133 பேரை பலிகொண்ட மாஸ்கோ தாக்குதல்… ஒப்புக்கொண்ட குற்றவாளிகள்.?

Moscow Terror Attack

Moscow Attack : மாஸ்கோ தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோ நகரின் புறநகர் பகுதியில் கடந்த 21ஆம் தேதி இரவு நேரத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் சுமார் 5ஆயிரம் பேர் பங்கேற்றனர். அப்போது அங்கு புகுந்த மர்ம கும்பல் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் சுமார் 133 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலை நடத்தியதற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த … Read more

ஈரான் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு..!

ஈரானின் கெர்மான் நகரில் நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் , 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஜெனரல் காசிம் சுலேமானியின் நினைவு தினத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. 1979-ம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு ஈரானில் நடந்த மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதலாக இது கருதப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு யாரும் … Read more

சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்க ஆதரவாளர்களின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை…!

சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படுகிறார்களா என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை. சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படுகிறார்களா என்ற சந்தேகத்தின் பேரில், போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, சென்னை கொடுங்கையூர், மண்ணடி உள்ளிட்ட இடங்களில் காலை முதல் போலீஸ் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கொடுங்கையூரில் முகமது தப்ரீஸ் என்பவர் வீட்டில் துணை ஆணையர் தலைமையில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ். திட்டம்? – அமெரிக்க தூதரகம் பாதுகாப்பு எச்சரிக்கை!

அமெரிக்க அரசாங்கப் பிரதிநிதியின் தனிப்பட்ட அறிவுறுத்தல்கள் இல்லாமல் காபூல் விமான நிலையத்திற்கு பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தல். ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அரசு குழுவுக்கு எதிரான பாதுகாப்பு நிலைமை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது குழு நேற்று வாசிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் ஆலோசனை நடத்தியது. துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் சிங்கப்பூர் பயணத்தின் போது பாதுகாப்பான காணொளி வாயிலாக ஆலோசனையில் கலந்துகொண்டார். இந்த ஆலோசனையில், மாநில … Read more

அபுயூசுப்பை மன்னிக்க வேண்டும் ..கைது செய்யப்பட்ட பயங்கரவாதி தந்தை, மனைவி..!

உத்தரபிரதேசத்தின் பலராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த அபு யூசுப் என்பவர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளராக செயல்பட்டு வந்ததால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். புலனாய்வுப்பிரிவு ஒரு வருடமாக அபு யூசுப் நடவடிக்கைகளை கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில், டெல்லியில் நேற்று முன்தினம் இரவில் பைக்கில் சென்ற அபு யூசுப்பை போலீசார் சுற்றி வளைத்தனர். அவரிடம் இருந்து 2 பிரஷர் குக்கர் வெடிகுண்டுகள், துப்பாக்கி, தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அபுயூசுப் வைத்திருந்த 2 வெடிகுண்டுகள் முழுவதும் தயார் நிலையில் இருந்தது. எனவே … Read more

ISIS பயங்கரவாதியிடம் இருந்து கைப்பற்றிய வெடிபொருட்கள் அழிக்கப்பட்டன.!

டெல்லியில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஐ.எஸ்.பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவரை  இன்று போலீசர் கைது செய்தனர். தவுலா குவானில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்த வெடிகுண்டுகளை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் அனைத்தையும்  பாதுகாப்பு படையினரால் அழிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட பயங்கரவாதியிடம் தீவிர விசாரணை நடைபெற்றுவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆர்டர் செய்த காஃபி கப்பில் “ISIS” என எழுதி கொடுத்த ஸ்டார்பக்ஸ் ஊழியர்.!

அமெரிக்காவின் மினசோட்டாவின் செயின்ட் பால் நகரில் உள்ள ஒரு ஸ்டார்பக்ஸ் (Starbucks) கடையில் ஜூலை 1 -ம் தேதி ஓரு  முஸ்லிம் பெண் ஆர்டர் செய்த காபியில் தனது பெயருக்குப் பதிலாக ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ என எழுதப்பட்டதை பார்த்து அப்பெண் அதிர்ச்சி அடைத்தார். சம்பவம் நடந்த நாளில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக முகமூடி அணிந்திருந்த ஆயிஷா, காபி ஒன்றை ஆர்டரை செய்யும் போது தனது பெயரைக் குறிப்பிட்டதாகக் கூறினார். ஸ்டார்பக்ஸ் ஊழியர் தன் பெயரைக் கேட்டபோது, நான் மெதுவாக … Read more

ஐஸ் தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு? தமிழகத்தில் 10 இடங்களில் தீவிர சோதனை!

தீவிரவாத கும்பலான ஐஸ் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்ப்பு உள்ளதாக கூறி இதுவரை எட்டு பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தீவிர விசாரணை செய்து வருகிறது என் ஐ ஏ அமைப்பு. தற்போது வெளியான தகவலின் படி இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் சேலம், ராமநாதபுரம், சிதம்பரம், கீழக்கரை போன்ற 10 இடங்களில் சோதனை செய்யப்பட்டு 3 லேப்டப், 3 ஹார்ட் டிஸ்க், 16 செல்போன், பென்ட்ரைவ் போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. DINASUVADU

இலங்கை  தொடர் குண்டு வெடிப்பு: ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு

இலங்கை  தொடர் குண்டு வெடிப்புக்கு  ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இலங்கையில் மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தது.இச்சம்பவத்தில் பலி எண்ணிக்கை  320-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.மேலும் காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை தொடர் குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.    

ஐ.எஸ் அமைப்பில் இணைய இருந்தவரை தடுத்து நிறுத்தியது சிங்கபூர் அரசு…!!

ஐ.எஸ். இயக்கத்துக்காக தீவிரவாதம் செய்ய விரும்பியவர் தடுத்து நிறுத்தம்..!! ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவாக சிரியாவில் சண்டையிட விரும்பிய சிங்கப்பூரை சேர்ந்தவர்களை  உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம்  இன்று அறிவித்துள்ளது. 33 வயதை உடைய அகமது ஹுசேன் ,அப்துல் காதர், தகவல் தொழில்நுட்பப் பொறியாளரார்களான இவர்கள் தீவிரவாதச் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு, சிரியாவில் ஆயுதமேந்திய வன்முறையை மேற்கொள்ள முற்பட்டதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் கூறுகின்றது. 2013ஆம் ஆண்டில், சமயம் பற்றிய தகவல்களை  இணையதளத்தில் தேடிய போது அவர் தீவிரவாதச் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு … Read more