அனைத்து விதமான பயணிகள் ரயில் ரத்து – இந்திய ரயில்வே துறை அறிவிப்பு.!

இந்தியா முழுவதும் நாளை நள்ளிரவு 12 மணி முதல் ஞாயிறு இரவு 10 மணி வரை அனைத்து விதமான பயணிகள் ரயில்களும் ரத்து என்றும் ஏற்கனவே புறப்பட ரயில்கள் இருக்கும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஞாயிறன்று அதிகாலை 4 மணி முதல் நிறுத்தப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. இந்த வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் இதுவரை 223 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் மற்றும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. 

இந்நிலையில் நாட்டின் நன்மைக்காக வரும் 22ஆம் தேதி ஊரடங்கை நாம் பின்பற்றுவோம் என்று பிரதமர் மோடி வானொலி மூலம் கோரிக்கை வைத்தார். அதில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிவோர் தவிர மற்றவர்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என மோடி அறிவுறுத்தியுள்ளார். இந்த கோரிக்கையின் அடிப்படையில் வரும் 22ம் தேதி அனைத்து விதமான பயணிகள் ரயில்களும் ரத்து என இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்