தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை- அமைச்சர் செங்கோட்டையன்!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தில் கொரோனா நிவாரண நிதிகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதுபற்றி எந்த குழப்பமும் வேண்டாம் என கூறினார். மேலும், பள்ளிகள் திறப்பது குறித்து எந்தொரு முடிவும் … Read more

தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இ-பாஸ்.. அமைச்சர் தகவல்.!

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வுமையம் வருவதற்கு இ-பாஸ் பெற கடிதம் அனுப்பப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாக தகவல் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும்  +1 தேர்வுகள் நடைபெறும் தேதியை அமைச்சர் செங்கோட்டையன்  அறிவித்தார். அதன்படி, 10-ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரையும், + 1 வகுப்பு ஒத்தி வைக்கப்பட்ட  தேர்வு ஜூன் 2-ம் தேதியில் நடத்தப்படும். அதேபோல,  … Read more

கொரோனா நிவாரணம்: பள்ளிக்கல்வித்துறை சார்பில் 70 கோடி நிதியுதவி – செங்கோட்டையன்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக நிவாரண நிதிக்கு பொதுமக்கள் தங்களால் முடிந்த நிதியினை வழங்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதையடுத்து பலர் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற நிதி உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நிவாரணம் நிதியாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.70 கோடி வழங்குவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியமான ரூ.70 கோடி கொரோனா நிவாரண … Read more

தன்னை பார்க்க யாரும் வர வேண்டாம் – செங்கோட்டையன் வீட்டில் பெயர் பலகை

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் சுமார் 127 நாடுகளில் பரவியுள்ளது. இது தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலமாக பரவி வரும் கொரோனாவை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. அந்த வகையில் வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் நோக்கத்தில் தமிழகம் உட்பட பெரும்பாலான மாநிலங்களில் திரையரங்குகள், வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரிகள், ஐடி … Read more

இந்த ஆண்டு 7,500 பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்பறைகள் துவங்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி விவாதத்தில் பேசிய மன்னார்குடி தொகுதி திமுக உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, மன்னார்குடி ஒன்றியம், வடபாதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், முதலமைச்சர்  அனுமதி பெற்று அதிக அளவு பள்ளிகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.  இதனைதொடர்ந்து பேசிய அவர், இந்த ஆண்டு 7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவங்கப்படுவதுடன், 1200 பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளும் நடைபெற … Read more

குட் நியூஸ்.! அரசு பள்ளியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் விரைவில் தொடங்கும்.! கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு.!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் அரங்கம் ஒன்றில் தமிழர் திலகம் பத்திரிகையின் 2-ம் ஆண்டு துவக்க விழாவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், அனைத்து அரசு பள்ளிகளிலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் விரைவில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் அரங்ம் ஒன்றில், தமிழர் திலகம் பத்திரிகையின் 2-ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. அவ்விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முன்னாள் … Read more

தை பொங்கலுக்கு விடுமுறையா ?இல்லையா ? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்

மாணவர்கள் பொங்கல் தினத்தன்று பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.  ஜனவரி 16ம் தேதி பிரதமர் மோடியின் உரையை எங்கிருந்து வேண்டுமானாலும் கேட்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வானது சமீபத்தில் நடந்து முடிந்து அதற்கான விடுமுறையும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.இந்த விடுமுறை முடிந்த பின்பு  ஜனவரி 3 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. ஜனவரி 16-ஆம் தேதி பொங்கல் விடுமுறை தினத்தன்று, பிரதமர் மோடி உரையை கேட்க … Read more

5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடந்தாலும் தேர்ச்சி நிச்சயம் – அமைச்சர் செங்கோட்டையன்

5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு  நடத்தப்பட்டாலும் மூன்று ஆண்டுகளுக்கு அனைவரும் தேர்ச்சி பெறுவர்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு  நடத்தப்பட்டாலும் மூன்று ஆண்டுகளுக்கு அனைவரும் தேர்ச்சி பெறுவர்கள்.மூன்று  ஆண்டுகளில் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராக வேண்டும்.மூன்று ஆண்டுகளில் மாணவர்கள் தரம் குறித்து கண்காணிக்கப்படும்.அரசு பள்ளி தரம் குறைந்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளதால், அதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் … Read more

தினமும் மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

தினமும் காலை மாணவ -மாணவிகளுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.   தமிழக அரசின் சார்பில், பள்ளி துவங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி (Physical Exercise) தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான சுற்றறிக்கை உடனடியாக வழங்கப்படும். #TNEducation #TNSports — K.A Sengottaiyan (@KASengottaiyan) November 27, 2019   இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் … Read more

ஒவ்வொரு வகுப்பு முடிந்த பின்பும் குடிநீர் அருந்த 10 நிமிடங்கள் -அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

பள்ளியில் ஒவ்வொரு வகுப்பு முடிவுற்றதும் மாணவர்கள் குடிநீர் அருந்த 10 நிமிடங்கள் ஒதுக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.அப்பொழுது அவர் கூறுகையில், பாடவேளைகளின் இடைவெளியில் குடிநீர் அருந்தினால் உடல்நலம் மேம்படும் என்ற மருத்துவரின் ஆலோசனையை ஏற்று அனைத்துப்பள்ளிகளிலும் மாணவர்கள் குடிநீர் அருந்த 10 நிமிடங்கள் ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார்.மேலும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு CA படிப்புக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.