விவசாயிகளுக்கு இன்று ரூ.19,500 கோடி விடுவிக்கும்-பிரதமர் மோடி.!

இன்று பிரதமர் மோடி கிசான் திட்டத்தின் கீழ் 9.75 கோடி விவசாயிகளுக்கு ரூ.19,500 கோடி விடுவிக்கிறார். பிரதமர் மோடியால் கடந்த 2019-ஆம் ஆண்டு பிரதமரின் விவசாயிகள் சம்மான் நிதி (பிஎம் – கிசான்) தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 4 மாதங்களுக்கு ஒரு முறை, மூன்று தவணைகளில் தலா ரூ.2000 என வருடத்துக்கு ரூ.6000 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. இந்த நிலையில், பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை … Read more

வேளாண்மை தான் நாட்டுக்கு உயிராகவும், உடலாகவும் உள்ளது : மு.க.ஸ்டாலின்

வேளாண்துறைக்கு முக்கியத்துவம் தரும் வகையில், வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை திமுக அரசு தாக்கல் செய்ய உள்ளது. சென்னை தரமணி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில், கொரோனா தொற்று பின்னணியில் உணவு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்தல் தொடர்பான பன்னாட்டு கருத்தரங்கை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நாட்டுக்கு உயிராகவும், உடலாகவும் உள்ள வேளாண்மை துறைக்கு தமிழக அரசு முக்கியத்துவம் தருகிறது என தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், எம்.எஸ்.சுவாமிநாதனின் ஆலோசனைகளை … Read more

இரட்டை தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி…! ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்..!

கிருஷ்ணகிரியில், இரட்டை தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள புதூர் புங்கணை  ஊராட்சிக்குட்பட்ட, புதூர் கிராமத்தில் உள்ள சதீஷ் என்ற விவசாயி தனது 2 ஏக்கர் விவசாய நிலத்தில் பரம்பரையாக விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் இரண்டு பால் மாடுகளையும் வளர்த்து வருகிறார். அவர் வளர்த்த மாடிகளில் ஒன்று தாய்மை அடைந்த நிலையில், கன்று குட்டியை ஒன்றை ஈன்றுள்ளது. அந்த கன்றுக்குட்டி இரண்டு தலைகளுடன் பிறந்துள்ளது. கன்றுக்குட்டி நான்கு கண்கள், இரண்டு வாய் … Read more

கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு கடன் வழங்க லஞ்சம் கேட்டால் சிறை – அமைச்சர் செஞ்சி மஸ்தான்

கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு கடன் வழங்க லஞ்சம் கேட்டால் சிறையில் அடைக்கப்படுவார்கள். விழுப்புரம் மாவட்டத்தில், மாற்று கட்சியினர் 500-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சிறுபான்மையினர்  நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில், அவர்கள் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு கடன் வழங்க லஞ்சம் கேட்டால் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். திமுகவை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொண்டு, கட்சியில் இணைந்து வருவதாக … Read more

விவசாயி ஒருவர் அறுவை சிகிச்சைக்காக சேமித்த ரூ.2 லட்சத்தை துண்டாடிய எலிகள்…! உதவிக்கரம் நீட்டிய தெலுங்கானா அமைச்சர்…!

தெலுங்கானாவை சேர்ந்த விவசாயி ரெத்ய நாயக் என்பவர் அறுவை சிகிச்சைக்காக சேமித்து வைத்திருந்த பணத்தை எலிகள் துண்டாடியுள்ளது.  தெலுங்கானாவின் மகாபூப்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு காய்கறி விவசாயியான ரெத்ய நாயக் தனது வயிற்றுப்பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக, மிகவும் கஷ்டப்பட்டு ரூ.2 லட்சம் பணத்தை சேமித்துள்ளார். இந்த பணத்தை அவர் ஒரு பருத்தி பையில் போட்டு, அலமாரியில் சேமித்து வைத்துள்ளார். இந்த பணம் முழுவதையும் எலிகள் மென்று, துண்டாடி உள்ளது. இதனையடுத்து, அந்த விவசாயி இதுகுறித்து கூறுகையில், … Read more

