தமிழக கல்வி வளர்ச்சிக்கு பிரதமரின் உறுதுணை தேவை – அமைச்சர் பொன்முடி

இந்தியாவிலேயே முதன்முறையாக பெண் கல்விக்கு ஊக்கத்தொகை அரிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பொன்முடி பேச்சு. அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழா இன்று சென்னை கிண்டியிலுள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்று வருகிறது. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி, துணைவேந்தர் வேல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உயர்கல்வி பயில்வோரின் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. மாணவர்கள் தங்களுடைய எதிர்கால வாழ்க்கையில் வளம் பல … Read more

ஜூலை 29-ல் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. பிரதமர் மோடி பங்கேற்பு!

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பட்டங்களை வழங்குகிறார். ஜூலை 29 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் 42-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. சென்னையில் நடைபெற உள்ள அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, பட்டங்களை வழங்குகிறார். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை வரும் பிரதமர் மோடி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். மேலும், இவ்விழாவில் ஆளுநர், முதலமைச்சர் முக ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரும் … Read more

#Breaking:பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.தரவரிசைப் பட்டியலின்படி,சென்னை கிண்டி,குரோம்பேட்டை பொறியியல் கல்லூரிகள் முதல் இரு இடத்தை பிடித்துள்ளன. இதனைத் தொடர்ந்து,பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை பார்த்து கல்லூரிகளை தேர்வு செய்யலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும்,பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலைக் காண https://www.annauniv.edu/pdf/COLLEGE%20RANKING%20BASED%20ON%20PERCEPTION.pdf இங்கே க்ளிக் செய்யவும்.

#Breaking:225 BE கல்லூரிகளுக்கு திடீர் நோட்டீஸ்;மாணவர் சேர்க்கைக்கும் அனுமதி இல்லை – அண்ணா.பல்.கழகம் எச்சரிக்கை!

தமிழகத்தில் உள்ள 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அதில்,தகுதியான ஆசிரியர்கள் மற்றும் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது குறித்து கல்லூரிகள் இரண்டு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என அண்ணா பல்.கழகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி,உரிய விளக்கம் தராத கல்லூரிகளுக்கு அங்கீகார நீட்டிப்பு இல்லை என்றும்,மாணவர் சேர்க்கைக்கும் அனுமதி வழங்கப்படாது எனவும் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் தங்களது கட்டுப்பாட்டின்கீழ் உள்ள 476 பொறியியல் கல்லூரிகளை ஆய்வு செய்த பிறகு அதில் 225 கல்லூரிகளுக்கு இத்தகைய உத்தரவை அண்ணா … Read more

போலி E – Mail – அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் இருப்பதாக கூறி முன் பணம் கேட்டு வரும் இ-மெயில்கள் போலியானவை என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான முன்பதிவு ஜூன் 20 முதல் ஆன்லைனில் தொடங்க உள்ளது. மேலும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை குறித்த தவறான தகவல் பரவி வருகிறது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் … Read more

#Breaking:10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடல் – அண்ணா பல்.கழகம் அறிவிப்பு!

தமிழகத்தில் சமீபகாலமாக பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில்,வருகின்ற கல்வியாண்டுக்கான அங்கீகாரம் பெறுவதற்கு 10 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்கவில்லை என்பதனால் அவை வரும் கல்வியாண்டு முதல் மூடப்படவுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக,போதிய மாணவர்கள் இல்லாத காரணத்தினால்,வருகின்ற கல்வி ஆண்டிற்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை நாங்கள் நடத்தவில்லை என்று கூறி தமிழகத்தில் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் கடிதம் அனுப்பியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தின்  கீழ் 494 தனியார் கல்லூரிகள் … Read more

TANCET2022:டான்செட் நுழைவு தேர்வு ரிசல்ட் தேதி எப்போது?- அண்ணா பல்.கழகம் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில்,எம்பிஏ,எம்சிஏ உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஆண்டு தோறும் அண்ணா பல்கலைக் கழகத்தால் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) நடத்தப்படுகிறது. அந்த வகையில்,நடப்பு ஆண்டில் தமிழகத்தில் டான்செட் நுழைவு தேர்வு தேர்வு கடந்த மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. குறிப்பாக,எம்சிஏ படிப்புகளுக்கு மே 14 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 … Read more

பொறியியல் கலந்தாய்வில் வருகிறது மாற்றம் – சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்

பொறியியல் கலந்தாய்வை 10 இடங்களில் நடத்தலாமா என்பது குறித்து அரசு பரிசீலினை என அமைச்சர் தகவல். தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைப்பெறுகிறது. அப்போது, கேள்வி – பதில் நேரத்தில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வை சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் 10 இடங்களில் நடத்தலாமா என்பது குறித்து அரசு பரிசீலினை செய்து வருவதாக தெரிவித்தார். ஆன்லைன் கலந்தாய்வில் … Read more

சான்றிதழ் கட்டணத்தை 10 மடங்கு உயர்த்திய அண்ணா பல்கலைக்கழகம்…!

அண்ணா பல்கலைக்கழகம் தொலைந்துபோன Grade / Mark Sheet-ஐ மீண்டும் பெற ரூ.300-ஆக இருந்த கட்டணம் ரூ.3,000-ஆகவும், Degree Certificate-க்கு கட்டணம் ரூ.3,000-ல் இருந்து ரூ.5,000 ஆகவும் உயர்த்தி உள்ளது.  கிரேடு, மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால், புதிய சான்று பெறுவதற்கான கட்டணத்தை அண்ணா பல்கலைக்கழகம் 10 மடங்கு உயர்த்தியுள்ளது. அதனபடி, தொலைந்துபோன Grade / Mark Sheet-ஐ மீண்டும் பெற ரூ.300-ஆக இருந்த கட்டணம் ரூ.3,000-ஆகவும், Degree Certificate-க்கு கட்டணம் ரூ.3,000-ல் இருந்து ரூ.5,000 ஆகவும் … Read more

#TANCET2022:டான்செட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு – லிங்க் இதோ!

அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில்,எம்பிஏ,எம்சிஏ உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஆண்டு தோறும் அண்ணா பல்கலைக் கழகத்தால் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) நடத்தப்படுகிறது. அந்த வகையில்,நடப்பு ஆண்டில் தமிழகத்தில் டான்செட் தேர்வு மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.குறிப்பாக, எம்சிஏ படிப்புகளுக்கு மே 14 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும்,பிற்பகல் 2:30 முதல் மாலை … Read more