அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தமாகா கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!

அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் முக்கிய கட்சிகளான பாமக, பாஜக கட்சிகளுடன் சுலபமான முறையில் தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தாகி, வேட்பாளர் பட்டியலும் வெளியிட்ட நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் பல முறை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியும், தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.

தமிழ் மாநில காங்கிரஸ் தரப்பில் 12 இடங்கள் கேட்கப்பட்ட நிலையில், இறுதியாக நேற்று அக்கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது.  இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஜி.கே.வாசன் ஆகியோர் கையெழுத்திட்டனர். இதனிடையே, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளில் தமாகாவை தவிர மற்ற கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டனர்.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, திரு.வி.க நகர் பிஎல் கல்யாணி, ஈரோடு கிழக்கு எம் யுவராஜ், லால்குடி டிஆர் தர்மராஜ், பட்டுக்கோட்டை என்ஆர் ரங்கராஜன், தூத்துக்குடி எஸ்டிஆர் விஜயசீலன், கிள்ளியூர் கேவி ஜூட் தேவ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்