#Breaking:வள்ளலார் பிறந்த நாள்..இனி “தனிப்பெருங்கருணை நாள்” – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

வள்ளலார் பிறந்த நாளான இன்று ஒரு முக்கிய அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ‘இறைவன் ஒருவரே,அவரே தனிப் பெரும் கருணை கொண்டவர்’ என்றவரும்,சமூக சீர்திருத்தவாதி, ஆன்மிகச் சொற்பொழிவாளர்,  சித்த மருத்துவர், பொதுத் தொண்டாற்றியப் புனிதர் என பன்முகங்களைக் கொண்டவர் வள்ளலார் எனும் ராமலிங்க அடிகளாரின் 199-வது பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில்,வள்ளலார் பிறந்த நாளான அக்டோபர் 5 ஆம் தேதி இனி “தனிப்பெருங்கருணை நாளாக” கடைப்பிடிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக முதல்வர் … Read more

முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பிட்னஸ் ரகசியம் இதுதான்- வைரல் வீடியோ…!

முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,இன்று சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில்(ECR) சைக்கிள் பயிற்சி மேற்கொண்டார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,காலை நடைப்பயிற்சி, மாலை உடற்பயிற்சி என்பதை மட்டும் தொடர்ந்து செய்து,உடற்பயிற்சி மீது தீவிர காதல் உடையவர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்.இதுவே,அவரது பிட்னஸ் ரகசியமாக கூறப்படுகிறது. ஏனெனில்,முன்னதாக தேர்தல் நேரத்தில் கூட அவர் பயணம் மேற்கொள்ளும் இடங்களில் காலை நடைப்பயிற்சியை விடாமல் செய்து வந்தார்.குறிப்பாக, சில நேரங்களில் நடைப்பயிற்சி போகும் … Read more

திமுக முப்பெரும் விழா: ஒவ்வொரு துறைகளிலும் இனி விடியல் பிறக்கப்போகிறது-முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு துறைகளிலும் இனி விடியல் பிறக்கப்போகிறது என்று உரையாற்றியுள்ளார். பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15, தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17, திமுக தொடங்கப்பட்ட செப்டம்பர் 17 ஆகிய மூன்று நிகழ்வுகளையும் சேர்த்து திமுக முப்பெரும் விழாவாக கொண்டாடி வருகிறது. இந்த முப்பெரும் விழா அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில்  நடைபெறுகிறது. இதன் காரணமாக அண்ணா அறிவாலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான … Read more

“நீட் தேர்வு என்பது ஆள்மாறாட்டம்;எவ்வித சமரசம் கிடையாது” – முதல்வர் ஸ்டாலின் ..!

நீட் உயிர்க்கொல்லிக்கு மாணவி கனிமொழி பலியாகியிருப்பது வேதனையளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். கடந்த 12 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வை தமிழகத்திலிருந்து 1.10 லட்சம் பேர் எழுதியிருந்தனர்.இந்த நிலையில், நீட் தேர்வினை எழுதிய அரியலூரை சார்ந்த கனிமொழி என்ற மாணவி  நீட் தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததாகவும், தனக்கு மருத்துவ படிப்பு சேர்க்கை கிடைக்குமா..? என அச்சம் இருப்பதாக தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து,தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவுக்கு அரசியல் … Read more

காவல்துறையினருக்கு “அண்ணா பதக்கங்கள்” முதல்வர் அறிவிப்பு..!

அண்ணா பிறந்த நாளில்,காவல்துறை மற்றும் சீருடைப்பணியாளர்கள் உள்ளிட்ட 134 பேருக்கு ‘அண்ணா பதக்கங்கள்’ வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். தமிழக மக்களால் ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ என்று அன்புடன் போற்றப்படும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.குறிப்பாக,ஒவ்வொரு ஆண்டும் செப்.15 ஆம் தேதி அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,அண்ணா பிறந்தநாளையொட்டி செப்டம்பர் 15-ஆம் தேதி  700 ஆயுள் தண்டனை சிறைக் கைதிகள் … Read more

“40,000 தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறி;முதல்வர் ஸ்டாலின் இதனைச் செய்ய வேண்டும்” – ஓபிஎஸ் கோரிக்கை..!

