FIFA WC 22:கத்தார் உலகக்கோப்பையில் விளையாடும் நேரத்தில் இங்கிலாந்து வீரர் வீட்டில் நுழைந்த துப்பாக்கி கொள்ளையர்கள்

இங்கிலாந்து கால் பந்தாட்ட வீரரான ரஹீம் ஸ்டெர்லிங் இங்கிலாந்தில்  உள்ள அவரது வீட்டில் துப்பாக்கியுடன் கொள்ளையர்கள் நுழைந்த நிலையில் பிரான்சுக்கு எதிரான காலிறுதிபோட்டிக்கி திரும்புவாரா என சந்தேகம் எழுந்துள்ளது.   இங்கிலாந்து முன்கள வீரர் ரஹீம் ஸ்டெர்லிங், ஞாயிற்றுக்கிழமை செனகலுக்கு எதிரான போட்டியில் விளையாடாமல் நாடு திரும்பியிருந்தார்.இப்போட்டியில் இங்கிலாந்து 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஸ்டெர்லிங்,குடும்பத்தினர் வீட்டிலிருந்த போது ஆயுதமேந்திய கொள்ளையர்கள் வீட்டின் உள்ளே நுழைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இங்கிலாந்து சென்ற அவர் … Read more

“ஒரு போதும் கற்பனை செய்யவில்லை” – கண்ணீர் மல்க விடைபெற்ற லியோனல் மெஸ்ஸி..!

பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறுவதை கண்ணீர் மல்க லியோனல் மெஸ்ஸி உறுதிப்படுத்தியுள்ளார். அர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி(Lionel Messi) பார்சிலோனா கால்பந்து அணிக்காக விளையாடி வந்தார்.இந்த நிலையில் பார்சிலோனா அணியுடன் மெஸ்ஸி செய்து இருந்த ஒப்பந்தம் கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவடைந்தது. மெஸ்ஸி விளையாட்டமாட்டார்: இதனால், மேலும் 5 ஆண்டுகள் பார்சலோனா அணிக்கும், மெஸ்ஸிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தநிலையில்,நிதி மற்றும் பொருளாதரக் கட்டுப்பாடுகள் காரணமாக ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்று பார்சிலோனா அணி … Read more

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா!

கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனாத்தொற்று உறுதி செய்யப்ப்டுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. உலகின் முன்னனி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. போர்ச்சுகள் கால்பந்து அணி கேப்டனாக இருக்கும் ரொனால்டோ கிளப் அணிகளுக்கு இடையேயான ஐரோப்பிய தேசிய லீக் தொடரில் யுவண்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் பிரான்ஸ் அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற போட்டிக்குப் பின் அவருக்கு கொரோனா பரிசோதனைச் செய்யப்பட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் தன்னை தனிமைப்படுத்தி … Read more

கால் பந்தில் கலக்கி விட்டு சினிமாவில் களமிறங்கும் ரொனால்டோ.!

சமீபத்தில் துபாயில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ரொனால்டோ கலந்து கொண்டார். அப்போது பேசிய ரொனால்டோ, ஓய்வு பெற்ற பின்னர் சினிமாவில் நடிக்க விருப்பம் இருப்பதாகவும் , அதனால் ஹாலிவுட் படங்களில் நடிக்க திட்டம் உள்ளதாக கூறினார்.  போர்ச்சுகல் நாட்டின் 34 வயது ஆன கால்பந்து வீரரான ரொனால்டோ உலகின் மிக சிறந்த வீரராக வலம் வருகிறார்.இவர் ஒவ்வொரு போட்டிலும் கலந்து கொள்ளும் போது புதிய சாதனையை படைப்பார் அல்லது மற்றவர்களின் சாதனையை முறியடிப்பார். இதனால் பல்வேறு சாதனைகளுக்கு … Read more

சென்னை -ஒடிசா மோதல்.! இரண்டாவது வெற்றியை ருசிக்க போவது யார் ..?

10 அணிகளுக்கு இடையிலான ஆறாவது இந்தியன் சூப்பர் லீக்( ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி  பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இன்று சென்னை நேரு மைதானத்தில் 26 வது லீக் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் சென்னை எப்சி மற்றும் ஒடிசா எப்சி அணிகள் மோதுகின்றன. இரண்டு முறை சாம்பியனான சென்னை எப்சி இதுவரை 5 போட்டிகளில் ஒரு போட்டியில் டிராவும் , மூன்று போட்டியில் தோல்வியை சந்தித்தது. கடந்த 25-ம் தேதி  ஐதராபாத் அணியுடன் விளையாடிய போட்டியில் … Read more

ரொனால்டோவிற்கு இணையாக ஃபிபா சிறந்த வீரர் விருது பெற்ற மெஸ்ஸி..!

கால்பந்து வீரர்களில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் ஃபிபா சார்பாக சிறந்த வீரருக்கான விருது கொடுக்கப்பட்டு வருகிறது.இந்த வருடம் அந்த விருதை நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸிக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. இவர் 46 வாக்குகள் பெற்று வான் டிஜிக் மற்றும் ரொனால்டோவை பின்னுக்கு தள்ளி சிறந்த வீரருக்கான விருதை பெற்றார்.இதன் மூலம் லயோனல் மெஸ்ஸி 6- வது முறையாக இந்த விருதை பெற்று உள்ளார்.மேலும்  நட்சத்திர வீரர் ரொனால்டோவும் 6 முறை இந்த விருதை பெற்று உள்ளார் … Read more

FIFA2018: 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது குரேஷியா..,

21வது உலகக்கோப்பைக்கான  கால்பந்த்து தொடர் ரஷியாவில் ஜூன் 14 ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது.அதில் 32 அணிகள் பங்குபெற்றுள்ளன.தற்போது  அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.லீக் ஆட்டங்கள் கால் இறுதி போட்டிகள் முடிவுற்ற நிலையில் தற்போது அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது.இறுதி போட்டி ஜூலை 15தேதி நடைபெற உள்ளது. அதிர்ச்சி அளித்த அணிகள் இந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அதிரிச்சி அளிக்கும் வகையில் சில அணிகள் கால் இறுதி போட்டிக்கு தகுதியாகாமல் லீக் ஆட்டங்களில் வெளியானது.குறிப்பாக உலக அளவில் தலைசிறந்த வீரர்களாக விளங்கும் ரொனால்டோ … Read more