ரொனால்டோவிற்கு இணையாக ஃபிபா சிறந்த வீரர் விருது பெற்ற மெஸ்ஸி..!

கால்பந்து வீரர்களில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் ஃபிபா சார்பாக சிறந்த வீரருக்கான விருது கொடுக்கப்பட்டு வருகிறது.இந்த வருடம் அந்த விருதை நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸிக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

இவர் 46 வாக்குகள் பெற்று வான் டிஜிக் மற்றும் ரொனால்டோவை பின்னுக்கு தள்ளி சிறந்த வீரருக்கான விருதை பெற்றார்.இதன் மூலம் லயோனல் மெஸ்ஸி 6- வது முறையாக இந்த விருதை பெற்று உள்ளார்.மேலும்  நட்சத்திர வீரர் ரொனால்டோவும் 6 முறை இந்த விருதை பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
murugan