#Breaking:அமர்நாத் மேகவெடிப்பு சம்பவம் – பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு;40 பேரை காணவில்லை!

அமர்நாத் குகை அருகே மேக வெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக்கு செல்வதற்கான யாத்திரை கடந்த 2 வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்,நடப்பு வருடத்தில் அமர்நாத் யாத்திரை கடந்த ஜூன் 30 ஆம் தேதி தொடங்கியது.இதன்காரணமாக,அமர்நாத் யாத்திரையில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,அமர்நாத் பகுதியில் கடுமையான மழைப்பொழிவு காரணமாக நேற்று மேகவெடிப்பு ஏற்பட்டது.இதனால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் அமர்நாத் குகைக்கு மழை ஏறி கொண்டிருந்தவர்கள் வெள்ளத்தில் சிக்கி மாற்றிக்கொண்டனர்.இதில் 5 பேர்  பலியாகி இருக்கலாம் என கூறப்பட்டது.இதனைத் தொடர்ந்து,உடனடியாக, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.இதனால்,நிலைமை சரியாகும் வரை அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,அமர்நாத் குகை அருகே மேக வெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.மேலும்,50 பேர் காயம் அடைந்துள்ளதாகவும்,40 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே,மக்களின் உயிரைக் காப்பதே தங்களின் முன்னுரிமை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:

“பாபா அமர்நாத் ஜி குகைக்கு அருகே மேக வெடிப்பினால் ஏற்பட்ட திடீர் வெள்ள மீட்பு நடவடிக்கைகளில் NDRF,CRPF,BSF மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.மக்களின் உயிரைக் காப்பதே எங்கள் முன்னுரிமை.மேலும்,காயம் அடைந்த பக்தர்கள் அனைவரும் நலமடைய வேண்டுகிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment