அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி! உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கினை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் பாப்டே,சந்திராசூட்,அசோக் பூஷன்,அப்துல் நாசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை வாசித்தனர். அதில் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள் இதோ! மீர்பாகி என்பவரால் பாபர் கோவில் கட்டப்பட்டது. . காலியாக இருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை. மதங்களுக்குள் இருக்கும் நம்பிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் மதிப்பளிக்கிறது. … Read more

அயோத்தி தீர்ப்பு : உலக அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ் டேக்குகள்

அயோத்தி தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து சமூக வலைத்தளமான ட்விட்டரில் உலக அளவில் ஹேஷ் டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றது.அதன்படி,#AYODHYAVERDICT என்ற ஹேஷ் டேக் உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது.இதனை தொடர்ந்து #RamMandir, #AyodhyaJudgment, #JaiShriRam #BabriMasjid என்ற ஹேஷ் டேக்குகள்  2-வது , 3-வது,4-வது மற்றும் 5-வது இடங்களில் ட்ரெண்டாகி வருகிறது.    

#BIGBREAKING : அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை இந்து அமைப்பான ராமஜென்ம அமைப்பிற்கு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.மேலும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்க்கு 3 மாதத்திற்குள் அறக்கட்டளை ஒன்றை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், முஸ்லீம் அமைப்பான சன்னி வக்ஃபு வாரிய அமைப்பிற்கு 3 மாதங்களுக்குள் 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாபர் மசூதி காலி இடத்தில் கட்டபடவில்லை! அங்கே ஒரு கட்டிடம் இருந்துள்ளது! – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

நாடே பரபரப்பாக காத்துகொண்டு இருந்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கபட உள்ளது. இந்த தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு  வாசித்து வருகின்றனர். அதில் சர்ச்சைக்குரிய இடத்தில் கட்டப்பட்ட பாபர் மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை. எனவும், மேலும், அங்கு அந்த இடத்தில ஒரு கட்டிடம்  இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக தொல்லியல் துறை தரவுகள் தெரிவிப்பதாவும் தீர்ப்பில் வாசிக்கப்பட்டு வருகின்றனர்.

அயோத்தி வழக்கு : ஷியா பிரிவின் மனு தள்ளுபடி

அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்,நீதிபதிகள் பாப்டே,சந்திராசூட்,அசோக் பூஷன்,அப்துல் நாசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை வாசித்து வருகிறது.அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒரே விதமான தீர்ப்பை அளிக்கும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அறிவித்தார். இதில்,அயோத்தி நிலத்தை உரிமை கோரிய ஷியா பிரிவின் மனுவை  தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்.  

அயோத்தி தீர்ப்பு ! உயர் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை

அயோத்தி தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஆலோசனையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உளவுத்துறை தலைவர் அரவிந்த் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

அயோத்தி வழக்கு ! தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும் – முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்

அயோத்தி தீர்ப்பு வருவதையொட்டி தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டது.இந்த அறிவிப்பு வெளியானது முதல் நாடு முழுவதும் பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.முக்கியமான  இடங்களில் பல்லாயிரக்கணக்கான  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அயோத்தி தீர்ப்பு தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிவிப்பில், சாதி,மத பூசல்கள் இன்றி அனைத்து … Read more

அயோத்தி வழக்கு ! அமைதியை கடைபிடிக்க வேண்டும் – பிரதமர் நரேந்திர மோடி

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியான பின்னர் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அயோத்தி வழக்கில்  தீர்ப்பு இன்று  அறிவிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டது.இந்த அறிவிப்பு வெளியானது முதல் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புகள்போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அயோத்தி தீர்ப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், உச்சநீதிமன்றம் அயோத்தி வழக்கில் என்ன தீர்ப்பு வழங்கினாலும் ,அந்த தீர்ப்பு யாருக்கும்  வெற்றியும் அல்ல ,தோல்வியும் அல்ல.தீர்ப்பு வெளியான பின்னர் அமைதியை கடைபிடிக்க … Read more

நாடே எதிர்பார்க்கும் அயோத்தி வழக்கு ! இன்று வெளியாகிறது தீர்ப்பு

நாடே எதிர்பார்க்கும் அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிறது உச்சநீதிமன்றம். அயோத்தியில்  1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது.நாடு முழுவதும்  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு முன்பிருந்தே, அங்குள்ள 2.77 ஏக்கர் நிலத்தை உரிமை கொண்டாடுவதில் பிரச்சினை இருந்தது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில்,அயோத்தி வழக்கில் 40 நாட்கள் விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தது.இந்த விசாரணை அனைத்தும் முடிவடைந்த பின்பு அயோத்தி வழக்கின் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் … Read more

அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு ! தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்

அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாவதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுளள்து. அயோத்தி வழக்கில்  தீர்ப்பு நாளை அறிவிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டது.இந்நிலையில்  அயோத்தி தீர்ப்பு வெளியாவதையொட்டி தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் சென்னையில் தலைமைச் செயலகம், நீதிமன்றங்கள்.முக்கிய வழிபாட்டுத்தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு முக்கிய இடங்களில் கண்காணிப்பு மற்றும் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.