சிரியாப் போரின் அடுத்த கட்டம்…??

சிரியாப் போர் தற்போது வேறொரு கட்டத்தை வந்தடைந்துள்ளது. குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அப்ரின் நகரம், எல்லை மீறிப் படையெடுத்து வந்த துருக்கிப் படைகளிடம் வீழ்ந்துள்ளது. அதை அடுத்து, அந்நிய இராணுவம் ஒன்று சிரியாவின் பகுதியை ஆக்கிரமித்துள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து துருக்கிப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று, சிரியா அரசு ஐ.நா. மன்றத்தில் முறைப்பாடு செய்துள்ளது. அப்ரின் நகரை கைப்பற்றிய துருக்கி இராணுவம் தனியாக வரவில்லை. சிரிய அரசுக்கெதிராக போரிடும் ஜிகாதிக் குழுக்களையும் தன்னோடு … Read more

ஆஸ்திரேலியர் ஒருவர் காணாமல் போன மலேசிய விமானத்தின் பாகம் கண்டுபிடித்ததாக தகவல்!

ஆஸ்திரேலியர் ஒருவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன மலேசிய விமானத்தின் பாகத்தை கண்டுபிடித்ததாக  தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த 2014ல் மாயமான எம்.எச் 370 விமானம் பற்றிய தகவல்கள் இதுவரை புதிராகவே உள்ளது. அதில் பயணித்த 239 பேரும் இறந்து விட்டதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், எம்.எச் 370 விமானத்தின் பாகம், கூகுள் இயர்த் (Google Earth) உதவியுடன், இந்திய பெருங்கடலில் உள்ள மொரிஷியஸ் தீவு அருகே கண்டுபிடித்ததாக ஆஸ்திரேலிய மெக்கானிக்கல் இன்ஜினியர் ஒருவர் கூறியுள்ளார். கண்டெடுக்கப்பட்ட பாகத்தில் … Read more

அடுத்த மாதம் அமெரிக்கா – தென்கொரியா கூட்டுப்பயிற்சி தொடக்கம்!

அடுத்த மாதம்  அமெரிக்கா – தென்கொரியா நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சி தொடங்குகிறது. மார்ச்சில் தொடங்கி ஏப்ரல் இறுதி வரை இரு நாடுகளும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் தென்கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் நடைபெற்ற காரணத்தால் கூட்டுப் பயிற்சியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. கொரிய தீபகற்பத்தில் இருநாடுகளும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடும் வேளையில் பதற்றம் ஏற்படும் சூழலில், இந்த ஆண்டு இருநாடுகளின் அதிபர்களும், வடகொரிய அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதால், பயிற்சியில் சிக்கல் இருக்காது என்று … Read more

FACEBOOK,WHATSAPP அவதூறு கருத்து எதிரொலி !தயாராகும் புதிய சட்டம்…

 சமூக வலைதளங்களில் பேஸ்புக், வாட்ஸ்-ஆப் உள்ளிட்ட அவதூறு கருத்துகள் தெரிவிப்பதற்கு எதிரான சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பேஸ்புக், வாட்ஸ்-ஆப், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்கள் குறித்து அவதூறு கருத்துகள் பரப்பப்படுவது அதிகரித்துள்ளது. இது குறித்து தொடர் புகார்கள் வந்ததை அடுத்து, இதற்காக புதிய சட்டத்தை இயற்ற முடிவு செய்துள்ள உள்துறை அமைச்சகம், புதிய சட்டவரைவை உருவாக்குமாறு சட்ட ஆணையத்தை கேட்டுக் கொண்டுள்ளது. ஆன்லைனில் அவதூறு கருத்துகள் தெரிவிப்போர் மீது நடவடிக்கை … Read more

9 வயது சிறுவன் வீடியோ கேம் விளையாட அனுமதிக்காத சகோதரியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை !

9 வயது சிறுவன், அமெரிக்காவில் வீடியோ கேம் விளையாட அனுமதிக்காத சகோதரியை, துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். மிஸ்ஸிசிப்பியில் ஒரு வீட்டில் 13 வயது சிறுமி வீடியோ கேம் விளையாடியுள்ளார். அப்போது அவரது சகோதரன் தாம் விளையாட வேண்டும் என்று கூறி, ஜாய் ஸ்டிக்கை பறிக்க முயன்றான். ஆனால் அந்தச் சிறுமி ஜாய் ஸ்டிக்கை கொடுக்காததால், ஆத்திரமடைந்த சிறுவன் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து, தனது சகோதரியின் பின் தலையில் வைத்து சுட்டான். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த … Read more

அதிபர் டொனால்ட் டிரம்ப் மரணதண்டனை அறிவிப்பு!

அதிபர் டொனால்ட் டிரம்ப் , அமெரிக்காவில், போதைபொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை விதிக்கப்படும் என கூறியுள்ளார். அமெரிக்காவில் 20 லட்சத்து 40 ஆயிரம் பேர் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளதாகவும், 2016ஆம் ஆண்டில் மட்டும் நாளொன்றுக்கு 115 பேர் போதைமருந்துக்கு உயிரிழந்ததாக அந்நாட்டின் தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நியூஹாம்சயரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய டொனால்ட் ட்ரம்ப், போதைபொருள் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க நேரத்தை வீணாக்க மாட்டோம் என்றும், போதைபொருள் கடத்தல்காரர்களுக்கு, மரண தண்டனை … Read more

பேஸ்புக் வாடிக்கையாளர்களின் விவரங்கள் திருடப்பட்டதாக புகார்! பங்குச்சந்தையில் கடும் சரிவு …

உலகின் மிகப்பெரிய சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக் வாடிக்கையாளர்களின் விவரங்கள் திருடப்பட்டதாக எழுந்த புகார்களை தொடர்ந்து,  பங்குச்சந்தையில் கடும் சரிவை சந்தித்தது. அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, வேட்பாளர் டொனால்ட் ட்ரம்புக்காக பணியாற்றிய கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற இணைய நிறுவனம், சுமார் 5 கோடி அமெரிக்கர்களின் பேஸ்புக் விவரங்களை திருடியதாக செய்தி வெளியானது. திருடப்பட்ட வாடிக்கையாளர்களின் விவரங்களை வைத்து அவர்களது ஈடுபாடுகளை தெரிந்து கொண்டு, எதிர்க்கட்சி வேட்பாளரை பற்றிய பொய்யான செய்திகளை அவர்களுக்கு தொடர்ந்து அனுப்பி வந்துள்ளது கேம்பிரிட்ஜ் … Read more

வரலாற்றில் இன்றுதான் அமெரிக்கா ஈராக் மீது ஆக்கிரமிப்பு போரை துவக்கிய நாள்…!!

மார்ச் 20, 2003 வரலாற்றில் இன்று – பேரழிவு ஆயுதங்களை ஈராக் வைத்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறை கண்டுபிடித்திருப்பதாக பொய்யான காரணங்களைக் கூறி அமெரிக்க அதிபர் ஜார்ஜ் W புஷ் ஈராக்கின் மீது ஆக்கிரமிப்பு போரை துவக்கிய நாள் இன்று அப்படிப்பட்ட பேரழிவு ஆயுதங்கள் ஒன்றைக்கூட அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. பல ஆயிரம் அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இப்போரின் காரணமாக உலகில் கச்சா எண்ணையின் விலை பல மடங்கு அதிகரித்து இந்தியா போன்ற நாடுகளில் கடும் பொருளாதார நெருக்கடி … Read more

இந்தியா உலக வாணிப அமைப்பில் முறையீடு! அமெரிக்காவிடம் மோதும் இந்தியா!

உலக வாணிப அமைப்பில் இந்தியா, உருக்கு, அலுமினியம் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்துவதை எதிர்த்து  முறையிட உள்ளது. உள்நாட்டுத் தொழில்களைக் காக்கும் நடவடிக்கையாக உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் இறக்குமதி வரியை உயர்த்த அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்தியா, சீனா ஆகியவற்றின் வணிகப் போட்டியைச் சமாளிக்க அமெரிக்கா எடுத்துள்ள இந்த நடவடிக்கையால் வணிகப் போர் உருவாகும் அபாயமுள்ளதாக அமெரிக்கர்கள் பலரும் கருதுகின்றனர். இந்நிலையில் உருக்கு, அலுமினியம் இறக்குமதிக்கு வரியை உயர்த்தும் அமெரிக்காவின் முடிவை எதிர்த்து உலக … Read more

அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் பொதுவான ஒற்றுமைகள் சில…!!

அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் பொதுவான ஒற்றுமை ஒன்றுண்டு. இரண்டுமே பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து சென்று குடியேறிய வெள்ளையின மக்களால் உருவாக்கப் பட்ட தேசங்கள். இரண்டு தேசங்களிலும், பூர்வகுடிகள் ஆக்கிரமிப்பாளர்களால் அடித்து விரட்டப் பட்டார்கள். வந்தேறுகுடிகள் அனைத்து உரிமைகளுடனும் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மண்ணுக்கு உரித்தான மக்கள், உரிமைகள் மறுக்கப் பட்டு, சிறியளவு பிரதேசத்திற்குள் ஒடுங்கி வாழ்கின்றன.