தமிழக கல்வி வளர்ச்சிக்கு பிரதமரின் உறுதுணை தேவை – அமைச்சர் பொன்முடி

இந்தியாவிலேயே முதன்முறையாக பெண் கல்விக்கு ஊக்கத்தொகை அரிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பொன்முடி பேச்சு.

அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழா இன்று சென்னை கிண்டியிலுள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்று வருகிறது. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி, துணைவேந்தர் வேல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உயர்கல்வி பயில்வோரின் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.

மாணவர்கள் தங்களுடைய எதிர்கால வாழ்க்கையில் வளம் பல பெற்று, நலமோடு வாழ, நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக பல்வேறு சாதனைகளை உயர்கல்வித் துறையில் செய்துள்ளார் முதலமைச்சர். வேலை தேடுவோராக இன்றி, வேலை தருவோராக மாற வேண்டும் என்ற அடிப்படையில் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் தான் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்காக ரூ.1000 ஊக்கத்தொகை திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு தொழிற்கல்வியில் அளிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் நுழைவுத் தேர்வை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ரத்து செய்ததால், அதில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. எனவே, தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்கு பிரதமர் மோடி உறுதுணையாக இருக்க வேண்டும். பிரதமர் நிச்சயம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவார் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன் என்று தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment