TANCET2022:டான்செட் நுழைவு தேர்வு ரிசல்ட் தேதி எப்போது?- அண்ணா பல்.கழகம் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில்,எம்பிஏ,எம்சிஏ உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஆண்டு தோறும் அண்ணா பல்கலைக் கழகத்தால் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) நடத்தப்படுகிறது.

அந்த வகையில்,நடப்பு ஆண்டில் தமிழகத்தில் டான்செட் நுழைவு தேர்வு தேர்வு கடந்த மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. குறிப்பாக,எம்சிஏ படிப்புகளுக்கு மே 14 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும்,பிற்பகல் 2:30 முதல் மாலை 4:30 மணி வரையிலும் தேர்வு நடைபெற்றது.மேலும்,எம்இ,எம்டெக்,மார்ச்,எம்பிலான் படிப்புகளுக்கு மே 15 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை தேர்வு நடைபெற்றது.

இந்நிலையில்,அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கான (TANCET) ரிசல்ட் தேதியை அறிவித்துள்ளது.அதன்படி, டான்செட் நுழைவு தேர்வு முடிவானது அடுத்த மாதம் ஜூன் 10 அல்லது அதற்கு முன் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே,தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tancet.annauniv.edu/tancet/index.html ஐப் பார்வையிடுவதன் மூலம் டான்செட் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று அண்ணா பல்கழைக்கழகம் தெரிவித்துள்ளது.

TANCET 2022 முடிவுகளை எவ்வாறு பதிவிறக்குவது?:

  • https://tancet.annauniv.edu/tancet/index.html இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
  • முகப்புப் பக்கத்தில், “TANCET 2022 Result” என்று எழுதப்பட்ட இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • உள்நுழைவு விவரங்களை உள்ளிடவும்.
  • உங்கள் TANCET 2022 முடிவுகள் திரையில் காட்டப்படும்.
  • அதன்பின்னர்,டான்செட் தேர்வு முடிவைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

Leave a Comment