#JustNow: TANCET தேர்வு – நாளை மறுநாள் ஹால் டிக்கெட் வெளியீடு!

நாளை மறுநாள் முதல் 13-ம் தேதி வரை ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. 2022 -23 ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை (PG) பொறியியல், எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு (TANCET) எழுத வேண்டும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. அதன்படி, வரும் கல்வியாண்டில் முதுநிலை பொறியியல், MBA, MCA மற்றும் ME/ M.Tech/ M. Arch/ M.Plan படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மார்ச் … Read more

டிப்ளமோ படித்தவர்களுக்கு ஓர் நற்செய்தி – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

முதலமைச்சரின் இரு கண்களாக இருப்பது கல்வியும், சுகாதாரமும் தான் என பேரவையில் அமைச்சர் புகழாரம். தமிழக சட்டமன்றத்தில் பதிலுரையின் போது பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர், இனி டிப்ளமோ படித்தவர்களும், Lateral Entry மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேரலாம் என அறிவித்தார். அதாவது, பாலிடெக்கனிக் முடித்த மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் 2ம் ஆண்டு சேரலாம் என தெரிவித்தார். பாலிடெக்கனிக் கல்லூரிகளில் 5 புதிய பாட பிரிவுகள் தொடங்கப்படும் என்றார். 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் … Read more

TANCET தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

TANCET நுழைவுத் தேர்வுக்கு வரும் 30-ம் தேதி முதல் ஏப்ரல் 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. வரும் கல்வியாண்டில் MBA, MCA, M.E., M.Tech, M.Plan., M.Arch., உள்ளிட்ட படிப்புகளில் சேர TANCET நுழைவுத் தேர்வுக்கு மார்ச் 30 முதல் ஏப்ரல் 18 வரை https:/tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. TANCET தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு#tancet #AnnaUniversity pic.twitter.com/3CpkhgX4Gw — Dinasuvadu … Read more

10,000 மாணவர்களுக்கு அப்சென்ட் – அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி

கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மார்ச் 14-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய பி.இ, பி.டெக் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் காலை 9 மணி அளவில் தேர்வு எழுத தொடங்கி மதியம் 12:30 மணியளவில் சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் ஒன்றரை மணி நேரம் கூடுதலாகவும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நேரம் எதற்காக என்றால் ஆன்லைன் தேர்வு எழுதும் மாணவர்கள் விடைதாள்களை பதிவேற்றம் செய்வதற்காக நேரம் ஒதுக்கப்பட்டது. மாணவர்களுக்கு … Read more

பொறியியல் செமஸ்டர் தேர்வு – இணையத்தில் பதிவு செய்யலாம்!

பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கு இணையத்தளத்தில் பதிவு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து, மற்ற அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான கொரோனா வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டியிருந்தது. இதன்பின், கல்லூரிகள் பிப்ரவரி 1-ல் திறந்தாலும், ஏற்கனவே அறிவித்தபடி செமஸ்டர் … Read more

ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான வழிகாட்டுதல் வெளியீடு!

ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான வழிகாட்டுதல்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. ஆன்லைன் செமஸ்டர் தேர்வு எழுதுவதற்கான வழிகாட்டுதல்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. செமஸ்டர் தேர்வுகளை மாணவர்கள் இருந்த இடத்தில் இருந்தே எழுதும் வகையில் வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் இருந்த இடத்தில் இருந்தே தேர்வு எழுதும் Take home முறையில் தேர்வு நடைபெறும். அரியர் மாணவர்கள், தாங்கள் இறுதியாக பயின்ற கல்லூரிகளைத் தொடர்புகொண்டு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். செல்போன், லேப்டாப் போன்ற மின்னணு சாதனைகளை கொண்டு … Read more

மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்டவை பெற ஜிஎஸ்டி- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

பட்டப்படிப்பு சான்று, மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் பெறுதல் உள்ளிட்டவற்றுக்கு 18% ஜிஎஸ்டி வரி அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் சிலவற்றிற்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. அதன்படி மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள், சான்றிதழ்கள் தொலைந்து போனால் மாற்று சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பிப்பது போன்ற 16 சேவைகளுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிப்பு கொண்டு வரப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தேர்வு கட்டணம், மறுமதிப்பீடு செய்வதற்கான கட்டணம், … Read more

பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் 2 வாரம் தள்ளிவைப்பு – அண்ணா பல்கலைகழகம்

பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் 2 வாரம் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு. தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டது. எனவே தேர்வுகளும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. தற்போது தொற்று பாதிப்பு குறைந்த நிலையில், அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளுக்கும் செமஸ்டர் உட்பட அனைத்து தேர்வுகளும் வகுப்பறையில் நேரடியாக நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ள … Read more

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு…! 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும்…!

அண்ணா பல்கலைக்கழகம் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை அறிவித்துள்ளது. வேலை குறித்த விபரம்  நிறுவனம் : அண்ணா பல்கலைக்கழகம் வேலை : அலுவலக உதவியாளர் காலிப்பணியிடம் : 02 பணியிடம் : சென்னை வயது வரம்பு : 40 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.09.2021 கல்வி தகுதி : 8ம் வகுப்பு தேர்ச்சி … Read more

பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் – உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும். பன்னாட்டு அளவில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றிய அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். வடிவமைப்பு, ஆராய்ச்சிக்கு தேவையான பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும். செயல்முறை பாடத்திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். தொழிற்கல்வி மாணவர்களுக்கு ஆலைகளில் பயிற்சி அளிப்பதை பாடத்திட்டமாக அமைப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், … Read more