ஆந்திராவில் காரில் மோதிய கொள்கலன் லாரி! 4 பேர் பலி!

ஆந்திராவில் காரில் மோதிய கொள்கலன் லாரி. ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில், வியாழக்கிழமை அதிகாலை தேசிய நெடுஞ்சாலையில், திம்மபுரம் கிராமத்திற்கு அருகே ஒரு கொள்கலன் லாரி, எதிரே வந்த காரில் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

நடிகை ரம்யா கிருஷ்ணன் காரிலிருந்து மதுபாட்டில்கள் பறிமுதல்.!

நடிகை ரம்யா கிருஷ்ணன் காரிலிருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது சினிமா வட்டாரத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  சென்னை ஈசிஆர் சாலையில் வாகன சோதனையின்போது நடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் இருந்த மது பாட்டில்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் 24 பீர் பாட்டில்கள்  மற்றும் 8 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கார் ஓட்டுநர் செல்வம் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் பின்னர் சில மணி  நேரத்தில் ஜாமீனில்  விடுவைக்கப்பட்டார். சென்னையில் கொரோனா காரணமாக … Read more

சென்னையில் கடனை அடைப்பதற்காக சொகுசு காரை திருடிய காவலாளி!

சென்னையில் கடனை அடைப்பதற்காக சொகுசு காரை திருடிய காவலாளி. பாலசுப்பிரமணீயம் என்பவர் சென்னையில், அண்ணாநகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் தனியார் கூரியர் நிறுவனம் ஒன்றில்  நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அவர் பணிபுரியும் நிர்வாகம், ஒரு கோடி மதிப்புள்ள சொகுசு காரை வழங்கியுள்ளார்.  இந்நிலையில், இவரது வீட்டி அருகே உள்ள குடியிருப்பில் விஜய்ராம் காவலாளியாக பணியாற்றி வருகிறார். பாலசுப்பிரமணியம், விஜயராமை அவரது கார் ஓட்டுநர் வராத சமயங்களில், ஓட்டுநராக பயன்படுத்தி வந்துள்ளதகா கூறப்படுகிறது.  இதனையடுத்து, … Read more

காரை பிரசவ வார்டாக மாற்றிய போலீஸ்.! பிறந்த குழந்தைக்கு அதிகாரி பெயர் சூட்டிய தாய்.!

காரிலேயே பிரசவம் நடக்க உதவிய பெண் போலீஸ் அதிகாரியின் பெயரையே தன் குழந்தைக்கு சூட்டி நன்றி கடன் செலுத்திய தாய். ராஜஸ்தான் பார்மர் பகுதியை சேர்ந்த நைனு கன்வார் என்பவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவலி ஏற்பட்டது. உடனடியாக அவரது சகோதரர் தனது காரில் நைனுவை ஜோத்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது பாதி வழியிலேயே கார் பழுதாகி நின்றுவிட, என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளார். நிறைமாத கர்ப்பிணிக்கு … Read more

ஒரே வீடியோ காலில் , 3700 ஊழியர்களின் வேலையை காலி செய்த UBER நிறுவனம்

முண்ணனி நிறுவனமான UBER நிறுவனம் அதன் இயக்க செலவுகளை குறைக்க சுமார் 3,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களின் காரணமாக பொருளாதார தாக்கம் மற்றும் சவால்கள், சர்வதேச சந்தையில் நிலவும் நிச்சியமற்ற சூழல் ஆகியவற்றின் காரணமாக உபர் நிறுவனம் அதன் இயக்க செலவுகளை குறைக்க சுமார் 3,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.  இந்த ஊழியர்கள் உபர் நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் … Read more

சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்.. உயிர் தப்பிய பயணிகள்!

சென்னை அருகே உள்ள உரப்பாகத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ விபத்தை அறிந்த ஓட்டுநர் உட்பட மூன்று பேர், காரிலிருந்து கீலே இறங்கியதால் உயிர் தப்பினர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர். இந்த விபத்தால் அங்கு ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

அமெரிக்காவில் சாலையில் தாறுமாறாக கார் ஒட்டிய 5 வயது சிறுவன்!

சாலையில் வேகமாக கார் ஓட்டி போலீசாரின் பிடியில் சிக்கிய 5 வயது சிறுவன்.  நெடுஞ்சாலையில், அமெரிக்காவின் உட்டா மாகாண காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஒரு கார் மட்டும் சாலை விதிகளை கடைபிடிக்காமல், தாறுமாறாக சென்று கொண்டிருந்தது. இதனை உற்று கவனித்த காவல்துறையினர் வாகனத்தை மறித்து, அந்த காரை சோதனை செய்தபோது அந்த காரை 5 வயது சிறுவன் தனியாக இயக்கி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த சிறுவனை பிடித்த போலீசார் … Read more

ஸ்ரீபெரும்புத்தூரில் கார் மோதியதில் சமையல் சிலிண்டர் லாரி தீ விபத்து!

இன்று பல இடங்களில் தீ விபத்து ஏற்படுவது மிகவும் சகஜமாக மாறி உள்ளது. இதற்க்கு நம்முடைய கவனாக குறைவும் ஒரு காரணமாக இருக்கிறது.  இந்நிலையில், சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புத்தூரில் சமையல் சிலிண்டர் லாரி தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னை – பெங்களூரு சாலையில் இருவழியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வந்த கார் மோதியிதில் லாரி தீப்பிடித்து எரிந்தது.

அரசுக்கு கட்டுப்பட்டு அவசர தேவைகளுக்கு மட்டுமே எங்கள் சேவை தொடரும்! ஓலோ கார் டாக்சி நிறுவனம்!

உலகளவில் பல்லாயிரக்கணக்கானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இந்த கொரோனா வைரசுக்கு 7 பேர் இதுவரையில் பலியாகியுள்ளதாகவும், 460 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.  இந்நிலையில், அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு கார் சர்விஸ் நிறுவனமாகிய ஓலா நிறுவனம் குறைந்த வாகனங்களுடன், அவசர தேவைக்கு மட்டுமே வரும் என ஓலா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கார் சந்தையில் கலக்கும் ஹூண்டாய் இறக்கப்போகிறது தனது டர்போ ரக காரை களத்தில்.. எதிர்பார்ப்பில் வாகன பிரியர்கள்…

கார் சந்தையில் கலக்கும் ஹூண்டாய் இந்தியா நிறுவனம் புதிய கிராண்ட் I 10 நியோஸ் டர்போ ரக கார் விற்பனைக்கு அடுத்த சில மாதங்களில் வர உள்ளது. இதன் வரவை கார் பிரியர்கள் கண் இமைக்காத எதிர்பார்ப்பு. இந்த கார்,  டர்போ பெட்ரோல் என்ஜினை கொண்டது. மேலும், இந்த கார் தோற்ற அமைப்பில் முன்புறத்தில் கருமை நிறத்திலான ஃபினிஷ் செய்யப்பட்ட கிரில் மற்றும் டர்போ பேட்ஜிங் மற்றும் கருப்பு நிற மேற்கூறையை பெற்றள்ளது. இதன்  இன்டிரியரை பொறுத்தவரை … Read more