அடுத்த மாதம் நடக்கும் குவைத் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார் அமெரிக்க அதிபர்..!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் அடுத்த மாதம் தென் கொரியா மற்றும் ஜப்பான் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த மாதம் டோக்கியோவில் குவைத் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஜோ பைடன் கலந்துகொள்ள உள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. எனவே இவர்கள் இருவரும் இந்த மாநாட்டின் போது சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஜோ பைடன் மே 20 முதல் … Read more

குருநானக் ஜெயந்தி : அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து ..!

குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீக்கியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  சீக்கியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான குருநானக் ஜெயந்தியை நேற்று சீக்கியர்கள் கொண்டாடியுள்ளனர். சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவ் அவர்களின் 552 ஆவது பிறந்த தினமான குருநானக் ஜெயந்தி விழாவுக்காக  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் சீக்கியர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே குருநானக் கூறிய சமத்துவம், அமைதி … Read more

1.25 மணி நேரம் அமெரிக்க அதிபராக பதவி வகித்த கமலா ஹாரிஸ்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால், 1.25 மணி நேரம் அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ் பதவி வகித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக வாஷிங்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பொழுது அவருக்கு மயக்கவியல் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எனவே தான் சிகிச்சை பெறும் வரை தனது அதிபர் அதிகாரத்தை துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்களுக்கு வழங்கி ஜோ பைடன் உத்தரவிட்டார். இதனை அடுத்து அமெரிக்க அதிபர் ஜோ … Read more

ஐடா புயல் பாதிப்புகள் – நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அமெரிக்க அதிபர்!

அமெரிக்காவில் அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்திய ஐடா புயல் பாதிப்புகளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேரில் ஆய்வு செய்துள்ளார்.  அமெரிக்காவிலுள்ள லூசியானா மாகாண பகுதியை அதிகளவில் தாக்கிய ஐடா புயல் காரணமாக இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், இந்த ஐடா புயல் காரணமாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதியே இருளில் மூழ்கிய நிலையில் உள்ளது. இந்நிலையில், இன்று புயல் பாதித்த பகுதிகளை அமெரிக்க அதிபர் … Read more

“காபூல் குண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 70க்கும் மேலாக உயர்வு;மன்னிக்க மாட்டோம்” – அமெரிக்க அதிபர் ஜோ பைடென் அதிரடி..!

காபூல் குண்டுவெடிப்பை மறக்கமாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடென் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள மக்கள் பலர் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருக்கும் தங்கள் நாட்டு மக்கள் மற்றும் அங்கிருந்து வெளியேற விரும்பக்கூடிய மக்களை மீட்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இதற்கிடையில், நேற்று முதலில் விமான நிலையத்திற்கு வெளியே அபே கேட் அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. … Read more

50 கோடி கொரோனா தடுப்பூசிகளை அனுப்ப முடிவு – ஜோ பைடன்..!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 50 கோடி கொரோனா தடுப்பூசிகளை 92 நாடுகளுக்கு அனுப்ப உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் உள்ள நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் என 92 நாடுகளுக்கு 50 கோடி பைசர் கொரோனா தடுப்பூசியை வழங்கவிருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் ஆகஸ்ட் முதல் சுமார் 20 கோடி பைசர் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும், மீதமுள்ள 30 கோடி தடுப்பூசிகளை அடுத்த வருட முதல் … Read more

டிக் டாக், வீசாட் உள்ளிட்ட 8 செயலிகள் மீதுள்ள தடையை நீக்கிய ஜோ பைடன்..!

டிக் டாக், வீசாட் உள்ளிட்ட 8 செயலிகள் மீதுள்ள தடையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.  அமெரிக்காவில் டிக் டாக், வீ சாட் உள்ளிட்ட 8 செயலிகள் மீது முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், பயனாளர்களின் தகவல்களை திருடுவதாக குற்றம் சாட்டி பாதுகாப்பு கருதி தடை உத்தரவை பிறப்பித்திருந்தார். ஆனால் செயலிகள் தொடர்புடைய நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை பதிவு செய்தனர். இது தொடர்புடைய வழக்குகள் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், தற்போதைய அமெரிக்க … Read more

அமெரிக்கா இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

அமெரிக்கா தற்பொழுது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாக புதிதாக பொறுப்பேற்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த வருடம் விறுவிறுப்பாக நடைபெற்ற தேர்தலில் டிரம்ப் அவர்களை பின்னுக்குத் தள்ளி ஜோ பைடன் அவர்கள் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், கடந்த மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் பொறுப்பேற்றிருந்தார். இந்நிலையில் கொரோனா வைரஸின் வீரியத்தை குறைப்பதற்காகவும் அமெரிக்க மக்களை பாதுகாப்பதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், ஆன்லைன் … Read more

தலிபான் தலைவர்களை சந்திக்க வேண்டும் – அதிபர் டிரம்ப் விருப்பம்.!

தலைநகரான வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், தனிப்பட்ட முறையில் தலிபான் தலைவர்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் அமெரிக்கா – தலிபான் அமைதி ஒப்பந்தம் குறித்த விமர்சனங்களை நிராகரித்தார். போரால் அனைவரும் சோர்வடைந்துவிட்டதால் மீண்டும் போர் தொடங்க வாய்ப்பு இல்லை என்றும் தலிபான்களுடனான பேச்சுவார்த்தை நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறினார்.