சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை – பேராசிரியர் பணியிடை நீக்கம்!

chennai IIT

சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த மார்ச் 31ம் தேதி ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் சச்சின் குமார் என்ற ஆராய்ச்சி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த தற்கொலைக்கு பேராசிரியர் ஆசிஷ் சென் தான் காரணம் என மாணவர்கள் குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக  ஓய்வு பெற்ற காவல்துறை … Read more

பொறியியல் கல்லூரி… தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடம்.!

இந்திய அளவிலான உயர்கல்வி நிறுவன தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடத்தில் உள்ளது.  இந்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உயர்கல்வி நிறுவனங்களில் 2022க்கான தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், சென்னை ஐஐடி முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் கல்வி நிறுவனம் உள்ளது. மூன்றாவது இடத்தில் மும்பை ஐஐடி உள்ளது.

ஐஐடி மாணவருக்கு வாடகை காரை முன்பதிவு செய்து கொடுத்த இந்திய ரயில்வே

ரயில் ரத்து செய்யப்பட்ட நிலையில்  மாணவனுக்கு வாடகை காரை முன்பதிவு செய்து கொடுத்த இந்திய ரயில்வே-நன்றி தெரிவித்த மாணவன். ஏக்தா நகர் ஸ்டேஷனில் இருந்து வதோதரா ஸ்டேஷனுக்கு செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டதை அடுத்து சென்னை ஐஐடியை சேர்ந்த விண்வெளி பொறியியல் மாணவர் ஒருவருக்கு இந்திய ரயில்வே வாடகை காரை முன்பதிவு செய்து கொடுத்தது. கனமழை காரணமாக ஏக்தா நகர் மற்றும் வதோதராவை இணைக்கும் ரயில் பாதையின் சில பகுதிகள் அடித்து செல்லப்பட்டதாக சத்தியம் காட்வி கூறினார். … Read more

சென்னை ஐஐடியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ..!

சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் ஏற்கனவே 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளனர். அப்பொழுது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கனவே 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஐந்து பேருக்கு … Read more

#Breaking:சென்னை ஐஐடி மாணவி பாலியல் வழக்கு -பேராசிரியர்கள் முன்ஜாமீன் மனு;இயக்குநருக்கு நோட்டீஸ்!

கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் மேற்குவங்கத்தை சார்ந்த தலித் மாணவி தன்னுடன் பயின்ற ஆராய்ச்சி மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரின் அடைப்படையில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டது.இதனால்,8 பேரை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டு ஒரு தனிப்படை மேற்குவங்கம் சென்று சென்னை ஐஐடி முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கிங்சோ … Read more

#BREAKING : சென்னை ஐஐடி மாணவி வன்கொடுமை -முன்னாள் மாணவர் கைது..!

சென்னை ஐஐடியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக முன்னாள் மாணவர் கைது செய்யப்பட்டார்.  கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் மேற்குவங்கத்தை சார்ந்த தலித் மாணவி மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தன்னுடன் பயின்ற ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார். அந்த புகாரின் அடைப்படையில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் … Read more

சென்னை ஐஐடிக்கு புதிய இயக்குநர் நியமனம்!

சென்னை ஐஐடியின் புதிய இயக்குநராக வி.காமகோடி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை ஐஐடியின் புதிய இயக்குநராக வி.காமகோடி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போதயை சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி அவர்கள்,தனது இரண்டாண்டு பதவிக்காலம் முடிந்து,ஓரிரு நாட்களில் ஓய்வுபெற உள்ள நிலையில்,புதிய இயக்குநராக வி.காமகோடி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை ஐஐடியின் கணிப்பொறியில் துறை பேராசிரியரான வி.காமகோடி அவர்கள்,விரைவில் புதிய இயக்குநராக பொறுப்பேற்க உள்ளார்.இவர் சென்னை பல்கலைக்கழக சமஸ்கிருத துறையின் முன்னாள் பேராசிரியர் வீழிநாதன் அவர்களின் மகன் ஆவார்.குறிப்பாக,இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘சக்தி’ என்ற … Read more

“முதல்வரே…!இதனை உறுதி செய்யுங்கள்” – ஓபிஎஸ் வலியுறுத்தல்!

சென்னை:ஐஐடியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நடைமுறை புறக்கணிக்கப்பட்டதாக வந்த செய்தி மிகுந்த வருத்தம் அளிப்பதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் பொதுவாக தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறுவது வழக்கம்.ஆனால்,சென்னை ஐஐடியில் நேற்று முன்தினம் நடைபெற்ற 58 வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புக்கணிக்கப்பட்டதுடன், மாணவர்கள் ஆங்கிலத்தில் உறுதிமொழி ஏற்றபின் சமஸ்கிருதத்தில் இறைவணக்கம் பாடியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் … Read more

“இது தமிழ்த்தாயை அவமதிக்கும் செயலாகும் – பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்!

சென்னை:தமிழகத்தில் நடைபெறும் அனைத்து அரசு விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து கண்டிப்பாக பாடப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் பொதுவாக தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறும்.ஆனால்,சென்னை ஐஐடியில் நேற்று 58 வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புக்கணிக்கப்பட்டதுடன், மாணவர்கள் ஆங்கிலத்தில் உறுதிமொழி ஏற்றபின் சமஸ்கிருதத்தில் இறைவணக்கம் பாடியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் … Read more

காவிரியில் மருத்துவக்கழிவு கலப்பதை தடுக்க நடவடிக்கை – அமைச்சர் மெய்யநாதன்

ஐஐடி நிபுணர் குழு ஆய்வறிக்கையின்படி காவிரியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தகவல். காவிரி ஆற்றில் மருத்துவக்கழிவு, பூச்சிக்கொல்லி, உலோக கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவை கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். காவிரியில் மருத்துவ மாசு அதிகமுள்ளதா என்பதை ஆய்வு செய்ய மாசு கட்டுப்பாட்டு பொறியாளர்கள் மாதிரிகளை சேகரித்துள்ளனர். காவிரி உள்ளிட்ட முக்கிய நீர் ஆதாரங்களை பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் காவிரி … Read more