ஆசியாலே மிக நீளமான ரயில்வே மற்றும் சாலை பாலம்…..திறந்து வைத்தார் பிரதமர் மோடி…!!

ஆசியாவின் மிக நீளமான ரயில்வே மற்றும் சாலை போக்குவரத்து பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்கள் வழியாக ஓடும் பிரம்மபுத்திரா நதியின், வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து பயன்பாட்டிற்காக ஈரடுக்கு போகிபீல் பாலம் புதிதாக கட்டப்பட்டது.இந்த பலம் சுமார் 4 .94 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.இந்த பாலம் கட்டுவதற்கு ரூபாய் 5,920 கோடி செலவு செய்யப்பட்ட  இப்பாலம் ஆசியாவின் இரண்டாவது மிகப் நீண்ட பாலம் ஆகும்.
1997ஆம் ஆண்டின் அப்போதைய பிரதமராக இருந்த தேவே கவுடாவால் அடிக்கல் நாட்டிய இந்த பாலத்தின் கீழ் தளத்தில் இருவழி தடங்களை கொண்ட ரயில் பாதையும், மேல்தளத்தில் 3 வழிச்சாலையும் அமைக்கப்பட்டு காண்போரை பிரமிக்க வைக்கின்றது.இந்த மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி நிறைவடைந்தது. 2002ஆம் ஆண்டில் போதைய பிரதமராக இருந்த வாஜ்பாயால் இந்த பழத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில்  வாஜ்பாயின்  பிறந்தநாளில் பிரதமர் நரேந்திரமோடியால்  திறந்து வைக்கப்பட்ட இந்த பாலம் நாட்டிற்கு  அற்பனில்லப்பட்டது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment