வெளிநாட்டு விமானங்கள் இந்தியா வர தடை – மத்திய அரசு அறிவிப்பு.!

வெளிநாட்டு விமானங்கள் இந்தியா வர மத்திய அரசு தடை விதித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் சர்வதேச பயணிகள் இந்தியா வர தடை என மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் மார்ச் 22ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு வெளிநாட்டு விமானங்கள் இந்தியா வர தடை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் 65 வயதிற்கு மேற்பட்டோர் வீட்டிலேயே இருக்க மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என்றும் அதேபோல் 10 வயத்துக்குட்பட்டவர்களும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. 

இதையடுத்து குழந்தைகள், முதியவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் அவசர அத்தியாவசிய பணிகள் தவிர மற்றவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மாணவர்கள், நோயாளிகள் தவிர மற்றவர்களுக்கான ரயில் மற்றும் விமான கட்டணம் சலுகை ரத்து என மத்திய அரசு கூறியுள்ளது. தனியார்துறை நிறுவனத்தின் பணிபுரிபவர்கள் முடிந்தவரை வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்