அயோத்தி வழக்கில் சீராய்வு மனுவை தாக்கல் -அகில இந்திய முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியம்..!

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அயோத்தி சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. சமரச குழுவின் முயற்சி தோல்வி அடைந்ததால் இந்த வழக்கு தொடர்ந்து 40 நாட்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை கடந்த 9-ம் தேதி உச்ச நீதிமன்றம் … Read more

அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி நசீர் க்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி அப்துல் நாசீருக்கும் அவருக்கும் குடும்பத்தினருக்கும் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்,நீதிபதிகள் பாப்டே,சந்திராசூட்,அசோக் பூஷன்,அப்துல் நாசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பு நாடு முழுவதும் சுமூகமாக அமைந்தது. இந்த நிலையில் இந்த தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதியான … Read more

உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனு..!

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என தீர்ப்பளித்தது.மேலும் இஸ்லாமியர்கள் மசூதி கட்டஅவர்கள் கேட்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் தரவேண்டும் என கூறியது. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் தலைவர் மவுலானா வாலி ரஹ்மானி தலைமையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்பதா அல்லது மறுசீராய்வு மனு தாக்கல் … Read more

அயோத்தி தீர்ப்பு : உலக அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ் டேக்குகள்

அயோத்தி தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து சமூக வலைத்தளமான ட்விட்டரில் உலக அளவில் ஹேஷ் டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றது.அதன்படி,#AYODHYAVERDICT என்ற ஹேஷ் டேக் உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது.இதனை தொடர்ந்து #RamMandir, #AyodhyaJudgment, #JaiShriRam #BabriMasjid என்ற ஹேஷ் டேக்குகள்  2-வது , 3-வது,4-வது மற்றும் 5-வது இடங்களில் ட்ரெண்டாகி வருகிறது.    

அயோத்தி தீர்ப்பு ! உயர் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை

அயோத்தி தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஆலோசனையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உளவுத்துறை தலைவர் அரவிந்த் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

அயோத்தி தீர்ப்பு..! உச்சநீதிமன்ற பகுதியில் 144 தடை உத்தரவு..!

நீண்டகாலமாக இழுபறியில் இருந்த அயோத்தி  வழக்கின் இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு வெளியிட உள்ளது. நாடு முழுவதும் இதற்காக பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்நிலையில் அயோத்தி தீர்ப்பையொட்டி உச்சநீதிமன்ற வளாகம் அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு. உச்சநீதிமன்ற வளாகத்தை சுற்றி பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அயோத்தி இறுதி தீர்ப்பு..! முத்துபேட்டை தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!

அயோத்தி வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று காலை 10 .30 மணிக்கு வெளியிடப்படும் என உச்சநீதிமன்றம் கூறியது.இதை தொடர்ந்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இறுதி தீர்ப்பு வழங்குவதால் பல மாநிலங்களில் உள்ள பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம்  முத்துபேட்டை தாலுகாவில்  உள்ள அனைத்து பள்ளிகளுக்கு  இன்று மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது .

அயோத்தி வழக்கு..! கர்நாடகா, ஜம்மு ,டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை ..!

அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உத்தரபிரதேசத்தில் இன்று முதல் திங்கள் வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து  கர்நாடகா, ஜம்மு மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளன. மேலும்  டெல்லியில் கூட அனைத்து அரசுப் பள்ளிகளும் , பல … Read more

அயோத்தி தீர்ப்பு முன்னெச்சரிக்கை! தமிழகத்தில் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை

அயோத்தி வழக்கில்  தீர்ப்பு இன்று  அறிவிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பால்  எந்தவிதமான அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க நாடு முழுவதும் பலத்த போலீஸ் மற்றும் துணை இராணுவத்தினர் மூலம் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்து உள்ளார்.