நமது வரலாற்றை புரிந்து கொள்ள இந்தியை கற்க வேண்டும் – அமித்ஷா

உள்ளூர் மொழிகளும், இந்தி மொழியும் நமது கலாச்சார ஓட்டத்தின் முதன்மையானவை என அமைச்சர் அமித்ஷா பேச்சு. நமது கலாச்சாரம், வரலாற்றின் ஆன்மாவை புரிந்துகொள்ள நமது அலுவல் மொழியான இந்தியை கற்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்று வரும் இந்தி தின நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, உள்ளூர் மொழிகளும், இந்தி மொழியும் நமது கலாச்சார ஓட்டத்தின் முதன்மையானவை. நமது கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் ஆன்மாவைப் புரிந்து கொள்ள … Read more

#Breaking:அமர்நாத் மேகவெடிப்பு சம்பவம் – பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு;40 பேரை காணவில்லை!

அமர்நாத் குகை அருகே மேக வெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக்கு செல்வதற்கான யாத்திரை கடந்த 2 வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்,நடப்பு வருடத்தில் அமர்நாத் யாத்திரை கடந்த ஜூன் 30 ஆம் தேதி தொடங்கியது.இதன்காரணமாக,அமர்நாத் யாத்திரையில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்,அமர்நாத் பகுதியில் கடுமையான மழைப்பொழிவு காரணமாக நேற்று மேகவெடிப்பு ஏற்பட்டது.இதனால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் அமர்நாத் குகைக்கு … Read more

“அடுத்த இலக்கு…தமிழகத்தில் பாஜகவின் ஆட்சி”- உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிரடி!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற நிலையில்,பிரதமர் மோடி,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா,மற்றும் மத்திய அமைச்சர்கள்,பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில்,தமிழகத்தில் விரைவில் பாஜக ஆட்சிக்கு ஆட்சியமைக்கும் எனவும்,அதைப்போல தென்னிந்திய மாநிலங்களான கேரளா,ஆந்திரா, ஒடிசா ஆகிய பிற தென்னிந்திய மாநிலங்களிலும் பாஜகவின் ஆட்சி விரைவில் மலரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,தேசிய செயற்குழு கூட்டத்தில் … Read more

#BREAKING: வெங்கையா நாயுடுவுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திப்பு!

குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக வெங்கையா நாயுடுவுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.  குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் இறுதி செய்வது தொடர்பாக இன்று மாலை பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், வெங்கையா நாயுடுவுடன், அமித்ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தலைவர் ஜெபி நட்டா ஆகியோர் … Read more

இவர்களுக்கு ராணுவத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் – மத்திய உள்துறை அமைச்சர்

அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களுக்கு துணை ராணுவப் படையில் முன்னுரிமை. முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் நேற்று அறிமுகம் செய்தார். மத்திய அரசு, இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது. அக்னபாத் திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி … Read more

காஷ்மீர் பாதுகாப்பு சூழல் – உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை!

காஷ்மீரில் வெளிமாநில மக்கள் மீதான பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்து வரும் நிலையில், உள்துறை அமைச்சர் ஆலோசனை. ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக ஏற்கனவே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் நோவலுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்திய நிலையில், தற்போது உயர்மட்ட அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையில் ஆளுநர் மனோஜ் சின்ஹா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ராணுவ … Read more

இந்தியை தமிழ்நாட்டில் நுழையவிடமாட்டோம் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் மும்மொழி கொள்கையை எக்காலத்திலும் ஏற்கமாட்டோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என பேசியதற்கு அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் தங்களை எதிர்ப்பை தெரிவித்து கண்டங்களை பதிவிட்டு வருகின்றனர். தற்போது அமித் ஷாவின் பேச்சு நாடு முழுவதும் பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இந்தி மட்டுமல்ல வேறு எந்த மொழியையும் உள்ளே நுழைய விடமாட்டோம் என அதிமுக முன்னாள் … Read more

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கேரள முதலமைச்சர் கண்டனம்!

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக கேரள முதலமைச்சர் குற்றசாட்டு. ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை ஏற்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கு எதிரான வகையில் அமித் ஷாவின் கருத்து உள்ளது என குற்றசாட்டியுள்ளார். புதிய கல்வி கொள்கை மூலம் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மத்திய … Read more

#BREAKING: இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது – ஓபிஎஸ்

பேரறிஞர் அண்ணா அவர்கள் வழியில் இருமொழிக் கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளது என ஓபிஎஸ் அறிக்கை. இந்தி மொழி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில்,  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றாய் வெளியிட்டுள்ளார். அதில், இந்தி மொழி தேவையெனும் பட்சத்தில் மனமுவந்து கற்றுக்கொள்ள நினைப்பவர்கள் தாராளமாக கற்றுக் கொள்ளலாம் என்றும் அதே சமயத்தில் இந்தி திணிப்பு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறி இருக்கிறார்கள். … Read more

அமித்ஷா கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது – பாமக நிறுவனர் ராமதாஸ்

அனைத்து மாநில மக்களின் விருப்பங்களும், உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பதிவு. ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தி மொழியை பேச வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மாநிலங்களுக்கு இடையிலான தொடர்பு மொழியாக இந்திய மொழியான இந்தி தான் இருக்க வேண்டும். ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதன் … Read more