நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தேர்வுகளை ஒத்திவைக்க யூ.ஜி.சி உத்தரவு.!

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாடு முவதும் உள்ள கல்லூரிகளில் தேர்வுகளை ஒத்திவைக்க யூ.ஜி.சி உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மார்ச் 31ம் தேதி வரை தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.  மேலும் விடைத்தாள் திருத்தம் பணிகளையும் நிறுத்திவைக்க அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு யூ.ஜி.சி உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மத்திய, மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு எடுத்து வருகிறது. ஏற்கனவே இந்தியாவில் உள்ள  சில மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் என பலவற்றை மூட உத்தரவிட்டனர். மேலும் பொதுமக்கள் கூடடமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று பல கட்டுப்பாடுகளை அரசு விதித்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தேர்வுகளை மார்ச் 31ம் தேதி வரை ஒத்திவைக்க யூ.ஜி.சி உத்தரவிட்டுள்ளது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்