#ELECTIONBREAKING: அதிமுக – தமாகா தொகுதி பங்கீடு தொடர்பாக 4ம் கட்ட பேச்சுவார்த்தை.!

அதிமுக – தமாகா இடையே தொகுதி பங்கீடு குறித்து நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை ஒரு சில கட்சிகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அதிமுக – தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடையே மூன்று கட்டங்கள் பேச்சுவார்த்தை நடத்தியும், சுலபமான முடிவு எட்டப்படவில்லை. தமாகா தரப்பில் 12 இடங்கள் கேட்கப்பட்ட நிலையில், அதிமுக தரப்பில் 3 முதல் 4 இடங்களை ஒதுக்க முன்வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் தொடர்ந்து தொகுதி பங்கீடு இழுபறி நீடித்து வருகிறது. இதனிடையே, அதிமுகவில் இருந்து தேமுதிக விலகியதால் தமாகாவுக்கு 5 முதல் 7 இடங்களை வரை ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இன்று தொகுதி பங்கீடு இறுதியாகும் என தமாகா தலைவர் ஜிகே வாசன் தெரிவித்திருந்தார். தமாகாவுடன் அதிமுக பேசுவதில் எந்தவித தயக்கமும் இருக்காது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய அதிமுக – தமாகா இடையே நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதிமுக – தமாகா பேச்சுவார்த்தை அமைச்சர் தங்கமணி இல்லத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்