விமானம் பறக்கும்போதே கழன்று விழுந்த டயர்… வைரலாகும் வீடியோ!

United Airlines flight

Viral Video: ஜப்பான் புறப்பட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் டேக்-ஆப் ஆனபோது டயர் ஒன்று கழன்று விழுந்ததால் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சான் பிரான்சிஸ்கோவில் இருந்து யுனைடெட் ஏர்லைன்ஸ் (போயிங் 777) விமானம் 235 பயணிகள் மற்றும் 14 பணியாளர்களுடன் ஜப்பான் புறப்பட்டு சென்றது. ஆனால், ஓடுதளத்தில் (runway) இருந்து டேக்-ஆப் ஆனபோது, விமானத்தில் இருக்கும் 6 டயர்களில் ஒன்று கழன்று தரையில் விழுந்தது. Read More – டிஜிட்டல் படைப்பாளிகளுக்கு மத்திய … Read more

தாயுடன் உலா வரும் அரிய வெள்ளை சிங்கக்குட்டி! வனத்துறை அதிகாரி வெளியிட்ட வீடியோ.!

தாயுடன் உலா வரும் அரிய வெள்ளை நிற சிங்கக்குட்டி, வனத்துறை அதிகாரி வீடியோ வெளியிட்டுள்ளார். வெள்ளை நிற சிங்கக்குட்டி அதன் தாய் மற்றும் குடும்பத்துடன் காட்டில் சுதந்திரமாக உலா வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய வனத்துறை அதிகாரி(ஐஎஃப்எஸ் அதிகாரி) சுசாந்தா நந்தா, இந்த விடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதோ அரிதாகக்காணப்படும் வெள்ளை நிற சிங்கக்குட்டி, தன் தாயுடன் காட்டில் உலாவி வரும் வீடியோ என்று அவர் அந்த டிவீட்டில் பதிவிட்டிருந்தார். பூனைக்குட்டியா சிங்கக்குட்டியா … Read more

#Video:ஓடும் ரயிலில் கையும் களவுமாக பிடிபட்ட செல்போன் திருடன்..! 15 கிமீ தொங்கவிட்டு போலீசில் ஒப்படைப்பு.!

பீகார் மாநிலத்தில் ஒரு ரயில் நிலையத்தில் ஜன்னல் வழியாக பயணியின் செல்போனை திருட நினைத்த ஒரு திருடனை சக பயணிகள்  ரயில் ஜன்னல் வழியாக லாவகமாக பிடித்து 15 கிமீ தொங்கவிட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர் .  பீகார் மாநிலத்தில் பெகுசாராய் மாவட்டத்தை சேர்ந்த ரயில் பயணி  ஒருவரிடம் அவர் வயதில் பயணித்து கொண்டிருக்கும் போது ஒரு திருடன்  ரயில் ஜன்னல் வழியாக பயணியின் செல்போனை பறித்து கொண்டு தப்பிக்க முயற்சித்தான். அந்த சமயம் சுதாரித்துக்கொண்ட சக பயணிகள், … Read more

காரின் மீது ஏறி நிற்கும் யானை வைரலாகும் வீடியோ!!

யானை ஒன்று தனது முதுகில் ஏற்பட்ட அரிப்பை போக்குவதற்காக காரின் மீது ஏறும் வேடிக்கையான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. பொதுவாக மனிதர்களின் முதுகில் ஏற்படும் அரிப்பை அவர்கள் தங்கள் கைகளை பயன்படுத்தி போக்கிக்கொள்கின்றனர். அதே போல் விலங்குகளுக்கு அரிப்பு ஏற்பட்டால் ஏதேனும் ஒரு மரத்தையோ அல்லது ஏதேனும் பெரிய பொருளின் மீது சாய்ந்து அரிப்பை போக்கி கொள்ளும். அது போல் யானை ஒன்று தனது முதுகில் ஏற்பட்ட அரிப்பை போக்குவதற்காக சாலையில் சென்றுக் கொண்டிருந்த காரின் … Read more

#ViralVideo:”இது என் ஏரியா”…வலிமைமிக்க சிங்கத்தை விரட்டிய சிறிய ஆமை!

காடுகளின் ராஜா,கம்பீரமான சிங்கம் ஒரு சிறிய ஆமையால் விரட்டப்பட்டு விலகிச் செல்லும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.ஆனால்,இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ அதைத்தான் காட்டுகிறது. அந்த வீடியோவில்,குளத்தில் ஒரு இடத்தில் தண்ணீர் அருந்தும் சிங்கத்தை ஒரு சிறிய ஆமை விரட்டுகிறது.சிங்கம் நகர்ந்து மற்றொரு இடத்தில் தண்ணீர் அருந்துகிறது.அப்போதும் இந்த ஆமை தொடர்ந்து விரட்டுகிறது.ஆமை அவ்வாறு செய்வது இது என் ஏரியா என்றும் என் இருப்பிடத்தை குடிப்பதை நிறுத்து என்பது போன்றும் தெரிவிப்பதாக உள்ளது.தன்னை விட பலமடங்கு பெரிய மற்றும் … Read more

வீடியோ வைரல்…முதியவரை உதைத்த போலீஸ்காரர்- கடுமையான நடவடிக்கை வேண்டும் என முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி வலியுறுத்தல்!

