நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் கடைகள், ஹோட்டல்கள் அடைக்கப்படும் – வணிகர் சங்க பேரமைப்பு அறிவிப்பு.!

பிரதமர் மோடியின் சுய ஊரடங்கு கோரிக்கையை ஏற்று வெறும் 22ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள நாளை மறுநாள் மட்டும் கடைகள், ஹோட்டல்கள் அனைத்தும் அடைக்கப்படும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார். மேலும் வணிகர்கள் தற்போதைய நிலையை பயன்படுத்தி பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று விக்கிரமராஜா தெரிவித்தார். 

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பாக நேற்று இரவு வானொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது நாட்டின் நன்மைக்காக வரும் 22ஆம் தேதி ஊரடங்கை நாம் பின்பற்றுவோம் என்றும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என தெரிவித்தார். இது 22 ம் தேதி கொரோனா வைரஸுக்கு எதிராக சோதனை ஓட்டமாக இருக்கும் என குறிப்பிட்டார்.

இதனை அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சங்கங்கள் மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் போர்க்காலங்களில் இரவு நேரங்களில் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வானொலி மூலம் மக்களுக்கு தெரிவித்தார். இந்த நிலையில் பிரதமர் கோரிக்கையை ஏற்று வரும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் தமிழக முழுவதும் உள்ள அனைத்து கடைகள், ஹோட்டல்கள் மூடப்படும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்