உத்தரவை மீறினால் பாஸ்போர்ட் முடக்கப்படும் – தமிழக அரசு எச்சரிக்கை.!

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் உத்தரவை மீறினால் பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பயணிகள் வெளியே நடமாடினால் அதீத நடவடிக்கையாக பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. மேலும் வீட்டில் இருக்காமல் வெளியே நடமாடினால் காவல்துறை மூலம் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. கொரோனா முன்னெச்சிரிக்கையாக வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட பயணிகள் வெளியே நடமாடுவது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் தனிப்படுத்தப்பட்ட பயணிகள் அரசின் உத்தரவை … Read more

#Breaking: 11, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும்!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகம், திரையங்குகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களை மார்ச் 31 தேதி வரை மூட உத்தரவிட்டது. மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்த நிலையில், தற்போது 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்க பள்ளிகல்வித்துறை ஆலோசனை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஆலோசனை கூட்டம் முடிவடைந்த நிலையில், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் … Read more

11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை.!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க பள்ளிகல்வித்துறை ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.  கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகம், திரையங்குகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களை மார்ச் 31 தேதி வரை … Read more

மத்திய சிறையில் இருந்து 51 கைதிகள் விடுவிப்பு.!

மதுரை மத்திய சிறையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக சிறையில் உள்ள கூட்டத்தை குறைக்க ஏதுவாக சிறிய குற்றங்களாக கருதப்படும் திருட்டு வழக்குகள், கூட்டுக் கொள்ளை, சதித் திட்டம் தீட்டுதல் போன்ற சிறிய குற்றங்கள் செய்தவர்களை மட்டும் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யலாமா என்று ஆலோசனை நடத்தப்பட்டது.  இந்த ஆலோசனை கூட்டத்தில் 12 மாவட்ட நீதிமதிகள் மதுரை மத்திய சிறைக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் 58 காவல் ஆய்வாளர்கள், 30 உதவி ஆய்வாளர்கள் பங்கேற்றுள்ளனர். … Read more

ரூ.60 கோடி நிதி போதாது, ரூ.500 கோடி ஒதுக்க வேண்டும் – மு.க ஸ்டாலின்

இன்று நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த 3 பேரின் தற்போதைய நிலை என்ன? என்றும் கொரோனாவிற்கு ஒதுக்கப்பட்ட ரூ.60 கோடி நிதி போதாது, ரூ.500 கோடி ஒதுக்க வேண்டும் என பேரவையில் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அதில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என தெரிவித்தார். ஆனால் வீடு திரும்பிய நபரை தொடர் … Read more

நாளை ஒயின்ஷாப் மூடப்படும் – தமிழக அரசு உத்தரவு.!

உலக முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரு வெளிநாட்டவர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. மேலும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் வரும் 31ம் தேதி வரை பல விஷயங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  அந்த … Read more

‘சமூக விலகல்’ நடவடிக்கை: மாநில முதல்வர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்.!

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223ஆக  உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் இந்தியாவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.  இந்த ஆலோசனையில் காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பேசிய மோடி, கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியில் அடுத்த நான்கு வாரங்களில் மிகவும் முக்கியமான நடவடிக்கை … Read more

அனைத்து விதமான பயணிகள் ரயில் ரத்து – இந்திய ரயில்வே துறை அறிவிப்பு.!

இந்தியா முழுவதும் நாளை நள்ளிரவு 12 மணி முதல் ஞாயிறு இரவு 10 மணி வரை அனைத்து விதமான பயணிகள் ரயில்களும் ரத்து என்றும் ஏற்கனவே புறப்பட ரயில்கள் இருக்கும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஞாயிறன்று அதிகாலை 4 மணி முதல் நிறுத்தப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.  சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து … Read more

நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் கடைகள், ஹோட்டல்கள் அடைக்கப்படும் – வணிகர் சங்க பேரமைப்பு அறிவிப்பு.!

பிரதமர் மோடியின் சுய ஊரடங்கு கோரிக்கையை ஏற்று வெறும் 22ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள நாளை மறுநாள் மட்டும் கடைகள், ஹோட்டல்கள் அனைத்தும் அடைக்கப்படும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார். மேலும் வணிகர்கள் தற்போதைய நிலையை பயன்படுத்தி பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று விக்கிரமராஜா தெரிவித்தார்.  இந்நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பாக நேற்று இரவு வானொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது … Read more

நம் உடலில் 10 முதல் 15 நிமிடங்கள் சூரிய ஒளி பட்டால், கொரோனா வராது – மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர்.!

மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே சமீபத்தில் பேசியபோது, இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸில் இருந்து எப்படி பாதுகாத்து கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார். அதில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு தான், கொரோனா உள்ளிட்ட வைரஸ் பாதிப்புகள் அதிகம் இருக்கும் என்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம், இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும் என தெரிவித்தார். இதையடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன்  ‘வைட்டமின் … Read more