சிரியாப் போரின் அடுத்த கட்டம்…??

சிரியாப் போர் தற்போது வேறொரு கட்டத்தை வந்தடைந்துள்ளது. குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அப்ரின் நகரம், எல்லை மீறிப் படையெடுத்து வந்த துருக்கிப் படைகளிடம் வீழ்ந்துள்ளது. அதை அடுத்து, அந்நிய இராணுவம் ஒன்று சிரியாவின் பகுதியை ஆக்கிரமித்துள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து துருக்கிப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று, சிரியா அரசு ஐ.நா. மன்றத்தில் முறைப்பாடு செய்துள்ளது. அப்ரின் நகரை கைப்பற்றிய துருக்கி இராணுவம் தனியாக வரவில்லை. சிரிய அரசுக்கெதிராக போரிடும் ஜிகாதிக் குழுக்களையும் தன்னோடு … Read more

வ‌ட‌ மேற்கு சிரியாவில் உள்ள‌ அப்ரின் (Afrin) ந‌க‌ரை குர்திஸ் YPG ப‌டையின‌ரிடம் இருந்து கைப்பற்றிய துருக்கி படை…!!

வ‌ட‌ மேற்கு சிரியாவில் உள்ள‌ அப்ரின் (Afrin) ந‌க‌ர‌ம் துருக்கிப் ப‌டையின‌ர் வ‌ச‌ம் வீழ்ந்து விட்ட‌து. இதுவ‌ரை கால‌மும் குர்திஸ் YPG ப‌டையின‌ர் க‌ட்டுப்பாட்டில் இருந்த‌ அப்ரின் ந‌க‌ரில் த‌ற்போது துருக்கி கொடி ப‌ற‌க்கிற‌து. துருக்கி ப‌டைக‌ள் அப்ரின் ந‌க‌ரை கைப்ப‌ற்றுவ‌த‌ற்காக‌‌ ந‌ட‌ந்த‌ யுத்த‌த்தில், இதுவ‌ரையில் 300 க்கும் அதிக‌மான‌ பொதும‌க்க‌ள் பலியாகி உள்ள‌ன‌ர். ஒரு இல‌ட்ச‌த்து ஐம்ப‌தாயிர‌ம் பேர் இட‌ம்பெய‌ர்ந்துள்ள‌ன‌ர். அப்ரின் மீதான‌ வெற்றியை பிர‌க‌ட‌ன‌ம் செய்துள்ள‌ துருக்கி ஜ‌னாதிப‌தி எர்டோகான், “த‌ம‌து ப‌டையின‌ர் 3000 … Read more

வட சிரியாவில் குர்திய கட்டுப்பாட்டுப் பிரதேசம் மீதான துருக்கி படையெடுப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மக்கள் பேரணி…!!

சிரியாவில் அந்நாட்டு ராணுவத்திற்கும் குர்திஷ் படைக்கும் இடையே நடந்த போரில் சில பகுதிகளை தன்வசப்படுத்தியது குர்திஷ் படை. இந்நிலையில் குர்திஷ் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பிரதேச‌மான‌் அஃப்ரின் மீதான‌ துருக்கி இராணுவ‌ தாக்குதலை தொடுத்து வருகிறது. வ‌ட‌ சிரியாவில் குர்திய‌ க‌ட்டுப்பாட்டுப் பிரதேச‌மான‌் அஃப்ரின் மீதான‌ துருக்கி இராணுவ‌ தாக்குதலை எதிர்த்து நெதர்லாந்து நாட்டில் உள்ள ஆம்ஸ்ட‌ர்டாம் ந‌க‌ரில் ஆர்ப்பாட்ட‌ப் பேர‌ணி நடைபெற்றது.