தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு..!

Cauvery

தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று பிற்பகல் 2 மணி அளவில் டெல்லியில் தொடங்கியது. இந்த கூட்டம் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. இதில் தமிழக, கர்நாடக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில்  தமிழகத்திற்கு பிப்ரவரி மாதத்திற்கான 2.5 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. … Read more

மூன்று மாதங்களுக்கு பிறகு பிப்.1ல் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்!

Cauvery Water Management

பிப்ரவரி 1-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-ஆவது கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு பிறகு பிப்.1ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. கடைசியாக காவிரி மேலாண்மை கூட்டம் நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. இதன்பிறகு மூன்று மாதங்களாக இந்த கூட்டம் நடைபெறவில்லை. இருப்பினும், கடந்த 18ம் தேதி … Read more

நாளை மறுநாள் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்..!

டெல்லியில் நாளை மறுநாள் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற உள்ளது. காணொளி மூலம் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு,கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குழுவின் தலைவர் வினீத் குப்தா அழைப்பு விடுத்துள்ளார் கடந்த 3-ஆம் தேதி நடந்த கூட்டத்தில் 2,600 கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. 3-ம் தேதி கூட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதா..? என கணக்கீடு செய்யப்படும் என … Read more

ஏதோ எதிரி நாட்டோடு மோதுவது போல் நினைக்கிறார்கள் – அமைச்சர் துரைமுருகன்

Tamilnadu Minister Duraimurugan

காவிரி நீர் விவகாரத்தில் தொடர்ந்து கர்நாடகா மற்றும் தமிழக அரசுக்கு இடையே வாக்குவாதம் நடைபெற்ற வண்ணம் உள்ளது. இந்த நிலையில், கடந்த அக்டோபர் 13ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை கூட்டத்தில், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 3,000 கனஅடி நீர் தண்ணீரை அக்டோபர் 16 முதல் அக்டோபர் 31 வரையில் திறக்க வேண்டும் என  கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், கர்நாடகா அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்த அளவை திறந்து விடவில்லை. காவிரி ஒழுங்காற்று … Read more

தமிழகத்திற்கு வினாடிக்கு 2,600 கன அடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை.!

Cauvery River

காவிரி நதியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது தொடர்பாக முடிவுகள் எடுக்க காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. இதில் காவிரி ஒழுங்காற்று குழு, தமிழ்நாடு, கர்நாடகா , கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநில நீர்வளத்துறை நிர்வாகிகளோடு கலந்து ஆலோசனை செய்து முடிவுகளை எடுக்கும். அதன்படி, காவிரி நதியின் நீர்மட்டம் மற்றும் மழையின் அளவு ஆகியவற்றை ஆய்வு செய்து, எந்த அளவிற்கு தண்ணீர் திறந்து விடவேண்டும் என்பதற்கான பரிந்துரைகளை வெளியிடும். இந்த பரிந்துரைகளை … Read more

காவிரியில் வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு!

Cauvery Water Management

காவிரியில் இருந்து வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி, கர்நாடக அரசு தரவேண்டிய உரிய அளவு தண்ணீரை அம்மாநில அரசு தராமல் இருந்து வருகிறது. இதனால் காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை வாரியம், மத்திய அரசு என பல்வேறு முறைகளில் தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு முன்வைத்து வருகிறது. இருப்பினும், கர்நாடக அரசு தண்ணீர் தர மறுப்பு  தெரிவித்து … Read more

16,000 கனஅடி தண்ணீர் வேண்டும்.! இன்று டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை வாரியம்.! 

Cauvery River

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி கர்நாடக அரசு தரவேண்டிய உரிய அளவு தண்ணீரை கடந்த சில மாதங்களாகவே அம்மாநில அரசு தராமல் இருந்து வருகிறது. இதனால் காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை வாரியம், மத்திய அரசு என பல்வேறு முறைகளில் தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு முன்வைத்து வருகிறது. நேற்று முன்தினம் காவிரி ஒழுங்காற்று குழு ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் கலந்து கொண்ட … Read more

காவிரி நீர் விவகாரம்.! தமிழகத்தில் தொடங்கியது முழு கடையடைப்பு போராட்டம்.! 

Metur Dam

இந்த வருடம் பருவமழையானது போதிய அளவில் பெய்யாத காரணத்தால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாமல் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 31 அடியாக சரிவடைந்து, அணையில் வெறும் 8 TMC அளவு தண்ணீர் மட்டுமே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது தமிழகத்தில் சம்பா, தாளடி விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. குடிநீர் … Read more

CauveryIssue : அக்டோபர் 12ஆம் தேதி கூடும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்.!

cauveryIssue

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலம் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திற்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேவையான அளவு தண்ணீர் வழங்க வேண்டும் என தமிழக அரசும், தங்களிடம் போதிய அளவு தண்ணீர் இல்லை என கர்நாடக அரசும் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர். இந்த விவகாரமானது காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம் ஆகிய அமைப்புகளிடத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று … Read more

#BREAKING: மேகதாது அணை குறித்து விவாதிக்க தடை நீட்டிப்பு!

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிப்பதற்கான தடை நீட்டிப்பு. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு செய்து தமிழக அரசு தொடர்ந்த வழக்க்கில் விசாரணையை ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம். காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த உத்தரவு தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் அமர்வில் மேகதாது அணை விவகாரம் … Read more