அமெரிக்க ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து..!

அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய கேம்டூல் ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் சிகாகோவுக்கு வடமேற்கில் அமைந்துள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தில் ராக்டன் நகரில் உள்ள மிகப்பெரிய ரசாயனம் தயாரிக்கும் நிறுவனமான கேம்டூல் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்க நேரப்படி, இது காலை 7 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த ஆலையின் மேற்கூரையில் ஏற்பட்ட நெருப்பு ஆலை முழுவதையும் ஆட்கொண்டதால், கரும்புகையால் அவ்விடம் சூழ்ந்துள்ளது. ராக்டன் நகர தீயணைப்பு வீரர்கள் அங்கிருக்கும் 70 தொழிலாளர்களை பத்திரமாக  … Read more

அமெரிக்கா செல்லும் நடிகர் ரஜினிகாந்த்..?

நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தனி விமானத்தில் அமெரிக்கா செல்லவிருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘அண்ணாத்த’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.  படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் டப்பிங் பணியும் விரைவில் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு ஆகிய முக்கிய நடிகைகள் நடித்து வருகின்றனர். மேலும், இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ரஜினிகாந்த் அமெரிக்கா செல்லவுள்ளார். மருத்துவ பரிசோனைக்காக செல்லும் … Read more

அமெரிக்க போலீசாரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட்…! சம்பவத்தை வீடியோ எடுத்த பெண்ணுக்கு உலகின் உயரிய விருது அறிவிப்பு…!

அமெரிக்காவில் டெரிக் சாவின் என்ற போலிஸாரால் கொடூரமாக கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட். சம்பவத்தை வீடியோ எடுத்த பெண்ணுக்கு உலகின் உயரிய விருதான புலிட்சர் விருது அறிவிப்பு. அமெரிக்காவில், மின்னப்போலிஸ் நகரில், கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் 25-ஆம் தேதி கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் என்பவர், டெரிக் சாவின் என்ற காவல்துறை அதிகாரியால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். டெரிக் சாவின் தனது முழங்காலை வைத்து, பிளாய்டின் கழுத்தில் அழுத்தியதில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை … Read more

மின்கம்பத்தில் ஏறி கம்பிகளில் சிக்கிய குட்டி கரடி..! வைரல் வீடியோ..!

அரிசோனா மாகாணத்தில் கரடி ஒன்று மின்கம்பத்தில் ஏறி மின்கம்பிகளில் சிக்கியுள்ளது. திங்கள் கிழமையன்று அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் புறநகர் பகுதியில் இருக்கும் மின்கம்பத்தில் ஒரு சிறிய கரடி ஏறியுள்ளது. கம்பத்தில் ஏறிய அந்த கரடி மின்கம்பிகளில் சிக்கியுள்ளது. இதனை பற்றி தெற்கு அரிசோனாவில் உள்ள வில்காக்ஸ் நகரத்தில் அமைந்துள்ள சல்பர் ஸ்பிரிங்ஸ் வேலி எலக்ட்ரிக் கூட்டுறவு நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர், இந்த கரடியை மீட்கும் முயற்சியில் அந்த நிறுவனத்தின் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதாக ஏபிசி … Read more

டிக் டாக், வீசாட் உள்ளிட்ட 8 செயலிகள் மீதுள்ள தடையை நீக்கிய ஜோ பைடன்..!

டிக் டாக், வீசாட் உள்ளிட்ட 8 செயலிகள் மீதுள்ள தடையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.  அமெரிக்காவில் டிக் டாக், வீ சாட் உள்ளிட்ட 8 செயலிகள் மீது முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், பயனாளர்களின் தகவல்களை திருடுவதாக குற்றம் சாட்டி பாதுகாப்பு கருதி தடை உத்தரவை பிறப்பித்திருந்தார். ஆனால் செயலிகள் தொடர்புடைய நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை பதிவு செய்தனர். இது தொடர்புடைய வழக்குகள் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், தற்போதைய அமெரிக்க … Read more

தண்ணீரில் தத்தளித்த தன் குடும்பத்தை காப்பாற்றிய 7 வயது சிறுவன்..!

