இராமநாதபுரத்தில்  நூதன முறையில் இரு கடைகளில் கல்லாப்பெட்டியை உடைத்து கொள்ளை!

2 கடைகளில் நூதன முறையில் ராமநாதபுரத்தில்  உரிமையாளர்களை வெளியே அனுப்பிவிட்டு, கல்லாப்பெட்டியை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த வியானன்று சக்கரைக்கோட்டையில் உள்ள மரியா கட்டுமானப் பொருள்கள் விற்கும் கடைக்கு, இருசக்கர வாகனத்தில் 2 பேர் வந்துள்ளனர். உரிமையாளர் சுந்தரவேலிடம், பெட்ரோல் பங்க்கின் அருகே ஒரு பெண் விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் கிடப்பதாகக் கூறியுள்ளனர். சுந்தரவேலிடம் சொல்லச் சொன்னதாகவும் அவர்கள் பதற்றத்துடன் கூறியுள்ளனர். அதிர்ந்து போன சுந்தரவேல், கடையை அப்படியே போட்டுவிட்டு ஊரில் உள்ள எல்லா பெட்ரோல் … Read more

விஜய் மல்லையா,நீரவ் மோடி கடன் மோசடியில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களைப் பறிக்க அவசரச்சட்டம்!

மத்தியஅமைச்சரவை,வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்பவர்கள், நிதி மோசடியில் ஈடுபட்டு வெளிநாடுகளில் பதுங்குபவர்கள் ஆகியோரின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நிதிமோசடி தலைமறைவுக் குற்றவாளிகள் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் அவசரச்சட்டத்துக்கு நேற்று ஒப்புதல் அளித்தது. நிதிமோசடி தலைமறைவுக் குற்றவாளிகள் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் மசோதா கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, மக்களவையில் கடந்த மார்ச் 12-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இரு அவைகளிலும் தொடர்ந்து நீடித்த அமளி, குழப்பத்தால் இந்த மசோதாவை நிறைவேற்ற … Read more

பிரபல தெலுங்கு நடிகர் மோடிக்கு எச்சரிக்கை !பிரதமர் மோடி ஒரு பச்சைத் துரோகி !

ஆந்திர  நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா ஆந்திர மாநிலத்துக்கு பிரதமர் மோடி துரோகம் இழைத்துவிட்டார், அவர் ஒருதுரோகி , ஏமாற்றுக்காரர் என்று  கடுமையாக சாடியுள்ளார். ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக உறுதியளித்த மத்திய அரசு 4 ஆண்டுகளாகியும் வழங்கவில்லை. இதையடுத்து, ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணியில் இருந்து தெலங்கு தேசம் கட்சி வெளியேறியது, அமைச்சரவையில் இருந்தும் வெளியேறியது. நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரக்கோரி நாடாளுமன்றத்தில் தெலுங்குதேசம் கட்சி சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.ஆனால், நாடாளுமன்ற முடக்கம் காரணமாக, அந்த … Read more

தமிழக சுகாதாரத்துறையில் முதல்முறையாக பணியிடங்கள் காலி என்ற பேச்சுக்கே இடமில்லை! சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , தமிழக சுகாதாரத்துறையில் முதல்முறையாக பணியிடங்கள் காலி இல்லை என்ற நிலை எட்டப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே அம்மன்குறிச்சியில் புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார மையத்தை  திறந்துவைத்த  பின்னர் செய்தியாளர்களிடம்  பேசிய அவர், வரும் 26-ஆம் தேதி 252 மருத்துவர்கள், 350 செவிலியர்கள், ஆயிரம் மருந்தாளுநர்களுக்கு முதலமைச்சர் நேரடியாக பணி நியமனங்களை அளிக்க உள்ளதாக குறிப்பிட்டார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

தூக்கு தண்டனை சரியான ஒன்றுதான் !சரத்குமார்

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார்,பன்னிரெண்டு வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதை  வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக சரத்குமார் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “பிரதமர் தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் சிறார்களை பாதுகாக்கும் சட்டத்தில் திருத்தம் செய்து, 12 வயதிற்கு கீழ் உள்ள சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை அறிவித்து அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக இந்தியாவில் … Read more

