!

அதிமுக – தமாகா இடையே தொகுதி பங்கீடு குறித்து நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை ஒரு சில கட்சிகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அதிமுக – தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடையே மூன்று கட்டங்கள் பேச்சுவார்த்தை நடத்தியும், சுலபமான முடிவு எட்டப்படவில்லை. தமாகா தரப்பில் 12 இடங்கள் கேட்கப்பட்ட நிலையில், அதிமுக தரப்பில் 3 முதல் 4 இடங்களை ஒதுக்க முன்வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து … Read more

அதிமுகவுடன் தொடர்ந்து இழுபறி – இன்று இறுதியாகும் தொகுதி பங்கீடு – ஜிகே வாசன்

சென்னை ஆழ்வார்பேட்டை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஜிகே வாசன் ஆலோசனை நடத்தி வருகிறார்.  அதிமுக கூட்டணியில் பாமக 23, பாஜக 20 தொகுதிகள் ஒதுக்கிய நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து 3 கட்டங்களாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தரப்பில் 12 தொகுதிகள் கேட்கப்பட்ட நிலையில், அதிமுக 3 முதல் 4 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்ததாக கூறப்படுகிறது. இந்தத் தொகுதிகளில் … Read more

சைக்கிள் சின்னத்தில் போட்டி., த.மா.கா.வுடன் அதிமுக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை.!

அதிமுக கூட்டணியில் த.மா.கா.வுடன் தொகுதி பங்கீடு குறித்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் த.மா.கா.வுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது அதிமுக. அதிமுக சார்பில் கேபி முனுசாமி, வேலுமணி பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர். சைக்கிள் சின்னத்தில் போட்டியிட த.மா.கா 12 தொகுதிகள் கேட்ட நிலையில், இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் அதிமுக ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய த.மா.கா.தலைவர் ஜி.கே. வாசன், சைக்கிள் சின்னத்தை பெறுவதே … Read more

சசிகலா வருகையால் அதிமுகவில் பாதிப்பு ஏற்படாது – ஜி.கே.வாசன் கருத்து

சசிகலாவின் வருகையால் அதிமுகவில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை ஆழ்வார்பேட்டை தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜிகே வாசன், தற்போது உள்ள நிலை அதிமுகவின் வெற்றியை உறுதி செய்துகொள்ளும் வகையில், தமிழகத்தில் பிரகாசமாக இருக்கிறது. பொதுமக்கள் அதிமுகவின் வளர்ச்சி திட்டங்களால் பயன் பெற்றிருக்கிறார்கள். அதிமுக ஆட்சியை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எனவே, இது தொடரும் ஆட்சி மீண்டும் வெற்றி பெற்று வரும். சசிகலாவின் … Read more

கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமிக்கு முழு ஆதரவு – ஜி.கே.வாசன் அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் உள்ள தமாகா ,தற்போதைய முதலமைச்சர் பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி அதிகாரபூர்வமாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.நீண்ட நாட்களாக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து முடிவு எடுப்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில் பல கட்ட ஆலோசனைக்கு பின்னர் பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக … Read more