தமிழ்நாடு பீரங்கி தயாரிப்பிலும் மையமாக திகழ்கிறது- பிரதமர் மோடி

நாட்டின் வட எல்லையை பாதுகாக்க தமிழகத்தின் அர்ஜூன் டாங்கி உதவும் என பிரதமர் மோடி உரையில் தெரிவித்துள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். உள்நாட்டிலேயே தயாரான அர்ஜுன் மார்க் 1ஏ பீரங்கியை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாடு பீரங்கி தயாரிப்பிலும் மையமாக திகழ்கிறது. நாட்டின் வட எல்லையை பாதுகாக்க தமிழகத்தின் அர்ஜூன் டாங்கி உதவும் என கூறினார். பாதுகாப்பு துறையில் தற்சார்பை … Read more

யாழ்ப்பாணத்துக்கு சென்ற ஒரே இந்திய பிரதமர் நான் – பிரதமர் மோடி

இலங்கையில் வாழும் தமிழர்களின் நலனை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தில் ரூ.8,126 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பின்னர் பேசிய பிரதமர் மோடி, இலங்கையில் வாழும் தமிழர்களின் நலனை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யாழ்ப்பாணத்துக்கு சென்ற ஒரே இந்திய பிரதமர் நான் எனவும் குறிப்பிட்டார். வளர்ச்சி பணிகள் மூலம் ஈழத் தமிழர் நலன்களை உறுதி … Read more

அவ்வை, பாரதி பாடல்களை மேற்கோள்காட்டி பேசிய பிரதமர் மோடி.!

அவ்வையார் மற்றும் பாரதி பாடல்களை நீர் ஆதாரங்கள், உள்நாட்டு ஆயுத உற்பத்தியை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி பேசியுள்ளார். தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, அவ்வையாரின், வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான் என்ற பாடலை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி … Read more

வணக்கம் சென்னை, வணக்கம் தமிழ்நாடு – தமிழில் பேசி உரையை தொடங்கிய பிரதமர்.!

வணக்கம் சென்னை, வணக்கம் தமிழ்நாடு என தமிழில் பேசி உரையை தொடங்கிய பிரதமர் மோடி, உற்சாக வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டரங்க நடைபெற்று வரும் நிகழ்ச்சியில், பிரதமர் மோடிக்கு பொன்னாடை அணிவித்து, கிருஷ்ணர் சிலையை நினைவு பரிசாக முதலமைச்சர் பழனிசாமி அளித்தார். இதன்பின் பிரதமர் மோடி பல்வேறு திட்டகங்களை தொடங்கி வைத்து, சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, வணக்கம் சென்னை, வணக்கம் தமிழ்நாடு என தமிழில் பேசி உரையை தொடங்கிய பிரதமர், … Read more

“அலட்சியம் காட்டாமல், விழிப்புடன் இருங்கள்” – பிரதமர் மோடி

கொரோனா காலகட்டத்தில் ஏழாவது முறையாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி தற்போது உரையாற்றினார். டெல்லியில் இருந்து காணொலி மூலம் பிரதமர் உரையாற்றிய போது, கொரோனா வைரஸ் இன்னும் நம்மை விட்டு முழுமையாக விலகவில்லை என்பதை மக்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். நம் நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவது கண்டு பலர் முககவசம் அணியாமல் அலட்சியமாக நடந்து கொள்வதைக் காண்கிறோம். மேலும், கொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில் அலட்சியம் காட்டாமல் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் – பிரதமர் நரேந்திர மோடி

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இன்று காலை பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றி இருந்தார். அப்போது பேசிய அவர், ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்த நிலையில், அனைத்து மக்களும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

130 கோடி மக்கள் வீட்டிலிருந்தாலும் நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் .! பிரதமர் மோடி .!

பிரதமர் மோடி நேற்று காணொளி காட்சி மூலம் கொரோனா வைரஸ்  தடுப்பு நடவடிக்கைகள் குறித்து  மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், இன்று  கொரோனா தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு நாட்டு மக்களிடையே உரையாற்றினர். அப்போது பேசிய மோடி , அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறீர்கள். ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு நன்றி  எனவும்  நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு யுத்தம் நடத்தியதற்கு நன்றி என கூறினார். இந்தியாவின் மக்கள் ஊரடங்கு … Read more

ஏப்ரல் 5-ல் 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணையுங்கள் -பிரதமர் மோடி .!

பிரதமர் மோடி நேற்று காணொளி காட்சி மூலம் கொரோனா வைரஸ்  தடுப்பு நடவடிக்கைகள் குறித்து  மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், இன்று அவர், நாட்டு மக்களுக்கு ஒரு வீடியோ செய்தி வெளியிட்டார். அதில் , இன்று லாக்டவுனின் 10-வது நாள் பொதுமக்கள் இணைந்து கொரோனாவுக்கு எதிரான போராட வேண்டும். ஊரடங்கை கடைபிடிப்பதில் நாம் உலகளவில் முன்னுதாரணமாக இருந்து வருகிறோம். மேலும் அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறீர்கள். நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு … Read more

LIVE: நாட்டு மக்களிடம் உரையாற்றும் மோடி.!

கொரோனாவால்நாடு முழுவதும் முடக்கப்பட்டது. இன்று இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் தனிமைப்படுத்தப்படுகிறது. கொரோனா யாரையும் விட்டுவைப்பதில்லை நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம் எனவே ஊரடங்கிற்கு  ஒத்துழைக்க வேண்டும். மருத்துவர்களை தவிர மற்ற யாருக்கும் வெளியே வர ஊடரங்கின்போது அனுமதி இல்லை. உறவினர்கள் உட்பட வெளியாட்கள் யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம் மக்கள் கட்டுப்பாட்டுடன் இல்லை என்றால் நாம் அழிவை சந்திக்க நேரிடும். குறைந்த பட்சம் 21 நாட்கள் ஊரடங்கை … Read more

கொரோனாவை எதிர்த்து இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களும் போர் தொடுக்க வேண்டும் – மோடியின் உரை.!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசு முன்ன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த வைரசால் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில் பிரதமர் மோடி வானொலி மூலமாக மக்களிடம் உரையாற்றினார். அப்போது கொரோனா வைரஸ் இந்தியாவை பாதிக்காது என்று நினைப்பது தவறு என்றும் இந்தியாவில் உள்ள 130 கோடி மக்கள் … Read more