இருவேறு இடங்களில் ஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை…!

2 தீவிரவாதிகளை ஜம்மு காஷ்மீரின் இருவேறு இடங்களில்  சுட்டுக்கொன்ற பாதுகாப்புப் படையினர், ஒரு தீவிரவாதியை உயிருடன் பிடித்துள்ளனர். அனந்த்நாக் மாவட்டம் டயல்காம் ((Dialgam)), சோபியான் மாவட்டம் கச்தூரா ((kachdoora)), டிராகத் ((dragad)) ஆகிய பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அந்தப் பகுதிகளை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். இந்த மூன்று இடங்களிலும் தீவிரவாதிகள் – பாதுகாப்புப் படையினர் இடையே விடிய விடிய சண்டை நடைபெற்றது. டயல்காமில் நடைபெற்ற சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதுடன், … Read more

எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் தொடக்கம்…!

காவிரி பிரச்னையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் தொடக்கியது . இதற்கு முன் , திமுக செயற்குழு தீர்மானம் காவிரிப் பிரச்சனையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அடுத்த கட்டப் போராட்டம் குறித்து விவாதிக்கத்  நிறைவேற்றியுள்ளது. உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காத நிலையில் திமுக செயற்குழுவின் அவசரக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று … Read more

சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு பெரிய விசில் அடிக்கத் தயாராகுங்கள் …!நாளை முதல் விசில் அடிக்க கவுன்டர்கள் தொடக்கம் …!

திங்கள்கிழமை (ஏப்ரல் 2-ம் தேதி) 11-வது ஐபிஎல் சீசன் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை  தொடங்குகிறது. 11-வது ஐபிஎல் சீசன் போட்டி வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. சூதாட்ட சர்ச்சை காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக ஐபிஎல்போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டு இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு விளையாட வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, … Read more

திண்டுக்கல்-கரூர் வழித்தடத்தில் திடீரென நிறுத்தப்பட்ட ரயில்கள் …! உணவு, தண்ணீர் இன்றி தவிப்பு…!

திண்டுக்கல்-கரூர்  ரயில் பாதையில் முன்னறிவிப்பின்றி 6 ரயில்கள் ஆங்காங்கே பல மணி நேரமாக நிறுத்தப்பட்டதால் உணவு, தண்ணீர் உள்ளிட்டவை கிடைக்காமல் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர். கரூர் – திண்டுக்கல் ரயில் பாதையில் திண்டுக்கல், ஈரோடு, வேடசந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 6 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. 5 மணி நேரத்துக்கும் மேலாக ரயில்கள் நின்ற இடத்தை விட்டு நகராத நிலையில், உணவு, தண்ணீர் கிடைக்காமல் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர். இதுகுறித்து ஆங்காங்கே இருந்த நிலைய … Read more

மகாராஷ்ட்ர மாநிலம் புனேவில் வருகிற 17ஆம் தேதி புனேவில் தொடங்குகிறது ஆர்எஸ்எஸ் மாநாடு…!

வருகிற 17ஆம் தேதி முதல் 21ம் தேதி வரை  மகாராஷ்ட்ர மாநிலம் புனேவில் ஆர்.எஸ்.எஸ். மாநாடு நடைபெறுகிறது. மத்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான நிலைப்பாடு குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு பாஜகவுக்கு ஆர்.எஸ்.எஸ். அழைப்பு விடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. வேலை வாய்ப்புகளை உருவாக்காமல் இருப்பது,  பல்லாயிரம் கோடிகளில் நடைபெறும் வங்கி மோசடிகள், பொருளாதார சரிவு போன்றவற்றால் பாஜக அரசு செல்வாக்கை இழந்து … Read more

விஜய் ,சிம்புவிற்கு டஃ ப் காம்படீசன் கொடுக்கும் லேடி நடனப்புயல் …!

இந்தி நடிகை, சாயிஷா சாய்கல் ஜெயம் ரவி நடித்த, வனமகன் படத்தின் மூலம், தமிழுக்கு வந்தவர். முதல் படத்திலேயே தன் அபாரமான நடனத்தால், ரசிகர்களை கவர்ந்தார். ஆனால், அவரது புயல் வேக நடனத்தை பார்த்த கோலிவுட் கதாநாயகர்கள் அதிர்ந்து போயினர். தற்போது ஆர்யாவுடன், கஜினிகாந்த் மற்றும் விஜய் சேதுபதியுடன், ஜூங்கா படங்களில் நடித்துள்ளார். இந்த இரு படங்களிலுமே சாயிஷாவுடன் நடனமாடுவதற்கு முன், ஒருமுறைக்கு பலமுறை ஒத்திகை பார்த்த பின்னரே கேமரா முன் வந்திருக்கின்றனர் மேற்படி நடிகர்கள்! ஆடாதது எல்லாம் … Read more

இன்று உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டம்…!

உலகம் முழுவதும் இன்று  ஏசு உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை சாந்தோம் புனித தோமா தேவாலயத்தில் மயிலை மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி தலைமையில் நடைபெற்ற பிராத்தனையில் ஏராளமானோர் குடும்பத்துடன் கலந்துக்கொண்டனர். ஒளியை குறிக்கும் வண்ணம் கைகளில் மெழுகுவர்த்திகள் ஏந்தி அவர்கள் சிறப்பு பிராத்தனை செய்தனர். வாணவேடிக்கைகள் முழங்க, இயேசு உயிர்த்தெழுந்த காட்சி காட்டப்பட்டது. காரைக்கால் பிரசித்தி பெற்ற தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தூத்துக்குடி … Read more

மூன்று நாட்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  நடைபெற்ற வசந்த உற்சவம் நிறைவு….!

மூன்று நாட்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  நடைபெற்ற வசந்த உற்சவம் நிறைவடைந்தது. பால், தயிர் மற்றும் மூலிகை திரவியங்களால் பெருமாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. வருடாந்திர வசந்தோற்சவத்தை முன்னிட்டு, ரத்து செய்யப்பட்ட ஆர்ஜித சேவைகள் அனைத்தும் இன்று முதல் வழக்கம் போல் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

சென்னை மெரினா கடற்கரையில் இன்று பொதுமக்கள் போராட்டம் காரணமாக, அனுமதிக்கப்படவில்லை…!

சென்னை மெரினா கடற்கரையில் இன்று பொதுமக்கள்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டம் காரணமாக, அனுமதிக்கப்படவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து சென்னை மெரினா கடற்கரையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் காவல்நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து, நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை 500-க்கும் மேற்பட்ட போலீசார் விடிய விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடற்கரை உள் சாலையில் … Read more

உலகில் அணுப்போர் தொடங்கினால் இந்த ஆய்வு மையத்தின் மேல் குண்டு வீசினால்…!

 மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தினால் அணு ஆயுதப்போர் ஏற்படும்போது தமிழகம் அழியும் என  தெரிவித்துள்ளார். நியூட்ரினோ திட்டத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் வைகோவின் நடைப்பயணத்தை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். 10 நாட்கள் நடைபெறும் இந்த நடைபயணம் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களின் வழியாகச் சென்று வரும் 9 ந் தேதி தேனி மாவட்டம் கம்பத்தில் முடிவடைகிறது. இந்த நடைப்பயணத்தின் தொடக்க விழாவில் பல்வேறு அரசியல் … Read more