இவர்களை குறித்து ஆலோசிக்கவில்லை! அதிமுக தலைமையில்தான் கூட்டணி – ஜெயக்குமார்

அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம் என ஜெயக்குமார் பேட்டி. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்ளியோர் பங்கேற்றனர். மக்களவை தேர்தலையொட்டி பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் கூட்டணி, அதிமுக வளர்ச்சி பணிகள், திமுக அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து ஆலோசித்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், … Read more

மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி – செல்லூர் ராஜூ

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் விடியா அரசு தடுமாற்றம் என செல்லூர் ராஜூ விமர்சனம். மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ , 2024 மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி என்பதை தேர்தல் நேரத்தில் அதிமுக முடிவு செய்யும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் விடியா அரசு தடுமாற்றத்தில் உள்ளது. வருமானவரி, அமலாக்கத்துறை சோதனைக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அஞ்சுகிறார். … Read more

கடவுளே! திமுக – காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிட்டால் இன்னமும் பெண்களை இழிவுபடுத்துவார்கள் – பிரதமர் மோடி உரை

முதல்வரையும் தாயாரையும் இழிவுபடுத்தி பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன் என்று பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேசிய ஜனநாய கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மேலும் இந்த கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு வெள்ளி வேலை நினைவு பரிசாக மாநில தலைவர் எல் முருகன் வழங்கினார். இதனைதொடந்து பொதுக்கூட்டத்தில் வெற்றி வேல்- வீரவேல் என முழக்கமிட்டு … Read more

பாமகவை எதிர்த்து 23 தொகுதிகளில் பிரசாரம் – காடுவெட்டி குரு மகள் அறிவிப்பு

சட்டப்பேரவை தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிடும் பாமகவை எதிர்த்து பிரச்சாரம் செய்யவுள்ளதாக காடுவெட்டி குரு மகள் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் பாமக வரும் சட்டமன்ற தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதற்கான வேட்பாளர் பட்டியல் வெளியிட்டதை தொடர்ந்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை, 23 தொகுதிகளில் பாமகவை எதிர்த்து பிரச்சாரம் செய்யப் போவதாக தெரிவித்துள்ளார். … Read more

#ElectionBreaking: பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்தி வைப்பு.!

அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் கடந்த 12ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த வேட்புமனு தாக்கல், நேற்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது. சட்டசபைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளில் உள்ள தேர்தல் அலுவலகங்களில் அந்தந்த தொகுதிகளுக்கான வேட்புமனுக்கள் பரிசீலினை செய்யப்பட்டு வருகிறது. வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் இணைக்கப்பட்ட ஆவணங்கள், முன்மொழிபவர்களின் பெயர்கள் … Read more

திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பே இருக்காது – அன்புமணி ராமதாஸ்

திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பே இருக்காது என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.பி.கந்தனை ஆதரித்து பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று எந்த பிரச்னையும் இல்லாமல் முதல்வர் பழனிசாமி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பே இருக்காது. திமுக … Read more

#ElectionBreaking: எஞ்சிய 3 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக.!

சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜகவில் மீதமுள்ள 3 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், கடந்த 14ம் தேதி 17 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டிருந்தது. அதன்படி, தாராபுரம் (தனி ) – எல்.முருகன், கோவை தெற்கு – வானதி சீனிவாசன், காரைக்குடி – ஹெச் .ராஜா, அரவக்குறிச்சி – அண்ணாமலை, நாகர்கோவில் – எம்.ஆர்.காந்தி, ஆயிரம் விளக்கு – குஷ்பு, துறைமுகம் – … Read more

தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு – சிடி ரவி

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நாளை வெளியிடப்படும் என சிடி ரவி தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் நீண்ட இழுபறிக்கு பிறகு பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து, அதறகான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், கடந்த 10ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து 20 தொகுதிகளிள் போட்டியிடும் வேட்பாளர்களை இறுதி செய்ய பாஜக மாநில தலைவர் எல் முருகன் டெல்லி சென்றுள்ளார். ஆகையால், தேர்தலில் போட்டியிடும் … Read more

பாஜக வேட்பாளர் பட்டியலே இன்னும் வெளியாகல., ஆனா வேட்புமனு தாக்கல் செய்த நயினார் நாகேந்திரன்.!

பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக பாஜக மாநில தலைவர் எல் முருகன் தலைமையை சந்திக்க டெல்லி சென்றுள்ளார். ஆகையால், பாஜகவின் வேட்பாளர் பட்டியல் இன்று இரவு அல்லது நாளை கண்டிப்பாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் இன்று காலை சரியாக 11 மணியளவில் … Read more

அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தமாகா கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!

அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் முக்கிய கட்சிகளான பாமக, பாஜக கட்சிகளுடன் சுலபமான முறையில் தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தாகி, வேட்பாளர் பட்டியலும் வெளியிட்ட நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் பல முறை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியும், தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. தமிழ் மாநில காங்கிரஸ் தரப்பில் 12 இடங்கள் கேட்கப்பட்ட நிலையில், இறுதியாக நேற்று அக்கட்சிக்கு 6 தொகுதிகள் … Read more