#Breaking:அதிகாரிகளுக்கு மீண்டும் பாடம் கற்பித்த மழை,வெள்ளம் – சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை:தமிழகத்தில் பெய்துள்ள மழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள வெள்ளம் அதிகாரிகளுக்கு மீண்டும் பாடம் கற்பித்துள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பெய்துள்ள மழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள வெள்ளம் அதிகாரிகளுக்கு மீண்டும் பாடம் கற்பித்துள்ளது என்றும்,அதை முறையாகக் கற்று அடுத்தடுத்த மழைக் காலங்களில் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாதி நாள் தண்ணீருக்காகவும்,மீதி நாட்கள் தண்ணீரிலும் தவிப்பதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.மேலும்,சென்னை உட்பட அனைத்து பகுதிகளிலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற … Read more

#Breaking:மழை நீரில் தத்தளிக்கும் சென்னை – உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

சென்னை:கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பிறகு மழைநீர் தேங்காமல் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக,சென்னையில் கடந்த இரு தினங்களாக ஏற்பட்ட கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சாலைகளில் நீர் தேங்கியுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில்,கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட … Read more

#Breaking:லிவிங் டு கெதர் வாழ்க்கை நடத்துபவர்கள் வழக்கு தொடர உரிமை இல்லை- உயர்நீதிமன்றம் ஆணை!

லிவிங் டு கெதர் வாழ்க்கை நடத்துபவர்கள் குடும்ப நல நீதிமன்றத்தை நாட எந்த சட்டப்பூர்வ உரிமையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.. ஜோசப் பேபி என்பவருடன் சேர்த்து வைக்க கோரி கலைச்செல்வி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்நிலையில், திருமணம் செய்யாமல் லிவிங் டு கெதர் வாழ்க்கை முறையில் சேர்ந்து வாழ்பவர்கள் குடும்ப நல நீதிமன்றத்தை நாட எந்த சட்டப்பூர்வ உரிமையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும்,பணப்பரிவர்த்தனை தொடர்பான முன்விரோதத்தால் … Read more

#Breaking:பக்தர்களுக்கும்,தெய்வத்துக்கும் இடையில் இடைத்தரகர்கள் எதற்கு? – உயர்நீதிமன்றம் கேள்வி..!

கோயிலில் இடைத்தரகர்கள் தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கோயிலில் பக்தர்களுக்கும்,தெய்வத்துக்கும் இடையில் இடைத்தரகர்கள் தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் பக்தர்கள் வலம் வர ஏற்பாடு செய்யக் கோரிய வழக்கில் இத்தகைய கருத்தை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறி பேருந்து நிலையத்திலேயே இடைத்தரகர்களால் ரூ.500 வசூலிக்கப்பட்டதாக மனுதாரர் புகார் அளித்திருந்த நிலையில்,ஆண்டவர் முன் அனைவரும் சமம்.எனவே,கோவிலில் பக்தர்களுக்கும்,தெய்வத்துக்கும் இடையில் … Read more

#Breaking:அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் கே.கே.நகர் வாக்குச்சாவடிக்கு சென்று பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு எதிராக அப்போதைய அதிமுக அரசால் போடப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட திமுகவினர் மனு தாக்கல் செய்திருந்தனர்.மேலும்,10 ஆண்டுகளாக இந்த வழக்கில் எந்த விசாரணையும் நடக்கவில்லை … Read more

கடந்த அதிமுக அரசால் போடப்பட்ட 50 அவதூறு வழக்குகள் ரத்து!

கடந்த அதிமுக அரசால் போடப்பட்ட 50 அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுக அரசால் பத்திரிகையாளர் மற்றும் அரசியல் கட்சி தலைவர் மீது போடப்பட்ட 50 அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிலுவையில் உள்ள அவதூறு வழக்குகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்போது மாநகர குற்றவியல் தலைமை வழக்கறிஞர் தேவராஜன் ஆஜராகி அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுவதற்கான … Read more

#Breaking:”நடவடிக்கை எடுக்க கூட்டுறவு சங்க பதிவாளருக்கு அதிகாரம்” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

முறைகேட்டில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்க கூட்டுறவு சங்க பதிவாளரின் அதிகாரம் செல்லுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபடும் கூட்டுறவு சங்க தலைவரை சஸ்பென்ட்  செய்ய பதிவாளருக்கு அதிகாரம் வழங்கும் சட்ட திருத்தம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,இது தொடர்பாக நீதிமன்றம் கூறுகையில்: “கூட்டுறவு சங்கங்களில் பதவி ஏற்பவர்கள் அதன் சட்ட விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும்.நிர்வாகிகள் விதிமீறலில் ஈடுபட்டால் அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.அதன்படி,முறைகேட்டில் ஈடுபடும் தலைவர் துணைத்தலைவரை சஸ்பென்ட் செய்ய பதிவாளருக்கு … Read more

சமுதாயத்தை கரையான் போல் ஊழல் செல்லரிக்க செய்துவிட்டது – உயர்நீதிமன்றம் வேதனை

சமுதாயத்தை கரையான் போல் ஊழல் செல்லரிக்க செய்துவிட்டது என்று சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. ஊழல் வேர் பரவி கரையான் போல் சமுதாயத்தை செல்லரித்துள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. லஞ்சம் பெறுவது என்பது தற்போது வாடிக்கையாகிவிட்டது என்றும் ஊழல் வழக்குகளில் சிக்குவோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அதிகாரிகள் கடமை எனவும் நிதிபதிகள் வைத்தியநாதன், நக்கீரன் ஆகியோர் ஆதங்கத்துடன் கருத்து கூறியுள்ளனர். மேலும், ஊழல் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தவறுவோருக்கு … Read more

புதுச்சேரி தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

புதுச்சேரில் மூன்று கட்டமாக நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை. புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் வார்டுகள் ஒதுக்கீடு தொடர்பான குறைபாடுகளை நிவர்த்தி செய்யாவிட்டால் தேர்தலுக்கு தடை விதிக்க நேரிடும் என்று புதுச்சேரி தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றதை அடுத்து, 15 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் … Read more

#breaking:கிரிமினல் வழக்குகள் இருந்தால் கிளப்களின் உரிமம் ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

தமிழகத்தில் உள்ள கிளப்களில் பதிவுத்துறை சோதனை நடத்த  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பொழுதுபோக்கு கிளப்களில் பதிவுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும்,இந்த சோதனையின்போது கிரிமினல் வழக்குகள் இருந்தால் கிளப்களின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளப்களில் காவல்துறையினர் சோதனை நடத்த தடை விதிக்க கோரிய கிளப் உரிமையாளரின் கோரிக்கையை நிராகித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் அவர்கள்,கிளப்கள் மற்றும் சொசைட்டிகளில் ஆய்வு செய்வது காவல்துறையின் … Read more