காஷ்மீர் பாதுகாப்பு சூழல் – உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை!

காஷ்மீரில் வெளிமாநில மக்கள் மீதான பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்து வரும் நிலையில், உள்துறை அமைச்சர் ஆலோசனை.

ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக ஏற்கனவே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் நோவலுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்திய நிலையில், தற்போது உயர்மட்ட அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையில் ஆளுநர் மனோஜ் சின்ஹா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ராணுவ தளபதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். காஷ்மீரில் வெளிமாநில மக்கள் மீதான பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment