கொரோனாவை எதிர்த்து இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களும் போர் தொடுக்க வேண்டும் – மோடியின் உரை.!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசு முன்ன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த வைரசால் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில் பிரதமர் மோடி வானொலி மூலமாக மக்களிடம் உரையாற்றினார். அப்போது கொரோனா வைரஸ் இந்தியாவை பாதிக்காது என்று நினைப்பது தவறு என்றும் இந்தியாவில் உள்ள 130 கோடி மக்கள் … Read more

LIVE UPDATE: கொரோனா வைரஸ் குறித்து பிரதமர் மோடி உரை.!

கடந்த 2 மாதங்களாக கொரோனா குறித்த அச்சுறுத்தலை சந்தித்து வருகிறோம். இதனால் நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருக்கிறது.  கொரோனா வைரஸ் உலக போர் போல பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் உலகம் கொரோனாவை கண்டு பீதியடைந்து வருகிறது என தெரிவித்தார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அறிவியல் நமக்கு இதுவரை உதவவில்லை, உலக முழுவதும் தொற்று வேகமாக பரவி வருகிறது. அடுத்த சில வாரங்களுக்கு உங்கள் நேரம் எனக்கு வேண்டும் என்றும் கொரோனா பாதித்த நாடுகளில் செய்யப்பட்ட … Read more

வெளிநாட்டு விமானங்கள் இந்தியா வர தடை – மத்திய அரசு அறிவிப்பு.!

வெளிநாட்டு விமானங்கள் இந்தியா வர மத்திய அரசு தடை விதித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் சர்வதேச பயணிகள் இந்தியா வர தடை என மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் மார்ச் 22ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு வெளிநாட்டு விமானங்கள் இந்தியா வர தடை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் 65 வயதிற்கு மேற்பட்டோர் வீட்டிலேயே இருக்க மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என்றும் அதேபோல் 10 வயத்துக்குட்பட்டவர்களும் வீட்டிலேயே இருக்க வேண்டும் … Read more

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தேர்வுகளை ஒத்திவைக்க யூ.ஜி.சி உத்தரவு.!

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாடு முவதும் உள்ள கல்லூரிகளில் தேர்வுகளை ஒத்திவைக்க யூ.ஜி.சி உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மார்ச் 31ம் தேதி வரை தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.  மேலும் விடைத்தாள் திருத்தம் பணிகளையும் நிறுத்திவைக்க அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு யூ.ஜி.சி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மத்திய, மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு எடுத்து … Read more

டீக்கடைகள், உணவகங்களுக்கு கட்டுப்பாடு – தமிழக அரசு அதிரடி.!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் உள்ள டீக்கடைகள் மற்றும் உணவகங்களுக்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி டீக்கடைகளில் பயன்படுத்தும் டம்ளர்கள் சுத்தமாகவும், வெந்நீர் மற்றும் சோப்பு போட்டு சுத்தம் செய்திருக்க வேண்டும் என்றும் கடையில் இருப்பவர்கள் சுத்தமாக கைகளை கழுவி விட்டு டி போடவேண்டும் என்று கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.  அதுபோன்று உணவகங்களில் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்றும் … Read more

கொரோனா எதிரொலி: CISCE – 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு.!

CISCE பாடத்திட்ட மாணவர்களுக்கான 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பதாக கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்வுகள் மார்ச் 31ம் தேதி வரி ஒத்திவைக்கப்படுகிறது. இதனிடையே சிபிஎஸ்சி 10, 12 ஆம் வகுப்பு தேர்வுகளும் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடப்படுகிறது.  இதுபோன்று கொரோனா தாக்குதல் காரணமாக ICSE மற்றும் ISC தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் 10, 12ஆம் வகுப்புக்கான ICSE … Read more

ஸ்டான்லி மருத்துவமனையில் விரைவில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. இதனால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்தில் கொரோனவால் 2 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பலவேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகின்றனர் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.  … Read more

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் 276 பேருக்கு கொரோனா.!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், சுமார் 127 நாடுகளில் பரவியுள்ளது. ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இத்தாலி, குவைத், இலங்கை மற்றும் ருவாண்டா என 276 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் ஈரானில் 255, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 12, இத்தாலி 5, ஹாங்காங், குவைத், ருவாண்டா மற்றும் இலங்கையில் தலா 1 உட்பட 276 இந்தியர்கள் வெளிநாடுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என டெல்லி … Read more

தன்னை பார்க்க யாரும் வர வேண்டாம் – செங்கோட்டையன் வீட்டில் பெயர் பலகை

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் சுமார் 127 நாடுகளில் பரவியுள்ளது. இது தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலமாக பரவி வரும் கொரோனாவை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. அந்த வகையில் வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் நோக்கத்தில் தமிழகம் உட்பட பெரும்பாலான மாநிலங்களில் திரையரங்குகள், வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரிகள், ஐடி … Read more

கொரோனா அச்சத்தால் தி.நகரில் பெரிய கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு.!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை காரணமாக மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ கல்லூரிகள் தவிர்த்து அனைத்து கல்வி நிறுவனங்களும் மார்ச் 31ஆம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ள தகவலில், சென்னையில் சுமார் 3800 ஏடிஎம் மையங்களை சுத்தம் செய்ய உத்தரவிட்டு உள்ளதாக கூறியுள்ளார். இதையடுத்து சென்னையில் ஒரு மருத்துவ குழு தினந்தோறும் 80 … Read more