வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் 276 பேருக்கு கொரோனா.!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், சுமார் 127 நாடுகளில் பரவியுள்ளது. ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இத்தாலி, குவைத், இலங்கை மற்றும் ருவாண்டா என 276 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் ஈரானில் 255, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 12, இத்தாலி 5, ஹாங்காங், குவைத், ருவாண்டா மற்றும் இலங்கையில் தலா 1 உட்பட 276 இந்தியர்கள் வெளிநாடுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என டெல்லி மக்களவையில் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கொரோன வைரஸ் இந்தியாவில் 147 பேரை தாக்கியுள்ளது. மேலும் டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களை சேர்ந்த 3 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு மாநிலமாக பரவி வரும் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனால் மத்திய, மாநில அரசுகள் வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் என பொது இடங்களில் கூட்டமாக கூடும் அனைத்து இடங்களையும் சில மாநிலங்களில் மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்