வேளாண்மை தான் நாட்டுக்கு உயிராகவும், உடலாகவும் உள்ளது : மு.க.ஸ்டாலின்

வேளாண்துறைக்கு முக்கியத்துவம் தரும் வகையில், வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை திமுக அரசு தாக்கல் செய்ய உள்ளது.

சென்னை தரமணி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில், கொரோனா தொற்று பின்னணியில் உணவு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்தல் தொடர்பான பன்னாட்டு கருத்தரங்கை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நாட்டுக்கு உயிராகவும், உடலாகவும் உள்ள வேளாண்மை துறைக்கு தமிழக அரசு முக்கியத்துவம் தருகிறது என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், எம்.எஸ்.சுவாமிநாதனின் ஆலோசனைகளை செயல்படுத்தியவர் கருணாநிதி. வேளாண்துறைக்கு முக்கியத்துவம் தரும் வகையில், வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை திமுக அரசு தாக்கல் செய்ய உள்ளது. வேளாண்மையை லாபகரமான சூழலாக விவசாயிகள் நினைக்கும் வகையில் மாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.