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலத்தில் ஓ.என்.ஜி.சி குழாய் உடைந்து எண்ணெய் கசிவு!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிவகுமார் என்பவரின் விவசாய நிலத்தில் ஓ.என்.ஜி.சி குழாய் உடைந்து கச்சா எண்ணெய் கசிவு.  திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பனையூர் எனும் பகுதியில் குறுவை சாகுபடிக்கு தயாராகி வந்த சிவகுமார் என்பவரின் விவசாய நிலத்தில் உள்ள ஓஎன்ஜிசி எண்ணெய் குழாய் உடைந்து கச்சாஎண்ணெய் அதிக அளவில் வெளியேறி நிலத்தில் பரவியுள்ளது. இந்நிலையில், இந்த ஓஎன்ஜிசி குழாய் நேற்று இரவே உடைந்ததாகவும், ஆனால் அதிகாரிகள் தாமதமாகதான் வந்ததாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், இது குறித்து தெரிவித்துள்ள … Read more

கலந்துரையாடல் கூட்டத்தை புறக்கணித்த எல்.முருகன்., விவசாயிகள் ஏமாற்றம் ..!

வேளாண் சட்டம் குறித்து விவசாயிகள் உடனான கலந்துரையாடலை  தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் புறக்கணித்தார். மத்திய வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க தமிழக பாஜக தலைவர்  எல்.முருகனுக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்திருந்தனர். தாராபுரம் தொப்பம்பட்டியில் விவசாயிகள் உடனான கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கலந்துரையாடலின் போது உயர்மின் கோபுரம், எட்டு வழி சாலை உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்க விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர். கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்காமல் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் புறக்கணித்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். பகல் … Read more

கருப்பு கேரட்டை பயிரிடும் விவசாயி…! ஆர்வத்துடன் பார்த்து செல்லும் விவசாயிகள்…!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியைச் சேர்ந்த ஆசீர் என்ற விவசாயி கருப்பு நிற கேரட்டை பயிரிடுகிறார்.  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆசீர் என்ற விவசாயி. இவர் மலைக்காய்கறிகளை விவசாயம் செய்து வருகிறார். இவர் ஆன்லைன் மூலம் கருப்பு நிறத்தில் விளையக்கூடிய கேரட் விதைகளை விலைக்கு வாங்கி தனது நிலத்தில் பயிரிட்டுள்ளார். பொதுவாகவே கேரட் என்றாலே ஆரஞ்சு நிறத்தில் தான் காணப்படும். ஆனால் இந்த கேரட் கருப்பு நிறத்தில் காணப்படுகிறது.   இந்த கேரட் 90 … Read more

திருப்பி செலுத்தப்படாத கடனுக்கு பதிலாக வீட்டை பூட்டி சீல் வைத்த தனியார் வங்கி – இரு மகள்களுடன் தெருவில் விவசாயி!

கொரோனா தொற்று மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயி தனியார் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை எனும் காரணத்திற்காக அவரது வீட்டை பூட்டி சீல் வைத்துள்ளது தனியார் வங்கி நிறுவனம். விவசாயிகளின் போராட்டமும் விவசாயிகளின் அன்றாட வாழ்க்கை முறையும் தான் இந்தியாவில் தற்போது அதிக அளவில் பேசப்படும் பொருளாக இருந்து வருகிறது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களின் காரணமாக டெல்லியில் விவசாயிகள் பெரும் போராட்டத்தை கடந்த மூன்று மாதங்களாக … Read more

30 கோடி செலவில் ஹெலிகாப்டர் வாங்கிய விவசாயி – வியக்க வைத்த விவசாயியின் பதில்!

30 கோடி ரூபாய் செலவில் மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி ஒருவர் ஹெலிகாப்டர் வாங்கியுள்ள நிலையில், இது தனது பால் வியாபாரம் மற்றும் வணிக பயன்பாட்டுக்காக என விவசாயி கூறியுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பிவாண்டி எனும் நகரத்தை சேர்ந்த ஜனார்த்தன் போயிர் என்பவர் ஒரு விவசாயி மட்டுமல்லாமல், அவர் வணிக தொழில் செய்து வருபவராகவும் இருக்கிறார். விவசாயிகள் பலர் எளிமையான வாழ்க்கைய வாழ்ந்து வந்தாலும் ஜனார்த்தன் தான் உழைத்து முன்னேறிய பணத்தை வைத்து … Read more