ஃபோர்டு நிறுவனம் மூடுதல் எதிரொலியாக 40,000 தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாகவும்,அந்நிறுவனம் தொடர்ந்து இயங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார். பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு நிறுவனம்,ஆலையை மூடுவதாக அறிவித்ததையடுத்து,மாற்று ஏற்பாடுகள் குறித்து அதன் நிர்வாகிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில்,ஃபோர்டு மோட்டார் நிறுவனம் தொடர்ந்து சென்னையை அடுத்துள்ள மறைமலைநகரில் இயங்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக … Read more

குட்நியூஸ்..மீத்தேன் எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட 5570 வழக்குகள் வாபஸ் – அரசாணை வெளியீடு..!

குடியுரிமை திருத்தச் சட்டம், எட்டு வழிச்சாலை எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட 5570 வழக்குகளை திரும்பப் பெற்றதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  தமிழ்நாடு சட்டப் பேரவையில் 24.06.2021 அன்று ஆளுநர் உரைக்கு பதிலளிக்கும் போது முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், பத்திரிகை மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுதல், மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள், மீத்தேன்/நியூட்ரினோ, கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் எட்டு வழிச்சாலை ஆகியவற்றிற்கு எதிராகப் போராடியவர்கள் … Read more

“சட்டத்தின் ஆட்சியில் தமிழ்நாடு முதலிடம் என்பதே நம் இலக்கு” – முதல்வர் ஸ்டாலின்…!

காவல்துறை ஒளிபெறவும் வழிகாட்டவும் தேவையான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கடந்த ஆக.13-ம் தேதி தொடங்கிய நிலையில் பொது பட்ஜெட் தாக்கல் மற்றும் 14-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இதனைத்தொடர்ந்து,பட்ஜெட் மீதான பொது விவாதம், பதிலுரை நடைபெற்றது. அதன்படி,முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவை விதி எண்: 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக,சட்டப்பேரவை கடைசி நாளான இன்று காவல்துறையினரின் நலன் கருதி திட்டங்கள்,நீட் தேர்வு விலக்கு மசோதா,கூட்டுறவு வங்கிகளில் … Read more

“அண்ணா பிறந்த நாளில் விடுதலை;முதல்வருக்கு நன்றி” – விசிக தலைவர் திருமாவளவன்..!

அண்ணா பிறந்தநாளில் 700 ஆயுள் தண்டனை சிறை கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என முதல்வர் அறிவித்ததற்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்ட தொடரின் இறுதி நாளான இன்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த அறிவிப்புகளில் ஒன்றாக அண்ணா பிறந்தநாளில் 700 ஆயுள் தண்டனை சிறை கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என அறிவித்துள்ளார். இந்நிலையில்,முதல்வரின் இந்த அறிவிப்புக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நன்றி … Read more

#Breaking:”விரைவில் காவல்துறை ஆணையம்;பயண அட்டை” – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

தமிழகத்தில் காவலர்களுக்கென ஒரு ஆணையம் விரைவில் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் காவல்துறை ஆணையம் அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்ட நிலையில்,காவல்துறை ஆணையம் அமைக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது: “தமிழகத்தில் விரைவில் காவல்துறை ஆணையம் அமைக்கப்படும். குறிப்பாக காவலர்கள் பேருந்தில் பயணம் செய்ய பயண அட்டை வழங்கப்படும்.காவலர் முதல் ஆணையர் வரை தங்கள் அடையாள அட்டையை காண்பித்து பேருந்துகளில் பயணிக்கலாம். தமிழகத்தில் … Read more