#Breaking:”விரைவில் காவல்துறை ஆணையம்;பயண அட்டை” – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

தமிழகத்தில் காவலர்களுக்கென ஒரு ஆணையம் விரைவில் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் விரைவில் காவல்துறை ஆணையம் அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்ட நிலையில்,காவல்துறை ஆணையம் அமைக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது:

  • “தமிழகத்தில் விரைவில் காவல்துறை ஆணையம் அமைக்கப்படும். குறிப்பாக காவலர்கள் பேருந்தில் பயணம் செய்ய பயண அட்டை வழங்கப்படும்.காவலர் முதல் ஆணையர் வரை தங்கள் அடையாள அட்டையை காண்பித்து பேருந்துகளில் பயணிக்கலாம்.
  • தமிழகத்தில் புதிதாக 10 காவல்நிலையங்கள், 4 தீயணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.
  • சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ.275 கோடி மதிப்பில் 896 காவலர் குடியிருப்புகள் கட்டப்படும்.
  • ஆவடி, தாம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு தனித்தனி காவல் ஆணையரகங்கள் அமைக்கப்படும்.
  • பொதுமக்கள் தங்கள் குறைகளை காணொலியில் காவல்நிலைய அதிகாரிகளிடம் தெரிவிக்க செயலி உருவாக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.