உ.பி:போலீஸ்காரர் ஒருவர் கூப்பிய கைகளுடன் நின்ற ஒரு முதியவரை உதைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருவதையடுத்து,அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆர்.கே. விஜ் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் போலீஸ்காரர் ஒருவர் கூப்பிய கைகளுடன் நின்ற ஒரு முதியவரை உதைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.அந்த வீடியோவில்,முதியவர் ஒருவர் கையெடுத்து கும்பிட்டு பேசுவதைக் காணலாம், ஆனால்,அவரை உ.பி.காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் உதைக்கிறார். மேலும்,முதியவரை ‘மனம் குன்றியவர்’ என … Read more

ஆளையே தூக்கிச் சென்ற பட்டம் – நெஞ்சை பதபதைக்க வைக்கும் வீடியோ!

இலங்கையில் ராட்ச பட்டன்களை ஒன்றாக கட்டி பறக்கவிட்ட இளைஞரை பட்டம் தூக்கி சென்றதால் பரபரப்பு. இலங்கை யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் நடத்திய ராட்சச பட்டம் விடும் நிகழ்வு அதிர்ச்சியை உண்டாக்கி விபரீதத்தில் முடிந்தது. பருத்தித்துறை அருகே புலோகி பகுதியில் இளைஞர்கள் சிலர் பெரிய அளவிலான பட்டம் ஒன்றை வானில் பறக்கவிட்டனர். அப்போது பட்டம் வானத்தை நோக்கி பறந்த நிலையில், பட்டத்தின் கயிறை பிடித்திருந்த இளைஞர் எதிர்பாராத விதமாக மேலே தூக்கி செல்லப்பட்டார். இதனை பார்த்த அருகில் மற்ற இளைஞர்கள் … Read more

தந்தை தோல்வியடைந்த வருத்தத்தில் நாற்காலியில் குத்திய மகன் – வைரல் வீடியோ உள்ளே!

ஏபிடி வில்லியர்ஸ் மகன் தனது தந்தை தோல்வியடைந்ததால், நாற்காலியில் கையால் குத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்று இரவு நடந்த ஐபிஎல் 2021 14ஆவது சீசன் 39 ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியை காண்பதற்காக ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் ஏபிடி வில்லியர்ஸ் அவர்களின் மூத்த மகன் டேனியல் வந்திருந்துள்ளான். தனது தந்தை விளையாடுவதை தாயுடன் சேர்ந்து உற்சாகப்படுத்தி கொண்டு இருந்துள்ளார். ஆனால் அவரது … Read more

முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பிட்னஸ் ரகசியம் இதுதான்- வைரல் வீடியோ…!

முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,இன்று சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில்(ECR) சைக்கிள் பயிற்சி மேற்கொண்டார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,காலை நடைப்பயிற்சி, மாலை உடற்பயிற்சி என்பதை மட்டும் தொடர்ந்து செய்து,உடற்பயிற்சி மீது தீவிர காதல் உடையவர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்.இதுவே,அவரது பிட்னஸ் ரகசியமாக கூறப்படுகிறது. ஏனெனில்,முன்னதாக தேர்தல் நேரத்தில் கூட அவர் பயணம் மேற்கொள்ளும் இடங்களில் காலை நடைப்பயிற்சியை விடாமல் செய்து வந்தார்.குறிப்பாக, சில நேரங்களில் நடைப்பயிற்சி போகும் … Read more

திடீரென கீழே விழுந்த மின் விசிறி, நூலிழையில் உயிர் தப்பிய குழந்தை – வைரல் வீடியோ உள்ளே…!

வியட்நாமில் இரவு உணவு அருந்தி கொண்டிருந்த குடும்பத்தினர் மீது மின் விசிறி விழுந்துள்ளது; அதிர்ஷ்டவசமாக அனைவரும் காயங்கள் இன்றி தப்பியுள்ளனர். சில வீடுகளில் மின் விசிறி சரியாக பொருத்தப்படாமல் இருப்பதால் அல்லது மின் விசிறி பொருத்தி நாட்கள் சென்று விட்டால் சில சமயங்களில் கீழே விழுந்து விடுகிறது. எனவே, நாம் மின்விசிறியை மாதம் ஒரு முறையாவது சரியாக உள்ளதா என சோதிப்பது மிகவும் நல்லது. மின்விசிறி கீழே விழுந்தால் நிச்சயம் யாராவது காயம் அடைய கூடிய அளவிற்கு … Read more