இனி மெட்ரோ தான் சென்னையின் அடையாளம்… ரெடியானது ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ பிளான்.!

Chennai Metro 2nd Phase

Chennai Metro : சென்னையில் தற்போது 2ஆம் கட்ட மெட்ரோ பணிகள் முழு வீச்சில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதற்காக 63,246 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை 2026க்குள் முடித்து 2027ஆம் ஆண்டு 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முனைப்பில் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. Read More – அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமீன்.! தமிழக அரசு கடும் எதிர்ப்பு.!  119 மெட்ரோ நிலையங்கள் … Read more

இஸ்ரோ சுற்றுலா… பெண்கள் உடற்பயிற்சி கூடம்… சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்!

Chennai Coporation Budget 2024 - 2025

சென்னை மாநகராட்சிக்கான 2024–25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ரிப்பன் மாளிகையில் இன்று தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கி நடைபெற்றது. அப்போது, 82 அறிவிப்புகளை கொண்ட சென்னை மாநகராட்சியின் 2024-25 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை அம்மாநகராட்சி மேயர் பிரியா தாக்கல் செய்தார். அதில் கல்வி, பெண்கள், தொழில் மற்றும் மருத்துவ சேவைகள் உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை மாநகராட்சியின் 2024–25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள் குறித்து பார்க்கலாம். கூவத்தூர் … Read more

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மேயர் பிரியா!

mayor priya

தமிழ்நாடு அரசின் 2024-25ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு முதல்முறையாக நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இதன்பின் நேற்று தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நான்காவது முறையாக தாக்கல் செய்து வைத்தார். இதனிடையே, சென்னை மாநகராட்சி 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம் கடந்த 9ம் தேதி சென்னை மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற நிலையில், இன்று சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், … Read more

இன்று சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்..!

Chennai Corporation

சென்னை மாநகராட்சி 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம்  கடந்த 9-ம் தேதி சென்னை மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. அப்போது இந்த பட்ஜெட் தயாரிப்பதற்கு துறை சார்ந்த திட்டங்கள் முன்மொழியப்பட்டன.  இந்நிலையில், இன்று 2024- 2025 ஆம் நிதியாண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை   மேயர் பிரியா தாக்கல் செய்கிறார். சென்னை ரிப்பன் மாளிகை கட்டிடத்தின் கூட்ட அரங்கில் பட்ஜெட் கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.  கூட்டம் தொடங்கியதும் மேயர் பிரியா பட்ஜெட் அறிவிப்புகளை … Read more

புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல்…உதவிக்கரம் நீட்டிய சூர்யா – கார்த்தி.!

suriya karthi

மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட சென்னைக்கு நடிகர்களும் உடன் பிறந்த சகோதரர்களான  சூர்யா மற்றும் கார்த்தி ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து மழைநீர் தேங்கி நிற்கினது. அதனை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மிச்சாங் புயலால் சென்னை மோசமான நிலையில் உள்ளதால், அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. அனைத்து இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன், பெரும்பாலான சாலை போக்குவரத்து … Read more

2015ல் இருந்ததைவிட நிலைமை மிக மோசம்…கொந்தளித்த நடிகர் விஷால்!

Vishal - Chennai mayor

சென்னையில் பெய்துவரும் மழையில் தனது வீட்டிற்குள்ளும் மழை நீர் புகுந்துள்ளதாக நடிகர் விஷால் கூறியுள்ளார். மிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவத்தில் சென்னை தற்போது திணறி வருகிறது. சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயல் தற்போது வெகுவாக குறைந்து சென்னையை விட்டு விலகி மக்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது. மழையின் அளவு குறைந்தாலும் இன்னும் தேங்கிய மழைநீர் வடியாத காரணத்தால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். டிசம்பர் 4 நேற்று (திங்கள்கிழமை) இரவு முழுவதும் சென்னையில் பலத்த … Read more

சென்னையில் 47 ஆண்டுகளுக்கு பின் பெருமழை.. கடந்த 24 மணிநேரத்தில் 34 செ.மீ..

chennai rains

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று முதல் விடிவிடிய கனமழை பெய்து வருவதால் சென்னை பல்வேறு பகுதியில் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி சென்னையே மலையில் தத்தளித்து வருகிறது. இந்த மிக்ஜாம் புயல் வட தமிழகம், தெற்கு ஆந்திர பகுதியில் நிலை கொண்டுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 110 கி.மீ. தொலைவில் இருக்கும் மிக்ஜாம் புயல், நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே நாளை முற்பகலில் தீவிர … Read more

சென்னையில் மழைநீர் தேங்குவது இதனால் தான்.! மாநகராட்சி விளக்கம்.!

Chennai Rains

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து  பெய்து வரும் சூழலில், கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டது. அதே போல நேற்று இரவு முதலே சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு என பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதன் காரணமாக சென்னை … Read more

காலை உணவு திட்டம்: தனியாருக்கு தாரை வார்க்கும் சென்னை மாநகராட்சி… டிடிவி தினகரன் கண்டனம்!

TTV DINAKARAN

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ஓராண்டுக்கு தனியார் வசம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியதாக தகவல் வெளியானது. கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழ்நாட்டில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு பரவலாக வரவேற்பும் கிடைத்தது. இந்த … Read more

2 குப்பை தொட்டி வைக்கவில்லையா.? அபராதம் கட்டுங்கள்.! சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை.!

மக்கும் குப்பை , மக்காத குப்பை என இரு குப்பை தொட்டி வைக்காமல் இருக்கும் சென்னை கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.  சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கடைகளில் மாநகராட்சி அதிரடியாய் சோதனை செய்து வருகிறார்கள். அதாவது கடையில் 2 விதமான குப்பை தொட்டி வைத்து குப்பைகளை சேகரிக்க வேண்டும்.  ஒன்று மக்கும் குப்பை தொட்டி, இன்னொன்று மக்காத குப்பை தொட்டி என இரு குப்பைத்தொட்டிகள் வைத்திருக்க வேண்டும். அப்படி குப்பை தொட்டிகள் வைத்திருக்காத கடைகளுக்கு சென்னை மாநகராட்சி … Read more