FIFA2018: 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது குரேஷியா..,

21வது உலகக்கோப்பைக்கான  கால்பந்த்து தொடர் ரஷியாவில் ஜூன் 14 ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது.அதில் 32 அணிகள் பங்குபெற்றுள்ளன.தற்போது  அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.லீக் ஆட்டங்கள் கால் இறுதி போட்டிகள் முடிவுற்ற நிலையில் தற்போது அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது.இறுதி போட்டி ஜூலை 15தேதி நடைபெற உள்ளது.

அதிர்ச்சி அளித்த அணிகள்

இந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அதிரிச்சி அளிக்கும் வகையில் சில அணிகள் கால் இறுதி போட்டிக்கு தகுதியாகாமல் லீக் ஆட்டங்களில் வெளியானது.குறிப்பாக உலக அளவில் தலைசிறந்த வீரர்களாக விளங்கும் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகியோரின் அணிகள் லீக்  ஆட்டங்களிலே வெளியானது.ரொனால்டோ பொர்ஜுகள் அணிக்கும் மெஸ்ஸி அர்ஜென்டினா அணிக்கும் விளையாடி வருகின்றனர்.இந்த இரு நாடுகளும் வெளியானது அந்த இரு நாடுகளின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அரையிறுதி போட்டி 

32 அணிகள் கலந்து கொண்ட இந்த உலகக்கோப்பை போட்டியில் படிப்படியாக குறைந்து தற்போது அரையிறுதியில் 4 அணிகள் மட்டும் உள்ளன. இதில் முதல் அரையிறுதி போட்டியில் பெல்ஜியம் பிரான்ஸ் அணிகள் மோதின அதில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று இறுதி போட்டியில் உள்ளது.

மற்றொரு அரையிறுதி போட்டியில் மாஸ்கோவில் உள்ள மைதானத்தில்  குரோசியா இங்கிலாந்து அணிகள் மோதின.அதில் இங்கிலாந்து  அணி முதல் கோல் அடித்து ரசிகர்களை சந்தோசப்படுத்தியது.இங்கிலாந்து அணியின் திரிப்பர்(Trippier)5 வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து ரசிகர்களை ஆரவாரப்படுத்தினார்.

அதன் பின் குரேசியா வீரர் இவன் பெரிசிக் (Ivan Perisic’)68வது நிமிடத்தில் பதிலுக்கு கோல்  அடித்தார்.இதன் மூலம் இரண்டு அணிகளும் 1க்கு 1 என்று சமமாக இருந்தது. குறிப்பிட்ட நேரத்தில் இரண்டு அணிகளும் தலா  1 கோல்  அடித்திருந்ததால்  அதிக நேரம்(Extra Time ) கொடுக்கப்பட்டது.அதில் இரண்டு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை.996430856

அதன் பின் இரண்டாவது அதிக நேரம் கொடுக்கப்பட்டது.அதில் குரேசிய வீரர்  மண்டஸுகிக் (Mandzukic)109வது நிமிடத்தில் வெற்றிக்கான 2வது  கோல்  அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

ஆட்டநேர முடிவில் 2-1 என்ற வித்தியாசத்தில் குரேஷியா அணி இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள்  நுழைந்தது.

இறுதி போட்டியில் குரேஷிய அணி பிரான்ஸை ஜூலை 15 ஆம் தேதி எதிர்கொள்ள உள்ளது.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment