இந்தியாவில் முதல்முறையாக தொடங்கப்பட்ட கொரோனா தொடர் கண்காணிப்பு மையம்-அமைச்சர் விஜயபாஸ்கர்.!

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து நுரையீரல் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்யும் விதமாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா தொடர் கண்காணிப்பு மையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் நுரையீரல் பிரச்சினைகளுக்கும் ஆளாவதாக மருத்துவர்கள் தெரிவித்து வந்தனர். அதனையடுத்து கொரோனாவிலிருந்து குணமடைந்த பலர் இருதய பிரச்சனை, சிறுநீரக மற்றும் கல்லீர பிரச்சனைகள், நிமோனியா மற்றும் மூளை நரம்பியல் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாக தகவல்கள் … Read more

தமிழகத்தில் இன்று மட்டும் 536 பேருக்கு கொரோனா.! பலி 81 ஆக உயர்வு.!

தமிழகத்தில் இன்று மேலும் 536 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 11,760  ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,760  ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 364 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 7,114 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 3 பேர் கொரோனாவுக்கு … Read more

கொரோனாவை குணப்படுத்தும் பிளாஸ்மா சிகிச்சை.! விரைவில் தமிழகத்தில்…

கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையளிக்க மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளது. மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் உடனே சிகிச்சை அளிக்கப்படும். – தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். கொரோனாவை வைரஸை அழிக்க உலக ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து, குணமடைந்து சென்றவர்களின் ரத்த மாதிரிகளை எடுத்து, அதில் உள்ள பிளாஸ்மாவை பிரித்தெடுத்து, அதன் மூலம் கொரோனா பாதித்தவர்களை குணப்படுத்தும் முயற்சியில் தமிழகம் முயன்று வருகிறது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை … Read more

ஸ்டான்லி மருத்துவமனையில் விரைவில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. இதனால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்தில் கொரோனவால் 2 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பலவேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகின்றனர் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.  … Read more

92 கோடி ருபாய் மதிப்பில் பிரமாண்ட யோகா மையம்! 25 கோடி மதிப்புள்ள ஒப்புயர்வு மையம்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

தமிழக சட்ட பேரவையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் பல திட்டங்களை அறிவித்தார். தில் முக்கியமானது பிரமாண்ட யோகா மையமும், அரசு மருத்துவமனைக்கு இன்வெர்ட்டர் வசதியும் ஆகும். செங்கல்பட்டில் 50 ஏக்கர் பரப்பளவில், பிரமாண்ட யோகா மையம் ருபாய் 92 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளதாகவும், மனநல மருத்துவமனையில் உயர்தர மருத்துவ வசதிக்காக 25 கோடி மதிப்புள்ள ஒப்புயர்வு மையம், அரசு மருத்துவமனைகளில் மின்சாரம் தட்டுப்பாடின்றி கிடைக்க  இன்வெர்ட்டர்கள் அமைக்கப்படும். எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது-அமைச்சர் விஜயபாஸ்கர்

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து விவாதிப்பதற்கு அனைத்து கட்சி கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது.இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்க இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .விரைவில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவும் அதிமுகவில் இணைய உள்ளார் என்று  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.