அதிகாரத்திற்காக எதிர்க்கட்சிகள் சேர்கின்றனர்…பாஜக தேசிய தலைவர் அமித்ஷா குற்றச்சாட்டு…!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரும் கூட்டணிக்கான வியூகங்கள் அமைத்து வருகின்றனர்.இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து விவாதிப்பதற்காக டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் அமித்ஷா தலைமையில் நேற்று துவங்கி இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாஜகவின்  மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் … Read more

சொராபுதீன் கொலை வழக்கில் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் சதி : ஸ்மிருதி இரானி…!!

சொராபுதீன் கொலை வழக்கில், பா.ஜ., தலைவர் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் அரசியல் ரீதியாக சதி செய்ததாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், சொராபுதீன் வழக்கு அரசியல் ரீதியாக புனையப்பட்டதாகவும் பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் சதி செய்ததாகவும் குற்றம்சாட்டினார். 2010ஆம் ஆண்டு, அமித்ஷாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய சிபிஐ அமைப்பை காங்கிரஸ் பயன்படுத்தியதாக தெரிவித்த ஸ்மிருதி இரானி, உருவாக்கப்பட்ட வழக்கிற்காக சிபிஐ … Read more

எல்லாமே பிஜேபி தான்: "பாராளுமன்றம் முதல் பஞ்சாயத்து வரை"அமித் ஷா சூளுரை…!!

2019-க்கு பிறகு அடுத்த 50 ஆண்டுகளுக்கு பாராளுமன்றம் முதல் நாட்டில் உள்ள அனைத்து பஞ்சாயத்து அலுவலகங்கள் வரை பா.ஜ.க. கொடிதான் பறக்கும் என்று பிரசார கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் இன்று பங்கேற்று பேசினார். விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ள மத்தியப்பிரதேசம் மாநிலத்துக்குட்பட்ட ஹோஷங்காபாத் பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா இன்று பங்கேற்று பேசினார். ஏழை குடும்பத்தில் பிறந்தவர்களும், எவ்வித அரசியல் பின்பலமும் இல்லாத ஏழை டீ வியாபாரியின் மகனும் பா.ஜ.கவில்தான் … Read more

ஹைதராபாத் வருகிறார் அமித் ஷா.!

தெலங்கானா மாநிலம் அடுத்த ஆண்டில் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது. இம்மாநிலத்தில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ் கட்சிகள் இப்போதே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. இந்நிலையில், பாஜக தலைவர் அமித் ஷா, 2-வது முறையாக 22-ம் தேதி ஹைதராபாத் வரவுள்ளார். தெலங்கானாவில் ஆட்சியை பிடிக்க வியூகங்களை வகுக்க அமித்ஷா திட்டமிட்டுள்ளதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர். தென்னிந்தியாவில் கட்சியை பலப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் … Read more

எதிர்க்கட்சிகள் இல்லாமல் ஜனநாயகம் இல்லை அமித் ஷா பேட்டி ..!

சத்தீஸ்கர் மாநிலம், சர்குஜா மாவட்டத்தில் உள்ள அம்பிகாபூரில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது :- ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ எனும் பா.ஜ.க.வின் பிரச்சார முழக்கத்திற்கான அர்த்தம் இந்தியாவில் இருந்து காங்கிரஸ் கட்சியை முற்றிலுமாக அப்புறப்படுத்த வேண்டும் என்பது இல்லை. மாறாக, காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரம் மற்றும் கொள்கைகள் இல்லாத இந்தியா என்பது தான் அதன் பொருள். எதிர்க்கட்சிகள் இல்லாமல் ஜனநாயகம் சாத்தியம் இல்லை. நாட்டில் … Read more