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தொடர்ந்து 7 வது நாளாக பனிமயமாத கோவில் வளாகத்துக்குள் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி  பனிமயமாத கோவில் வளாகத்துக்குள் கருப்புக்கொடி ஏற்றி தொடர்ந்து 7 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 17 இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. அவர்களது போராட்டம் இன்று 66-வது நாளாக நீடிக்கிறது.இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டுள்ளனர். இதேபோல்  தூத்துக்குடி  பனிமயமாத கோவிலை சுற்றியுள்ள பொது மக்கள் … Read more

எஸ்.வி.சேகர் நான் சொல்வதை முதலில் கேட்க வேண்டும்!பாரதிராஜா

இயக்குனர் பாரதிராஜா ,பெண் பத்திரிக்கையாளரை விமர்சித்த எஸ்.வி.சேகர், பத்திரிக்கையாளர் மன்றத்தில் அனைவரது முன்னிலையிலும் விழுந்து மன்னிப்பு கேட்க முடியுமா? என கேள்வி எழுப்பி உள்ளார். எஸ்.வி.சேகரை கைது செய்ய வலியுறுத்தி சென்னை சாலிகிராமம் தசரதபுரத்தில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அவர்,  பணிபுரியும் பெண்களை இழிவாக பேசிவிட்டு, மன்னிப்பு கோருவதை  ஏற்க முடியாது என்றார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

பிஎன்பி வங்கி வைர வியாபாரி நீரவ் மோடிக்கு எதிராக ஹாங்காங்கில் வழக்குப்பதிவு!

பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில்,நிதி மோசடி வழக்கில் வைர வியாபாரி நீரவ் மோடிக்கு எதிராக, ஹாங்காங் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அங்குள்ள நீரவ் மோடியின் சொத்துக்களை முடக்கி வைக்கும் வகையில் இந்த நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது. நீரவ் மோடி மற்றும் முகுல் சோஸ்கிக்கு சொத்துகள், வைர நகை கடைகள் உள்ள பிற நாடுகளிலும் இதுபோன்று வழக்கு தொடர அனுமதி கோரப்படும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில், 280 கோடி … Read more

ஒவ்வொரு தமிழரின் தோளிலும் 45 ஆயிரம் ரூபாய் கடன் !கமல்ஹாசன்

மக்கள் நீதிமய்யத் தலைவர் கமல்ஹாசன்,தென்னிந்திய அளவிலான அரசியலை முன்னெடுத்து, வட மாநிலங்களுக்கு இணையாக குரலை எழுப்பினால் உரிமைகளைக் கேட்டுப் பெற முடியும் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயநகரில் நடைபெற்ற ‘தமிழ்நாட்டிற்கான தலைமைத்துவம்; அடுத்த சுற்று’ என்ற கருத்தரங்கத்தில் பேசிய அவர் இதனை கூறினார். சோழர்காலத்தில் தஞ்சாவூரிலிருந்து கம்போடியாவை சிறப்பாக ஆட்சி நடத்தியவர்கள் தமிழர்கள் என்ற அவர், தற்போது ஒவ்வொரு தமிழரின் தோளிலும் 45 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது என்றார். திராவிடம் என்பது புவியியல் ரீதியான பெயர் தான் … Read more

தமிழ் சினிமா நடிகர்களுக்கு வருகிறது புதிய ஆப்பு!சம்பளத்தை மாற்றி அமைக்க முடிவு !

 நடிகர் சங்கம், தமிழ் சினிமா நடிகர், நடிகைகளின் சம்பளத்தை மாற்றி அமைக்க  முடிவு செய்துள்ளது. சென்னையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திரைப்படங்களின் லாபத்தை பொருத்து நடிகர், நடிகைகளின் சம்பளத்தை நிர்ணயிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நாசர், தமிழ் சினிமா வெளிப்படையாக இயங்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். இதை அடுத்து பேசிய நடிகர் கார்த்தி, தற்போது இயற்றப்பட்ட தீர்மானங்கள், மற்றும் ஆலோசனைகள் தயாரிப்பாளர் சங்கத்துக்கு கொண்டு செல்லப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் … Read more