பாலம் அமைக்கும் பணியை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்- மு.க.ஸ்டாலின்

கொளத்தூர் பிரதான சாலையில் பாலம் அமைக்கும் பணியை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது.இதில் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.அவரது  உரையில்,கொளத்தூர் பிரதான சாலை, ஔவையார் நகர் மற்றும் ஐசிஎப் கனால் சாலையை இணைக்கக்கூடிய பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக மக்கள் தொடர்ந்து பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள்.

அன்றாடம் பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நெரிசல் மற்றும் சங்கடங்களைக் களைவதற்கு, இந்த ஆண்டிற்குள்ளாவது போர்க்கால நடவடிக்கை எடுத்து, பாலம் கட்டும் பணியை நிறைவேற்றித் தருவதற்கு இந்த அரசு முன்வரவேண்டும் என்று உரையாற்றினார் .