நடு ஆற்றில் சிக்கி தவித்த தந்தையையும் தங்கையையும் காப்பாற்றிய 7 வயது மகன். அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடாவை சேர்ந்தவர் ஸ்டீபன் போவ்சிட். இவருக்கு செஸ் என்ற மகனும் அபிகெல் என்ற மகளும் உள்ளனர். இவர் வார இறுதிநாட்களில் தனது குடும்பத்துடன் வெளியே செல்வது வழக்கம். அதனால் சில நாட்களுக்கு முன்பு இரண்டு குழந்தைகளையும் ஆற்றில் மீன்பிடிப்பதற்காக அழைத்து சென்றுள்ளார். அமெரிக்காவில் ஆற்றில் மீன்பிடிக்க 6 வயதிற்கு குறைவானவர்கள் கட்டாயம் லைப் ஜாக்கெட் அணிய வேண்டும் என்ற விதிமுறைக்கு … Read more

2026 மற்றும் 2032 லும் கொரோனா பரவும்..அமெரிக்க தடுப்பூசி நிபுரணர் அதிர்ச்சி தகவல்!

கொரோனா மூலத்தை கண்டுபிடிக்காவிடில் எதிர்காலத்தில் பெருந்தொற்றை தவிர்க்க இயலாது. கொரோனா பெருந்தொற்று உலகமக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, இதன் விளைவாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கோடியை  தாண்டி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சர்வதேச நாடுகளின் பொருளாதார சரிவு மற்றும் வேலையின்மை, குழந்தைகளின் கல்வி ஆகியவை கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உலகில் கொரோனாவானது சீனாவில் உள்ள வுஹான் நகரத்திலிருந்துதான் பரவ ஆரம்பித்தது என்று கூறப்படுகிறது, இதற்கு வலு சேர்க்கும் வகையிலேயே தற்போது பல ஆதாரங்களை உல நாடுகள் வெளியிட்டு வருகின்றனர். … Read more

அமெரிக்காவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

அமெரிக்காவில் இன்று பிற்பகல் மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் சிக்கலூன் நகரத்திற்கு வடக்கில் 74 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இன்று பிற்பகல் 12.29 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. கடற்பரப்பில் கீழ் 41.3 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அழிவுகள், பொருளிழப்புகள் குறித்த தகவல் இன்னும் … Read more

#viral: தனிமையில் வசித்து வந்தவருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்த சிறுமி..!

சிகாகோவில் தனிமையில் வசித்து வந்தவரின் பிறந்தநாளுக்கு திடீரென்று கேக்  கொடுத்து அசத்திய சிறுமியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  அமெரிக்காவில் சிகாகோ நகரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் தான்யா என்ற சிறுமி தனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். சமீபத்தில் தான்யாவின் பிறந்தநாளை கொண்டாடிய சிறுமி, அனைவருக்கும் இனிப்பு வழங்கியுள்ளார். அப்போது சிறுமியின் பக்கத்துக்கு வீட்டில் தனிமையாக பல வருடங்களாக ஒருவர் வசித்து வருகிறார். அவருக்கும் கேக் கொடுக்க தான்யாவும் அவரது அப்பாவும் சென்றுள்ளனர். அப்போது, அன்பாக வரவேற்ற பக்கத்து … Read more

லாட்டரியில் விழுந்த ரூ.188 கோடி!அதனை வாங்க முடியாமல் தவிக்கும் பெண்..!

அமெரிக்காவில்,லாட்டரியில் ரூ.188 கோடி பரிசு விழுந்தும் அதனை பெற முடியாமல் பெண் ஒருவர் தவித்து வருகிறார். அமெரிக்காவின்,கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் ஒரு பெண்,அங்குள்ள ஒரு லாட்டரி கடையில் ‘சூப்பர் லோட்டோ பிளஸ்’ என்ற லாட்டரியினை வாங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து,அந்த பெண் வாங்கிய ‘சூப்பர் லோட்டோ பிளஸ்’ லாட்டரிக்கு கடந்த வியாழக்கிழமையன்று 26 மில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் ரூ.188 கோடி) பரிசுத் தொகை விழுந்தது. இதனையடுத்து,அப்பெண்ணுக்கு பரிசுத் தொகை பற்றிய விவரம் தெரிய வந்தது.எனவே,தான் வாங்கிய லாட்டரி சீட்டை … Read more