விவசாயிகள் வழி விடாததால் சடலத்தை பாலத்தின் மேலே இருந்து இறக்கிய அவலம் !

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நாராயணபுரம் காலனி உள்ளது. இங்கு வாழும் பட்டியலினத்தவர்களுக்கு  தனி சுடுகாடு ஒன்று உள்ளது. ஆனால்  சுடுகாட்டில் போதிய வசதி இல்லாததால் அவர்கள் இறந்தவர்களை பாலாற்றங்கரை சுடுகாட்டிற்கு கொண்டு செல்கின்றனர். ஆனால்  சில ஆண்டுகளுக்கு முன்பாக பாலாற்றை கடக்க பாலம் கட்டப்பட்டது. இதனால் பாலாற்றின் இருமருங்கிலும் ஆற்றுக்கு செல்லும் பாதைகளை வேலி அமைத்து பாதையை மறித்து விட்டதாக கூறப்படுகிறது .இதை தொடர்ந்து  நாராயணபுரம் காலனி சார்ந்தவர்கள் இறந்தால் அவ்வழியாக எடுத்துச் செல்ல விவசாயிகள்  … Read more

மும்பையில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 30-க்கு மேற்பட்டோர் காயம்:4பேர் பலி !!!

சாலைக்கு மேல் ரெயில் நிலையத்திற்கு செல்லும் வகையில் இருந்த பாலம்  இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 30க்கும் மேற்பட்டோர்  காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் 4 பேர் உயிரிழந்தனர். மும்பையில்  சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம் அருகே உள்ள நடைமேம்பாலம் நேற்று  மாலை இடிந்து விழுந்தது. சாலைக்கு மேல் ரெயில் நிலையத்திற்கு செல்லும் வகையில் இருந்த நடைமேம்பாலம் இடிந்து விழுந்தது. அதில் சென்று கொண்டிருந்த பயணிகள் விழுந்தனர். மேம்பாலம் விழுந்ததில் அப்பகுதியே புகை மூட்டமாக காணப்பட்டது.  உடனடியாக … Read more

டேராடூனில் பாலம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி…!!

டேராடூனில் உள்ள பாலம் இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.3 பேர் படுகாயமடைந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மலை பகுதியில் டிராக்டர் ஒன்று சென்றுள்ளது. அந்த டிராக்டர் அங்கிருந்த பாலத்தை கடந்தபோது பாரம் தாங்காமல் பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மலை பகுதி என்பதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எத்தனை பேர் டிராக்டரில் சென்றனர் என்பது குறித்த தகவல் தெரியாததால் … Read more

ஆசியாலே மிக நீளமான ரயில்வே மற்றும் சாலை பாலம்…..திறந்து வைத்தார் பிரதமர் மோடி…!!

ஆசியாவின் மிக நீளமான ரயில்வே மற்றும் சாலை போக்குவரத்து பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்கள் வழியாக ஓடும் பிரம்மபுத்திரா நதியின், வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து பயன்பாட்டிற்காக ஈரடுக்கு போகிபீல் பாலம் புதிதாக கட்டப்பட்டது.இந்த பலம் சுமார் 4 .94 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.இந்த பாலம் கட்டுவதற்கு ரூபாய் 5,920 கோடி செலவு செய்யப்பட்ட  இப்பாலம் ஆசியாவின் இரண்டாவது மிகப் நீண்ட பாலம் ஆகும். … Read more

9 மாதங்கள் முடிந்தது..!முடிவில்லை சீரமைப்பு பணி..!!சிரமத்தில் மக்கள்…!!

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே 9 மாதங்களுக்கும் மேல் நடைபெற்று வரும் பாலம் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை – தூத்துக்குடி இடையிலான நான்குவழிச் சாலையில் வல்லநாடு அருகே தாமிரபரணி ஆற்றின் மீது 2 பாலங்கள் கட்டப்பட்டன. கடந்த ஆண்டு இவற்றில் ஒரு பாலத்தில் விரிசல் ஏற்பட்டு, பல்வேறு இடங்களில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து துளைகள் ஏற்பட்டன. இவற்றை சீரமைக்கும் பணிகள் கடந்த நவம்பர் மாதம் தொடங்கின. இதற்காக பாலத்தின் சிமெண்ட் … Read more

மதுரையில் மணல் தொழிற்சாலையை எதிர்த்து மக்கள் முற்றுகை போராட்டம் ..,

மேலூர்:  அய்யாஊத்து கண்மாய் கொட்டாம்பட்டி யூனியன், சொக்கம்பட்டி ஊராட்சியில் உள்ளது . எம் சாண்ட் தயாரிக்கும் மணல் தொழிற்சாலை  நீர்ப்பிடிப்பு பகுதியில் பாலம் அமைத்து சொக்கம்பட்டி ஊராட்சியில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு கிராம மக்கள் ஆரம்பம் முதல்   எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு இடங்களில் கிராமமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த பாலம்  நீர் நிலைகளை ஆக்கிரமித்து தொழிற்சாலைக்கு செல்வதற்கு இங்கு கட்டப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் பாதிப்பதுடன், விவசாயமும் அழிந்துவிடும் என்று கிராம மக்கள் குற்றம் … Read more

சீனாவில் உலகின் நீண்ட மின்பாதைத் அமைக்கும் பணி தீவிரம் !

சீனாவில் உலகின் நீண்ட மின்பாதைத் திட்டத்தின் ஒரு பகுதியாக மஞ்சளாற்றின் இரு கரைகளிலும் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டுக் கம்பி வடங்களைக் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. சீனாவின் மேற்கில் உய்குர் என்னுமிடத்தில் இருந்து கிழக்கே அன்குய் வரை 3ஆயிரத்து 320கிலோமீட்டர் தொலைவுக்கு ஆயிரத்து நூறு கிலோவோல்ட் திறன் கொண்ட மின்னாற்றலைக் கடத்தும் மின்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பணி அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும். இதன் ஒரு கட்டமாக பையின் என்னுமிடத்தில் மஞ்சளாற்றின் இருகரைகளிலும் … Read more