ஒரு கொலைக்குற்றவாளி முதல்வராக இருப்பது தமிழ்நாட்டில்தான்-மு.க.ஸ்டாலின் பரபரப்பு தகவல்

ஒரு கொலைக்குற்றவாளி முதல்வராக இருப்பது தமிழ்நாட்டில்தான் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,  2006-ஆம் ஆண்டு  4 ஊராட்சி மக்களிடம் சுமுகமாக பேசி உள்ளாட்சி தேர்தலை நடத்தியது திமுகதான்.கோடநாடு பங்களாவில் கொள்ளை மற்றும் அதன் தொடர்ச்சியாக நடந்த மரணங்களின் பின்னணி என்ன? என்றும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நீதி விசாரணை நடத்தப்படும் என முதல்வரால் கூற முடியுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். கோடநாடு விவகாரத்தில் சிறப்பு விசாரணை ஆணையத்தை மத்திய அரசு உடனே … Read more

கட்டட தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவுத்திட்டம் தொடங்கப்படும் – முதலமைச்சர்…!!

பதிவு பெற்ற கட்டிட தொழிலாளர்களுக்கு அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலுரை அளித்து பேசினார். அப்போது பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட அரசு தொடர்ந்து பாடுபடும் என உறுதியளித்தார். வேலையில்லா இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்க 2018-19 ம் ஆண்டில் 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் சென்னையில் பணிபுரியும் பதிவு பெற்ற … Read more

ஆசிய போட்டி:வென்ற தமிழக மூன்று முத்துக்களுக்கு..!ரூ.20 லட்சம் பரிசு..!!முதல்வர் அறிவிப்பு..!!

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழகத்தை சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல் மற்றும் சவுரவ் கோஷலுக்கு தலா ரூ.20 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும் மூன்று வீரர்களுக்கும் வாழ்த்து கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். நேற்று ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு ரூ.20 லட்சம் பரிசுத்தொகை தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.   DINASUVADU

தமிழகத்தில் நடந்த காவலர்கள் தற்கொலைக்கு காரணம் இது வா…?? சட்டமன்ற பேரவை பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி…

தமிழகத்தில் நடந்த காவலர்கள் தற்கொலை என்பது குடும்ப, உடல்நிலை, காதல் உள்ளிட்ட பிரச்சினைகளால் நிகழ்கிறது. காவலர்கள் தற்கொலையை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பணிச்சுமையை கருத்தில் கொண்டு காவலர்களுக்கு வாராந்திர ஓய்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உடல்நலத்தை பேணிக்காக்க யோகா பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. காவலர்கள் தற்கொலை தொடர்பாக தமிழக சட்டமன்ற பேரவையில் முதலமைச்சர் பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.

ஒக்கி புயலால் மாயமான மீனவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் நிதியுதவி…!

சென்னை : தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் குமரி, தூத்துக்குடி, நாகை மற்றும் கடலூரை சேர்ந்த 25 மீனவர்களின் குடும்பங்களுக்கு முதற்கட்டமாக நிதியுதவி வழங்கப்பட்டது. அதேபோல் ஒக்கி புயலால் மாயமான 177 மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் நிதியை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.