தந்தை வழியே நானும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜூனியர் மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு வெளியேறுகிறார்

கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜூனியர் தனது தந்தையின் வழியை பின்பற்றி மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு வெளியேறி மீண்டும் ரியல் மாட்ரிட் யூத் அகாடமியில் சேர்ந்துள்ளார் என்று ஸ்பெயினில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடியுள்ள ரொனால்டோ ஜூனியர் 20 ஆட்டங்களில் 50 கோல்களை அடித்துள்ளார்.இதற்கு முன்னர் அவர் ரியல் மாட்ரிட் இருந்து ஜுவென்டஸ் மற்றும் பின்னர் மான்செஸ்டர் கிளப்புகளில் விளையாடியுள்ளார். டிசம்பரில் ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட்டில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில் வரத்து மகனும் … Read more

700 கிளப் கோல்களை அடித்து வரலாறு படைத்த ரொனால்டோ!!

மான்செஸ்டர் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ, 700 கிளப் கோல்களை அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார். பிரீமியர் லீக் கால்பந்து தொடரில், எவெர்ட்டன் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் மான்செஸ்டர் அணிக்காக ரொனால்டோ அடித்த கோலின் மூலம் அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். 37 வயதான ரொனால்டோ தனது கால்பந்தாட்ட வரலாற்றில் 943 போட்டிகளில் விளையாடி 700 கோல்களை அடித்துள்ளார். ரொனால்டோ இதுவரை ஸ்போர்ட்டிங் கிளப் அணி, மான்செஸ்டர் யுனைட்டட் அணி, … Read more

ரெக்கார்டு….ஹாட்ரிக் கோல்;புதிய சாதனை படைத்த ரொனால்டோ!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ப்ரீமியர் லீக் கால்பந்து போட்டியில், மான்செஸ்டர்ஸ் யூனைட்டட் (manchester united) அணிக்காக கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடி வருகிறார். இந்நிலையில்,டோட்டன்ஹம் (Tottenham) அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில்,ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து கால்பந்து வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளார்.இதன்மூலம்,கிளப் போட்டிகள் உள்பட சர்வதேச கால்பந்து போட்டிகளில் இதுவரை 807 கோல்களை ரொனால்டோ அடித்து வரலாற்றில் முன்னணி கோல் அடித்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதுவரை கால்பந்து போட்டிகளில் 805 கோல்கள் அடித்திருந்த … Read more

மகனுக்கு பயிற்சியளிக்கும் ரொனால்டோ!

தனது மனுக்கும் கால்பந்து பயிற்சி அளித்து வரும் உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ. உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக வலம் வருபவர் போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 36 வயதான இவர் கால்பந்து விளையாட்டில் பல சாதனைகளை படைத்துள்ளார். கால்பந்தின் சிறந்த விருதான பலோன் டி’ஆர் ( தங்க கால்பந்து கோப்பை) விருதை 5 முறை வென்றுள்ளார். போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டனாகவும், மான்செஸ்டர் யுனைடட் அணியின் முன்னணி வீரராகவும் … Read more

கால்பந்தில் 800 கோல் அடித்த முதல் வீரர் ரொனால்டோ; எந்த அணிக்கு அதிக கோல் தெரியுமா..?

கால்பந்து வரலாற்றில் 800 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்தார். பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது பெயரில் மற்றொரு சாதனையை படைத்துள்ளார். 800 கோல்கள் அடித்த உலகின் முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். தற்போது அவர் 801 கோல்களை அடித்துள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஆர்சனலை வீழ்த்தியது. ஆட்டத்தின் 52வது நிமிடத்தில் பெனால்டி மூலம் முதல் கோலையும், … Read more

திரும்பி வந்துட்டேனு சொல்லு 12 ஆண்டுகளுக்கு பிறகு முதல் கோலை அடித்த ரொனால்டோ

பிரீமியர் லீக் கால்பந்துன் போட்டியின் இன்றைய போட்டியில்  மான்செஸ்டர் யுனைடெட் மற்றும்  நியூகேஸ்டில் இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் பாதியில் 45 ஆவது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனக்கான அதிரடி கோலை அடித்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு மான்செஸ்டர் அணிக்கான தனது தாகத்தை தீர்த்துள்ளார்.  

“Welcome Home”:மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ..!

இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகப் புகழ் பெற்ற கால்பந்து வீரரும்,போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டனுமான 36 வயதான கிறிஸ்டியானா ரொனால்டோ ஜுவென்டஸு அணியில் இருந்து விலகி இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணையாவுள்ளதாக தகவல் வெளியானது. இதனை,உறுதி செய்யும் விதமாக மான்செஸ்டர் யுனைடெட் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “Welcome Home” என்று பதிவிட்டுள்ளது. மேலும்,அவரை மீண்டும் அணியில் சேர்த்துகொள்வதில் அணி மகிழ்ச்சி … Read more

யூரோ 2020-இல் தங்க காலணியை வென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ..!

யூரோ 2020 கால்பந்து தொடரில் போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல்டன் பூட் என்ற தங்க காலணி விருதை வென்றுள்ளார். யூரோ 2020 கால்பந்து தொடரில் அதிக கோல்களை அடித்ததால் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு கோல்டன் பூட் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. யூரோ போட்டிகளில் முதன் முறையாக கோல்டன் பூட் விருதை ரொனால்டோ பெறுகிறார். இவர் யூரோ கால்பந்து தொடரில் ஒவ்வொரு தொடரிலும் ஒரு கோல் அடித்திருந்தார். மேலும், ஹங்கேரி மற்றும் பிரான்சுக்கு எதிராக … Read more

விண்வெளியிலிருந்து யூரோ கோப்பை கால்பந்து போட்டியை கண்டுகளித்த விண்வெளி வீரர்..!

யூரோ கோப்பை கால்பந்து போட்டியை சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து விண்வெளி வீரர் தாமஸ் பெஸ்கெட் கண்டுகளித்துள்ளார்.  நேற்று அதிகாலை யூரோ கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் மற்றும் போர்ச்சுக்கல் இடையே நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் 30 ஆவது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்து அணியை முன்னிலைக்கு தள்ளினார். பின்னர், பிரான்ஸ் வீரர் பென்சமே 2 கோல் அடித்து முன்னேறினார். இருந்தபோதிலும், 2ஆவது பாதி ஆட்டத்தின் போது ரொனால்டோ மீண்டும் ஒரு கோல் அடித்தார். … Read more

கோகோ கோலா பாட்டில்களை நீக்கிவிட்டு தண்ணீர் குடிக்க சொன்ன ரொனால்டோ..!

மேசையில் இருந்த கோகோ கோலா பாட்டில்களை எடுத்துவிட்டு தண்ணீர் குடிக்குமாறு கேட்டுக்கொண்ட ரொனால்டோ. யூரோ 2020 கால்பந்து தொடர்நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான போர்ச்சுகல் இன்று நடைபெறும் போட்டியின் முதல் ஆட்டத்தில் ஹங்கேரியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கு முன் நேற்று மாலையில் ரொனால்டோ பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்தார். அப்போது வந்தவுடன் இரு கோகோ கோலா குளிர்பான பாட்டில் அவருக்கு முன்னால் மேஜையில் வைக்கப்பட்டிருப்பதை பார்த்தார். உடனே முன்னால் இருந்த 2 கோலா பாட்டில்களை எடுத்துவிட்டு அதன் பிறகு … Read more